Published:Updated:

கிரிக்கெட்டைத் தொடர்ந்து கோலிவுட் ஹீரோவாகச் சுழலும் ஹர்பஜன்!

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து 'பிரண்ட்ஷிப்' படத்தில் ஹீரோவாகவும் கலக்கவிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், `பிரண்ட்ஷிப்' படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவது இதுதான் முதல்முறை.

பிரண்ட்ஷிப்
பிரண்ட்ஷிப்
ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஹர்பஜனின் தமிழ் ட்வீட்டுகளுக்கு, இங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் சந்தானம் ஹீரோ, காமெடியன், வில்லன் என மூன்று வேடங்களில் நடிக்கும் `டிக்கிலோனா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன்மூலம் கோலிவுட்டில் நடிகராகவும் களமிறங்குகிறார் ஹர்பஜன். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து 'பிரண்ட்ஷிப்' படத்தில் ஹீரோவாகவும் கலக்கவிருக்கிறார் ஹர்பஜன்.

`அக்னிதேவி', `சென்னையில் ஒருநாள் 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்கள் ஜான்பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர், இந்தப் படத்தை இயக்கவுள்ளனர். இந்த வருடம் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு, இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

`திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்'
`திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்'
வெப் சீரிஸ்

மேலும், `ப்ளாக் ஷீப்' யூடியூப் சேனலின் வெப் சீரிஸில் திருவள்ளுவராக நடித்திருக்கிறார் பாஜி.`திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்' (TCS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை, `டியூட்' விக்கி இயக்க, `ப்ளாக்‌ ஷீப்' சேனலே தயாரிக்கிறது. பத்து எபிசோடுகளைக்கொண்ட `திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்', இந்த மாதம் ப்ளாக் ஷீப் யூடியூப் சேனலில் வெளியாகிறது.

ஹர்பஜன் சிங்கைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், `இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் `கோப்ரா' படத்தில் வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

அடுத்த கட்டுரைக்கு