சினிமா
பேட்டிகள்
Published:Updated:

கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!

இந்திரஜா சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திரஜா சங்கர்

ஷூட்டிங் நடக்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறோம்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்க விட்டுட்டாங்க.

பிகிலில் கால்பந்தாட்டத்தில் அடித்து ஆடி அப்ளாஸ் அள்ளிய ‘பாண்டியம்மா' இந்திரஜா சங்கர், ‘சர்வைவர்' கேம் ஷோவிலிருந்து எலிமினேட் ஆகித் திரும்பியிருக்கிறார்.

‘‘ஒரு கோடியோடு வருவீங்கன்னு பார்த்தா, போன வேகத்துல திரும்பி வந்துட்டீங்களே'’ எனப் பேச்சைத் தொடங்கினேன்.

‘‘ஒரு புது அனுபவம் கிடைக்கும்னுதான் வீட்டுல இருந்து அனுப்பி வச்சாங்க. முதல் தடவையா வீட்டை விட்டு சில நாள் தனியா, அதுவும் கடல் கடந்து தங்கி இருந்ததே புது அனுபவம்தானே'’ என்றவரிடம் “கால் வலின்னு டாஸ்குகள்ல இருந்து பின்வாங்கினதாலதான் இவ்ளோ சீக்கிரத்துல எலிமினேட் ஆகிட்டதா சொல்றாங்களே?” என்றேன்.

கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!

‘‘நிகழ்ச்சிக்காக சென்னையில இருந்து ஃபிளைட் ஏறி ஜான்சிபார் தீவுக்குப் போய் இறங்கின முதல் நாளே ஷூட்டிங் நடக்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறோம்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்க விட்டுட்டாங்க. அதனால எனக்குக் கால்வலி வந்தது நிஜம்தான். அதுக்காக டாஸ்க்கை செய்யாம இல்லை. சீக்கிரமே எலிமினேட் ஆகித் திரும்பினதுக்குக் கால்வலிக்கும் சின்னப் பங்கு இருக்கு, அவ்ளோதான்.

விக்ராந்த், சிருஷ்டி ரெண்டு பேர் கூடவும் நல்லா ஜெல் ஆக முடிஞ்சது. காயத்ரிகூட எனக்கு செட் ஆகலை. விஜயலெட்சுமி அக்காவை நல்லவங்கன்னு நினைச்சிட்டிருக்கேன். ஆனா அவங்க ஒரு இடத்துல ‘ஃபிஸிக்கலா வீக்கா இருக்கறதால இந்திரஜா டாஸ்க்கை ஒழுங்காச் செய்யலை'ன்னு சொல்லியிருக்காங்க. அவங்க வெளியில வந்ததும் இதுபத்திக் கேக்கணும்னு இருக்கேன்.

கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!

ஜான்சிபார் தீவுல மொட்டை வெயில்ல இருந்தோம். சுமார் ரெண்டு வாரமே தங்கியிருந்தேன் நான். அதுக்கே அந்தச் சூழல், தண்ணீரெல்லாம் செட் ஆகாம எனக்கு முடி கொட்டிடுச்சு. ஒருநாள், தங்கியிருந்த இடத்துக்கு ரொம்பப் பக்கத்துல கருநாகப் பாம்பைப் பார்த்தேன். நிகழ்ச்சியில் 90 நாளும் தாக்குப் பிடிக்கிறவங்களுக்கு நிச்சயம் நிறைய ஸ்டேமினா வேணும். அதனால இந்த ஷோ பத்தி வர்ற விமர்சனங்களைக் கண்டுக்க வேண்டியதில்லை. கலந்துக்கிடறதே பெரிய ஒரு சாதனைதான்.’'