Published:Updated:

மீண்டும் இணையும் `இன்று நேற்று நாளை ' டீம்

ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செம்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார், தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இன்று நேற்று நாளை
இன்று நேற்று நாளை

ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான படம் 'இன்று நேற்று நாளை'. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம் ஆரம்பமாவதை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

இன்று நேற்றும் நாளை 2
இன்று நேற்றும் நாளை 2
சி.வி.குமார்

ஆர்யா, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் ரவிகுமார் இயக்கிய படம் 'இன்று நேற்று நாளை'. 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் இப்படத்தை இணைந்து தயாரித்தனர். படம் வெளியான பிறகு மக்களிடையே பாசிட்டிவாக பேசப்பட்டது. விஷ்ணு விஷாலின் கரியரிலும் இப்படம் அவருக்கு முக்கியமானதாக அமைந்தது. ஏ.வசந்த் ஒளிப்பதிவு அமைக்க, ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாக சி.வி.குமார் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி ரவிகுமாரின் இணை இயக்குநரான கார்த்திக் 'இன்று நேற்று நாளை 2'வை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு அமைக்க, ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் பற்றியும், மற்ற டெக்‌னிஷியன்கள் பற்றியும் விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.