Published:Updated:

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ரெடி!- தயாராகிறதா மாஸ் கமர்ஷியல் மசாலா?

சக்தி தமிழ்ச்செல்வன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார், ரஜினி. இதன் படப்பிடிப்பு மும்பையில் படுவேகமாக நடந்துவருகிறது.

ரஜினி
ரஜினி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். 'காலா', 'கபாலி', 'பேட்ட' படங்களைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'தர்பார்' நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் படுவேகமாக நடந்து வருகிறது.

ரஜினி
ரஜினி

பொங்கல் ரிலீஸாக வரவிருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார், 'சிறுத்தை' சிவா. 'சிறுத்தை', 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' படங்களுக்குப் பிறகு, ரஜினியின் படத்தை சிவா இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே  இயக்குநர் 'சிறுத்தை' சிவாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார், ரஜினி. 'விஸ்வாசம்' படத்தைப் பார்த்து, படம் பிடித்திருந்ததால் இயக்குநர் சிவாவை அழைத்துப் பேசியிருந்ததாகத் தகவல் வந்தது. தந்தை - மகள் உறவைப் பற்றி பேசியுள்ள அந்தப் படம், மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது இயக்குநர் சிவாவைப் பாராட்டியுள்ளார், ரஜினி.

சிவா
சிவா

அந்தச் சமயத்தில், ரஜினிக்கான ஒரு கதையை சிவா கூறியதாகவும் அது, ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.