Published:Updated:

அழகு = திறமை = ஆலியா!

ஆலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
ஆலியா பட்

பிரிட்டிஷ் - இந்தியரான ஆலியா பட், இப்போது பாலிவுட்டில் பரவலாக விமர்சிக் கப்படும் நெப்போட்டிசத்தின் நீட்சிதான்.

அழகு = திறமை = ஆலியா!

பிரிட்டிஷ் - இந்தியரான ஆலியா பட், இப்போது பாலிவுட்டில் பரவலாக விமர்சிக் கப்படும் நெப்போட்டிசத்தின் நீட்சிதான்.

Published:Updated:
ஆலியா பட்
பிரீமியம் ஸ்டோரி
ஆலியா பட்

2014-ம் ஆண்டு, ‘காபி வித் கரண்’ ஷோ. அன்றைய நிகழ்ச்சியில் கரண் ஜோஹர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தில் நடித்த ஆலியா பட், வருண் தவான் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள். கரணின் வழக்கமான நையாண்டிகளுக்கு இடையே வருகிறது ‘ரேபிட் ஃபயர்’ சுற்று. கரண், “இந்தியாவின் ஜனாதிபதி யார்?” எனக் கேட்க, ஆலியா பட் அவசர அவசரமாக, “பிரித்விராஜ் சௌஹான்” என்று பதிலளித்துவிடுகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா மட்டுமே “பிரணாப் முகர்ஜி” என்று சரியான பதிலைச் சொல்கிறார்.

அவ்வளவுதான், இன்டர்நெட்டில் கலவரம் மூண்டது. தன் பதிலுக்காக ஆலியா சோஷியல் மீடியாவின் ட்ரோல் மெட்டீரியல் ஆனார். மீம்ஸ் எனும் ரத்த பூமி, ஆலியாவின் பிம்பத்தைக் காவு வாங்கியது. இனத்துவேஷமாகக் கருதப்படும் பழைய சர்தார்ஜி காமெடிகளில் எல்லாம் சர்தார்ஜிக்குப் பதில் ஆலியாவின் பெயர் சேர்க்கப்பட்டது. ஆலியாவுக்கு அப்போது 21 வயதுதான். ஆனால், அதற் குள்ளாகவே ‘ஹைவே’, ‘2 ஸ்டேட்ஸ்’ எனச் சிறப்பான படங்களைக் கொடுத்துத் தன் நடிப்புத் திறனை நிரூபித்திருந்தார். மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்த ஆலியாவுக்கு இது எத்தகையதொரு அவமானத்தையும் மன உளைச்சலையும் கொடுத்திருக்கும்? ஆனால், ஆலியா பட் என்ன செய்தார் தெரியுமா?

அழகு = திறமை = ஆலியா!
அழகு = திறமை = ஆலியா!
அழகு = திறமை = ஆலியா!

சில மாதங்களில், ‘ஆலியா பட்: ஜீனியஸ் ஆஃப் தி இயர்’ என்றொரு வீடியோ யூடியூபில் வெளியானது. அதில் ஆலியா பட், தன் பொது அறிவின்மையை சுய பகடி செய்திருந்தார். உடல் வலிமைக்காக ஜிம் போகிறவர்கள் போன்று தன் மூளை வலிமைக்காக ஆலியா பிரெய்ன் ஜிம் போவதுபோலவும், அதில் பயிற்சி பெற்று கரணின் ஷோவுக்கு மீண்டும் சென்று கடினமான அறிவியல் கேள்வி களுக்கும் பதில் அளிப்பது போலவும் அந்த வீடியோ விரிந்தது. அதுவரை ஆலியாவைக் கலாய்த்தவர் கள்கூட, அவரின் இந்த ஜாலி முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தனர். தன்மீது வீசப்பட்ட முட்டைகளையும் தக்காளிகளையும் ஆலியா, ஆம்லெட்டாக மாற்றியிருந்தார். அவரை இணையமும் மன்னித்து ஏற்றுக்கொண்டது. ஆலியா பட் ஒரு ஸ்டாராக உருமாறியது அந்த ஒற்றை வீடியோவால்தான்!

பிரிட்டிஷ் - இந்தியரான ஆலியா பட், இப்போது பாலிவுட்டில் பரவலாக விமர்சிக் கப்படும் நெப்போட்டிசத்தின் நீட்சிதான். இயக்குநர், தயாரிப்பாளர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்தானின் மகள்தான் ஆலியா. வாரிசு நடிகர்களைத் தொடர்ந்து களமிறக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனம்தான் ஆலியா பட்டையும் ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகம் செய்தது. சினிமா என்ட்ரிக்காக தன் பருமனான உடல் வாகை ஸ்லிம்மாக மாற்றினார் ஆலியா. முதல் படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் ஆலியாவின் நடிப்பு கவனம் பெற்றது. இரண்டாவது படமே முன்னணி இயக்குநரான இம்தியாஸ் அலி இயக்கிய ‘ஹைவே.’ ரோட் டிரிப் ஆள் கடத்தல் டிராமாவான இந்தப் படத்தில் வீராவாக ஆலியா செய்தது யாருமே எதிர்பார்க்காத பர்ஃபாமென்ஸ். இரண்டாவது படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஜூரி வழங்கும் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

எழுத்தாளர் சேட்டன் பகத்தின் நாவலான ‘2 ஸ்டேட்ஸ்’ காதல் கதை படமானது. அதில் அர்ஜுன் கபூரின் ஜோடியாகத் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பார் ஆலியா பட். இதில் பெற்ற கமர்ஷியல் வெற்றி, ஆலியாவுக்கு ‘ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா’ படத்திலும் தொடர்ந்தது. காமெடி டிராமாவான இந்தப் படத்தில் ஆலியா பட்டே பாடிய ‘சம்ஜவான்’ பாடலின் அன்ப்ளக்டு வெர்ஷன் வைரல் ஹிட்டானது.

அழகு = திறமை = ஆலியா!
அழகு = திறமை = ஆலியா!
அழகு = திறமை = ஆலியா!

அறிமுகமான நான்காவது வருடத்திலேயே ‘உட்தா பஞ்சாப்’ எனும் சீரியஸ் அரசியல் பேசும் படத்தில் பீகாரிலிருந்து பஞ்சாப் சென்ற புலம்பெயர் தொழிலாளியாக நடித்திருப்பார் ஆலியா பட். இரண்டாவது பிலிம்பேர் விருது ஆலியாவைத் தேடி வந்தது. அனுராக் காஷ்யப் தயாரிப்பில் அபிஷேக் இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் ‘ஆலியா வெறும் கமர்ஷியல் நடிகை இல்லை’ என்பதை உணர்த்தியது. மேக்கப் இன்றி, தளர்வான நடையுடன் அந்நிய பூமியில் வலம் வரும் ஆலியாவைப் பார்த்து பாலிவுட்டே பிரமித்துப்போனது.

லவ் பிரேக்கப்பான பெண்களுக்கு கைராவைத் தெரியாமல் இருக்காது. கைரா ‘டியர் ஜிந்தகி’ படத்தின் நாயகி. பிரேக்கப்பிலிருந்து மீண்டு வரும் மனநிலையை அவ்வளவு யதார்த்தமாக கைரா பாத்திரத்தில் பதிவு செய்திருப்பார் ஆலியா பட். மை கலைந்த கண், அழுதே வீங்கிய முகம் என்ற பரிமாணம் ஒருபுறம் என்றால், இரண்டாம் பாதியில் அதிலிருந்து மீண்டு வருபவராக அசத்தியிருப்பார் ஆலியா பட். ஷாருக்கானும் இந்தப் படத்தில் இவருடன் போட்டி போட்டு நடித்திருந்தாலும் ஜெயித்தது என்னவோ (அப்போது) 23 வயதேயான ஆலியா பட்தான்!

தொடர்ந்து, ‘ஹம்டி ஷர்மா மி துல்ஹனியா’வின் சீக்குவலாக உருவான ‘பத்ரிநாத் கி துல்ஹனியா’வும் அதிரி புதிரி ஹிட்டடிக்க, ஆலியா பட்டின் கரியர் கிராஃப் படு உச்சிக்குச் சென்றது. அவர் நினைத்திருந்தால் தொடர்ந்து இப்படி வியாபார ரீதியிலான படங்களிலேயே நடித்துத் தன் கரியரை இன்னமும் மெருகேற்றியி ருக்கலாம். ஆனால், ஆலியா செய்தது ‘ராஸி.’ ஒரு பெண்ணாக, மனைவியாக, பாகிஸ்தானில் உளவு பார்த்துக்கொண்டே, தன்னைக் காத்துக்கொள்ளக் கொலைகளும் செய்து குற்றவுணர்ச்சியில் தவிக்கும் செஹ்மத் கானாக ஆலியா பட்டின் மிகச்சிறந்த நடிப்பு இதில் வெளிப்பட்டிருக்கும். மூன்றாவது பிலிம்பேர் அவரைத் தேடி வந்தது. 2019-ல் வெளியான ‘கல்லி பாய்’ படத்தில் ஸ்கோர் செய்தது ரன்வீர் சிங்காக இருந்தாலும் அதில் பக்கபலமானதொரு நடிப்பை வழங்கி அதற்காகவும் ஒரு பிலிம்பேரைத் தட்டிச் சென்றார் ஆலியா.

அழகு = திறமை = ஆலியா!
அழகு = திறமை = ஆலியா!

பாலிவுட் ரசிகர்கள் பல ஆண்டுகளாக நெப்போட்டிசத்துக்கு எதிராக வாதாடினாலும் ரன்பீர் கபூரையும், ஆலியா பட்டையும் மட்டும் பெரிய அளவில் சீண்டாமல் இருந்தனர். அவர்களின் நடிப்புத் திறனுக்கு அதுவே ஒருவகை நற்சான்றிதழ் எனலாம். ஆனால், சுஷாந்தின் மரணத்தைத் தொடர்ந்து, ஆலியா பட் தன் தந்தை மகேஷ் பட் இயக்கத்திலேயே ‘சடக் 2’ என்னும் குடும்பப் படம் எடுத்துச் சொதப்பியது அவரின் மேல் விமர்சனப் பார்வையை விழ வைத்தது. குறிப்பாக, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்துக்கே தொடர்ந்து படங்கள் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டாரோ என்னவோ, சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் காமத்திபுராவின் வரலாற்றைப் பேசும் ‘கங்குபாய் கத்தியாவடி’ படத்திலும், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘RRR’ படத்திலும் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து தன் காதலனான ரன்பீர் கபூருடன் ‘பிரம்மாஸ்திரா’ என்ற பிரமாண்ட படைப்பிலும் நடித்து வருகிறார்.

சரி, முதல் பத்தியில் நாம் பார்த்த ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் இன்னொரு விருந்தினரான வருண் தவான் அந்தக் கேள்விக்குச் சொன்ன விடை என்ன தெரியுமா? மன்மோகன் சிங்! ஆனால், அப்போது பெரிய அளவில் ட்ரோல் மெட்டீரியல் ஆக்கப்பட்டது என்னவோ ஆலியா பட் மட்டுமே. இதுவே சொல்லும், சினிமாவில் பெண் கலைஞர்களின் நிலையைப் பற்றி! அதிலிருந்து மீண்டு வந்துதான் தற்போது தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆலியா பட். அந்தத் தன்னம்பிக்கைதான் அவரின் கரியர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்!