Published:Updated:

``கமல் சார்க்கு பதில் நான் பிக்பாஸா இருந்தேன்னா..?'' - பார்த்திபன் தொடர் - 7

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் 7-வது பகுதி.

``கமல் சார்க்கு பதில் நான் பிக்பாஸா இருந்தேன்னா..?'' - பார்த்திபன் தொடர் - 7

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் 7-வது பகுதி.

Published:Updated:
பார்த்திபன்

''வாழ்க்கையில் பல பெண்களைக் கடந்து வந்திருப்பீர்கள். யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா, ஏன்?''

- ராஜேஷ், திருச்சி

''கடந்து வருவதே ஒரு அழகுதானே... நான் நாடகத்துக்கு நடிக்கப்போகும்போது 18, 20 வயசு. அங்க நிறைய பெண்கள் இருப்பாங்க. அப்ப வயசு, பருவம் எல்லாமே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஈர்ப்பு வருவதற்கான சூழலா இருந்துச்சு. ஆனா, நான் சபரிமலைக்கு மாலை போட்ட மாதிரி ஸ்ட்ராங்கா, வழிதவறிப்போயிடக் கூடாதுன்னு இருந்தேன். சின்னச் சின்ன சலனத்துக்குக்கூட ஆளாகிடக் கூடாதுன்னு நிறைய தவிர்த்திருக்கேன். அதனால நான் அப்ப மன்மதன்னுலாம் அர்த்தம் கிடையாது. அந்த வயசு, அந்தப் பருவத்தைச் சொல்றேன். இப்போ கடந்து வந்த அந்தத் தருணங்களைப் பார்த்தாவே அவ்ளோ அழகா இருக்கு. `ஒத்த செருப்பு' படத்துல ஒரு டயலாக் வரும். உறவுகள் இத்துப்போறதைவிட அத்துப்போறதே நல்லதுனு. சில உறவுகள் இருக்கும்போதே இல்லாமாப் போய்டும். சிலது இல்லாமப்போய் இருக்கும். உறவுகள் சில இரவுகளைக் கெடுக்கிற அளவுக்கு நீங்காம இன்னும் மனசுக்குள்ள இருக்கிறது உண்டு. இன்னும் கடக்காத பல தருணங்கள் இருக்கு. சினிமா மேல உள்ள காதலை மட்டும் நான் கடக்கவே விரும்பல.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''உங்க வாழ்க்கையிலே நீங்க பண்ணின மடத்தனமான செயல் மூன்றைச் சொல்லுங்கள்?'' - Geetha shanker, Chennai

''முதலாவது, முக்கியமானது நான் முதன்முதலா வாங்கின என் வீட்டைவிட்டு வெளியே வந்தது. அழகான அந்தப் பங்களா... நம்பர் 23, வீரப்ப நகர், ஆழ்வார் திருநகர். ரொம்ப செதுக்கி, செதுக்கி அழகா காதலோடு கட்டின ஒரு மாளிகை அது. 10 பைசாக்கு பிரயோஜனம் இல்லாத எமோஷன், சென்ட்டிமென்ட்னால அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தது நான் பண்ண முதல் மடத்தனம். இன்னமும் என்னால அதை ஈடு செய்ய முடியல. ரெண்டாவது ஒரு மாஸ் ஹீரோவா உருவாகியிருக்க வேண்டியவன். 'புதிய பாதை' வந்த பிறகு எல்லோரும் அப்படித்தான் எதிர்பார்த்தாங்க. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவா, நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணி, நிறைய சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, நான் பரீட்சார்த்த சினிமானு வேற பக்கம் போயிட்டேன். மூணாவது என் மூணு குழந்தைகளையும் ரொம்ப கஷ்டப்படுத்தினேன். பங்களாவைவிட்டு வெளியே வந்ததும், நான் கஷ்டப்பட்டேன்னு இல்ல, அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தினேன். 2 பெட்ரூம்கூட இல்லாத வீட்டுக்கு அவங்களைக் கூட்டிட்டுப்போய், அவங்க என்கூட இருக்கணும்கிறதுக்காகவே ரொம்ப சிரமப்படுத்தினேன். என்னோட கொழுப்பு, என்னுடைய சரியான திட்டமிடல் இல்லாமையால் அவங்களைக் கஷ்டப்படுத்தின வருத்தம் இன்னமும் இருக்கு. இது மூணாவது மடத்தனம்.''

பார்த்திபன்
பார்த்திபன்

'பிக்பாஸ்'ல அடுத்த சீஸன் கமல் சாருக்கு பதில் உங்களை பண்ண சொன்னா பண்ணுவீங்களா? அப்படிப் பண்ணா அதுல என்ன புதுமை இருக்கும்?

- P. Kathiravan, Korkai, kumbakonam

''எனக்கு கமல்சார்தான் பிக்பாஸ். அவருடைய மிகப்பெரிய ஃபேன் நான். கமல் சார் நடத்துற மாதிரி என்னால அவ்ளோ ஸ்டைலிஷா நடத்த முடியுமான்னு தெரியல. ஆனா, நான் பண்ணும்போது நிச்சயமா புதுமையா ஏதாவது பண்ணணும்னு நினைப்பேன். நான் வித்தியாசமான சிந்தனை உடையவன்றதால எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும்னு பலபேர், பலமுறை சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. பார்க்கலாம், உங்களின் எண்ணம் ஈடேறும்னு நினைக்கிறேன்.''

''உங்களுக்கும் யுவனுக்கும் என்ன பிரச்னை? ஏன் நீங்கள் இருவரும் இணைந்து அறிவிப்பு மட்டும் வருகிறது... ஆனால், படம் வர மாட்டேங்குது?

- Prabu Balagangadharan, Adirampattinam

ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7
ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7

''எனக்கும் எவனுக்குமே தகராறு கிடையாது. அப்படி இருக்கும்போது யுவனுக்கும் எனக்கும் மட்டும் எப்படித் தகராறு இருக்கும்? யுவன் என்னோட அன்பான சகோதரர். ராஜா சார் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் யுவனை ரொம்ப குட்டிப்பையனா பார்த்திருக்கேன். அவரோட முதல் படம் 'அரவிந்தன்' முடிஞ்சவுடனே ஒருசில வாரங்கள்ல நாங்கள் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்ல ஒரு படம் பண்ணித்தரேன்னு சொல்லியிருந்தார். நிறைய பேசியிருக்கோம். ஆனா, எதுவுமே அறிவிப்பா வந்ததில்ல. என்னவோ காரணங்களால அதைத் தொடர முடியாமல் போயிடுது. என்னுடைய காதலுக்குரியவர். தனித்துவம் மிகுந்த ஒரு இசையமைப்பாளர். யுவன்கிட்ட இருக்க ஒரு ஸ்பெஷாலிட்டியே அந்த Rawnessதான். எல்லா காதலனுக்குமே பாடத்தெரியாது. ஆனா, அவன் பாடினா எப்படியிருக்கும்னு ஒரு Rawness அதுலயிருக்கும். நிச்சயம் யுவனோட சேர்ந்து ஒரு படம் பண்ணுவேன்.''

''ஏழை, அநாதைப் பற்றி படம் எடுப்பது ஏன்? நானும் ஒரு அநாதை. ஒரு அட்வைஸ் சொல்லுங்க?''

- சத்யன், பம்மல், சென்னை

''இன்று முதல் நீங்கள் அநாதை இல்லை. உங்களுக்கு ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ நான் இருக்கேன், இருப்பேன். எல்லோருமே கூட்டமா பிறக்கிறதில்லை. அதனால நீங்க அநாதைன்னு நினைக்காதீங்க. நானும் என்னோட உறவுன்னு நினைக்கிறதே என்னுடைய ரசிகர்களைத்தான். முன்னாள் அமைச்சர் காளிமுத்து சார், உங்க படங்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இல்லைன்னு சொல்லுவார். அவர் படங்களிலும் ஏழைகள், அநாதைகள், ஆதரவற்றோர்தான் கதையின் நாயகர்களா இருப்பாங்க. ஆனா, அவர் படங்கள்ல டீல் பண்ற விதம் வேற. நீங்க கொஞ்சம் போக்கிரித்தனமா அதே விஷயத்தைச் சொல்றீங்கன்னு சொன்னார். நான் வலிமையில்லாதவங்க பற்றி, வாய்ஸ் இல்லாதவங்கப் பற்றிப் பேசணும்னு நினைக்கிறேன்.''

பார்த்திபன்
பார்த்திபன்

''உங்களைப் போலவே திரைத்துறையில் ஒரு புதிய முகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி ஒரு முகம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

- பாலசுப்பிரமணி, புதுக்கோட்டை, இலுப்பூர்

''நான் புதுமுகமா நடிக்கும்போது வேற ஆப்ஷனே இல்லை, அதனாலதான் நான் நடிச்சேன். ஆனா, 'புதிய பாதை'யை இப்ப பண்ணலாம்னு நடிகர்களைத்தேடும்போது அப்ப எனக்குள்ள இருந்த அந்த வெறி, கண்கள்ல தெரிஞ்ச அந்த தீவிரத்தை நான் வேற யார்கிட்டயும் பார்க்கல. அப்ப, வேற வழியில்லாம நாமளே நடிச்சோம்னு நினைச்சது தப்புனு புரிஞ்சது. என்னை மாதிரி புதுமுகம்கிறது உருவத்தை வெச்சு யோசிக்கிறதில்லை. தீயா யோசிக்கிற புதுமுகங்கள். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துல நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தினேன். தொடர்ந்து பண்ணுவேன்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.