Published:Updated:

மணிரத்னம் : நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்' பற்றி டாப் 10 தகவல்கள்! #HBDManiRatnam

மணிரத்னம்

தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமையான இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தாள் இன்று. அவரைப்பற்றிய டாப் 10 சுவாரஸ்யங்கள் இங்கே!

மணிரத்னம் : நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்' பற்றி டாப் 10 தகவல்கள்! #HBDManiRatnam

தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமையான இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தாள் இன்று. அவரைப்பற்றிய டாப் 10 சுவாரஸ்யங்கள் இங்கே!

Published:Updated:
மணிரத்னம்

1. உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது. மிகப் பெரிய கௌரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது, அதைத் தடுத்தவர் மணிரத்னம்.

2. தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி விருந்து அளிப்பார். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு. கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3. மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். சாருஹாசன் வீட்டு மாப்ளே, மதுரைக்காரர். தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக்ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளிவிடுகிற இயல்புடையவர்! கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக்கும்.

மணிரத்னம், மனைவி சுஹாசினியுடன்!
மணிரத்னம், மனைவி சுஹாசினியுடன்!

4. முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும். தன் படம் ரிலீஸாகும் தினத்தன்று நிதானமாக அன்றைக்குள் அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிடுவார்.

5. நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் '16 வயதினிலே' படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!

6. படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!

மணிரத்னம்
மணிரத்னம்

7. தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக்கொள்ளச் சொல்வார்.

8. பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!

9. மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. 'தளபதி' படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது 'இருவர்'. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார். நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!


10. மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். தனிமை விரும்பி. அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள். மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism