கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித்

படங்கள்: ஜி.வெங்கட்ராம், கிரண்சா, ராபர்ட்

 பைக் ரைடுமீது தீராதக் காதல்கொண்டிருக்கும் நடிகர் அஜித், தற்போது கிடைத்திருக்கும் லாக்டெளன் விடுமுறையில் தன் நண்பரோடு சேர்ந்து பைக்கில் ஒடிசா வரை சென்று வந்திருக்கிறார்.

 நாவலைப் படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டும் இயக்குநர் வெற்றிமாறனின் காரில் எப்போதும் புத்தகங்கள் நிறைந்திருக்கும். பிரேக் நேரத்தில் ரெண்டு பக்கமாவது புரட்டிவிடுவார். கார், பைக்மீது அதிக ஆர்வம் கொண்ட வெற்றிமாறன், பெரும்பாலும் செல்ப் ட்ரைவ் செய்யும் பழக்கம் கொண்டவர். நாட்டு நாய் வளர்ப்பிலும் ஆர்வம் உண்டு. இவரது ஆபீஸுக்குள் நுழைந்தால்் நம்மை வரவேற்பது அவர்்கள்தான். தெருவில் போர் போடும் குழியில் மாட்டிக்கொண்ட மூன்று நாய்க் குட்டிகளைக் கயிறு கொண்டு காப்பாற்றியிருக்கிறார் வெற்றி.

 கொரோனாவால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு படிப்படியாகப் படப்பிடிப்்புகள் தொடங்கியிருக்கின்றன. நயன்தாரா நடிக்கும் `நெற்றிக்கண்' படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மாஸ்க், சானிட்டைசர் சகிதம் வரும் நயன்தாரா ஸ்பாட்டில் இருக்கும் மற்றவர்களையும் விதிமுறைகளை பாலோ செய்யும்படி வலியுறுத்துகிறாராம்.

 போட்டோஷூட் நடத்தி சினிமாவில் வாய்ப்பு தேடுவதுதான் இப்போதைய டிரெண்ட். இந்த விஷயத்தில் ப்ரியா பவானிசங்கர் வித்தியாசமானவர். இவருக்கு போட்டோஷூட் என்றால் அலர்ஜியாம். தனக்கு மிகவும் கம்பர்ட்டான போட்டோகிராபரிடம் மட்டுமே போட்டோ எடுத்துக்கொள்வாராம் பவானி.

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

 தன்னுடைய பிறந்தநாளன்று 'பிசாசு 2' படத்தின் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, ஸ்கிரிப்ட் பணிக்காக ஊட்டிக்குக் கிளம்பிவிட்டார் மிஷ்கின். லாக்டெளன் காலத்தில், ஒளிப்பதிவாளர் செழியனின் மனைவி பிரேமாவின் புத்தகத்தைப் படித்து பியானோ வாசிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

 ஆன்மிகத்தில் தீவிர நாட்டம் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், பேசும் போது அடிக்கடி `இன்ஷா அல்லாஹ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்.

 பப்ளியாக இருந்த ஹன்சிகா ஒர்க்் அவுட் பண்ணி எடையைக் குறைத்திருக்கிறார். இந்த லாக்டெளன் விடுமுறையில் ஒரு யூடியூப் சேனலையும் ஆரம்பித்துவிட்டார். எப்போதும் துருதுருவென்று இருக்கும் ஹன்சிகா, தன் ஹேண்ட்பேக்கில் குறைந்தது ஐந்து பெர்ப்பியூம் பாட்டில்களை வைத்திருப்பராம்.

 நடிகர் விஜய் சேதுபதி தமிழில் கையெழுத்திடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நண்பர்களுக்கும் அதையே பரிந்துரைக்கிறார்.

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

 புது மாப்பிள்ளை யோகி பாபு தீவிரமான முருக பக்தர். இவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை எப்போதும் முருகனே அலங்கரிக்கிறார்்.

 நியூ நார்மல் லைப்பை வெற்றிகரமாக ஆரம்பித்து விட்டார் ஸ்ருதிஹாசன். தற்போது `லாபம்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பாக இருக்கிறார். ஸ்ருதி தமிழில் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தை `ஐயோ', `amazing.' ஸ்ருதியை இமிடேட் பண்ணும் தோழிகள் இந்த வார்த்தையை வைத்துதான் ஸ்ருதியைக் கலாய்ப்பார்களாம்.

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!
சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

 வெற்றிமாறன்-தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எந்த அளவுக்கென்றால் வெற்றியின் மேனரிசம் தனுஷைத் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு. அடிக்கடி தன்னுடைய தாடியைத் தடவியபடியே யோசிப்பது வெற்றியின் மேனரிசம். அது அப்படியே தனுஷிடமும் ஒட்டிக்கொண்டுவிட்டது.

 தோனியின் தீவிர ரசிகர் அனிருத். ஐ.பி.எல்லில் சிஎஸ்கே விளைாயாடும்போது, எந்த வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு மஞ்சள் கலர் டீ சர்ட் அணிந்து டிவி முன் உட்கார்ந்துவிடுவார். தோனியின் பேட்டிங் போது மனிதர் விசிலடித்து செலிபிரேட் செய்வாராம்.

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

 தோனியின் தீவிர ரசிகர் அனிருத். ஐ.பி.எல்லில் சிஎஸ்கே விளைாயாடும்போது, எந்த வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு மஞ்சள் கலர் டீ சர்ட் அணிந்து டிவி முன் உட்கார்ந்துவிடுவார். தோனியின் பேட்டிங் போது மனிதர் விசிலடித்து செலிபிரேட் செய்வாராம்.

நடிகர் விஜய்யின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவின் பக்கத்து வீட்டுக்காரர் கீர்த்தி சுரேஷ். போர் அடிக்கும் நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் சஞ்சீவ் வீட்டு குட்டீஸுடன் கேம் விளையாடுவாராம் கீர்த்தி.

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

 ஒன்பதாவது படிக்கும் போதே ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார் நடிகர் துருவ். விக்ரம் மாதிரியே பிட்னஸ் மேல் இவருக்கும் தீராத காதல் உண்டு. தவிர, பியானோவும் நன்றாக வாசிப்பார்.

 மணிரத்தினத்தின் பேவரைட் இயக்குநர் கே.பாலசந்தர். மணிரத்தினத்தின் மொபைல் வால்பேப்பரில் கே.பி.யின் பிளாக் அண்ட் போட்டோதான் எப்போதும் இருக்கும்.

 தமிழில் இயக்குநர் ராம் மூலமாக சினிமாவுக்கு வந்தவர் அஞ்சலி. முதல் படமான `கற்றது தமிழி'ல் இவரது கேரக்டர் பெயர் ஆனந்தி. இன்று வரைக்கும் ராம் இவரை ஆனந்தி என்றுதான் அழைப்பார். வெளியில் செல்லும்போது யாராவது ஆனந்தி என்று கூப்பிட்டால் உடனே திரும்பிப் பார்த்துவிடுவார் நடிகை அஞ்சலி.z

சினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித்! - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்!

 ஒளிப்பதிவாளர் பி.சி.ராம் புதிதாக கேமராவோ லென்ஸோ வாங்கினால் முதலில் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களை வைத்து போட்டோ ஷூட் செய்த பிறகுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு செல்வாராம்.

 ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி பூஜையின்போது தங்கள் குழந்தைகளின் ஆசியர்களுக்கு தட்டு நிறைய பூ, பழம் வைத்து மரியாதை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சூர்யாவும் ஜோதிகாவும்.