கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விகடன்: கேங்ஸ்டர் கமல்!

கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்

சினிமா விகடன்

`கைதி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே விஜய்க்குக் கதை சொல்லி ஓகே செய்துவிட்டார், லோகேஷ் கனகராஜ். அதே போல், ‘மாஸ்டர்’ வெளியாவதற்கு முன்பே ரஜினிக்குக் கதை சொல்லி இம்ப்ரஸ் செய்துவிட்டார். அதை கமல் தயாரிப்பதாக இருந்தது. அந்த நிலை மாறி, கமலே அந்தக் கதையில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால், அதற்கு முன் ‘இந்தியன் 2’, ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்கள் கமல்ஹாசன் வசமிருக்கின்றனவே. `விக்ரம்’ படத்திற்கான வேலையை எப்போது ஆரம்பிப்பார் என்ற சந்தேகமும் இருந்துவந்தது. மற்ற இரு படங்களின் வேலைகள் தாமதமானதால் இந்த புராஜெக்டைக் கையிலெடுத்தார், கமல். 2021 தேர்தலுக்கு முன் இந்தப் படம் வெளியாகவேண்டும் என்பது டார்கெட். இது ஒரு கேங்ஸ்டர் கதை. தேனி பக்கம் ஷூட்டிங். நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன என்கிறார்கள்.

சினிமா விகடன்: கேங்ஸ்டர் கமல்!
சினிமா விகடன்: கேங்ஸ்டர் கமல்!
சினிமா விகடன்: கேங்ஸ்டர் கமல்!
சினிமா விகடன்: கேங்ஸ்டர் கமல்!
சினிமா விகடன்: கேங்ஸ்டர் கமல்!

தீபாவளி முடிந்ததும் இதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறது. லோகேஷின் வழக்கமான டீம்தான் இந்தப் படத்திற்கும். ‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சின்ன டீஸரையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு நாயகனை அவருடைய அதிதீவிர ரசிகனே இயக்கினால் எப்படி இருக்கும் என்பதற்கான பதில்தான் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ ப்ரித்விராஜின் ‘லூசிபர்’ ஆகிய இரண்டும். அப்படித்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படமும் இருக்கும்.