Published:Updated:

``படிக்கணும்; நடிக்கணும்; மதுரைக்குப் பெருமை சேர்க்கணும்!" - தேசிய விருது பெற்ற நாகவிஷால்

குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

``ரஜினி சார், தனுஷ் சாரை எல்லாம் அங்க பார்த்ததும், அவங்க எல்லாம் விருது வாங்கின அதே மேடையில நானும் வாங்கினதும்... இப்போ நினைச்சாலும் அவ்ளோ உற்சாகமா இருக்கு.'' - நாகவிஷால்

``படிக்கணும்; நடிக்கணும்; மதுரைக்குப் பெருமை சேர்க்கணும்!" - தேசிய விருது பெற்ற நாகவிஷால்

``ரஜினி சார், தனுஷ் சாரை எல்லாம் அங்க பார்த்ததும், அவங்க எல்லாம் விருது வாங்கின அதே மேடையில நானும் வாங்கினதும்... இப்போ நினைச்சாலும் அவ்ளோ உற்சாகமா இருக்கு.'' - நாகவிஷால்

Published:Updated:
குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

``படம் ரீலிஸானபோது கொஞ்ச பேர்தான் பாராட்டுனாங்க. இப்ப விருது வாங்குன பிறகு நிறைய பேர் பாராட்டுறாங்க, ரொம்ப சந்தோசமா இருக்கு" என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதுபெற்ற நாகவிஷால்.

நாக விஷால்
நாக விஷால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் நாகவிஷால், தற்போது 9 -ம் வகுப்புப் படித்து வருகிறார். பேராசிரியர் ராமசாமியுடன் இணைந்து 2019-ல் வெளியான `கே.டி என்ற கருப்புத்துரை' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அப்போது பரவலாகப் பாராட்டப்பட்டார். திரைப்படத்துறையில் எந்த அனுபவமும், அது சம்பந்தமான நபர்களின் பின்புலமும் இல்லாமல் யதார்த்தமாக நடித்துப் பேர் வாங்கிய நாகவிஷாலுக்கு கடந்த மார்ச் மாதம் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த தேசிய விருது விழாவில் விருது பெற்றுத் திரும்பியுள்ள நாகவிஷாலுக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்த மதுரை மக்கள், நேரிலும் தொலைபேசியிலும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். வாழ்த்து மழையில் நனைந்து வரும் நாகவிஷாலிடம் பேசினோம்.

கே.டி (எ) கருப்புதுரை படத்தில்
கே.டி (எ) கருப்புதுரை படத்தில்

``தேசிய விருது பெறும்போது எப்படி உணர்ந்தீங்க?"

``முதல்ல அறிவிப்பு வந்தபோதே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. விருதை நேர்ல வாங்கினபோது, அந்த சந்தோஷத்தை சொல்லத் தெரியல."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``படத்துல நடிச்சப்போ, விருது வாங்குவோம்னு நினைச்சீங்களா?"

``அப்படியெல்லாம் இல்ல சார். டைரக்டர் மதுமிதா மேடம் சொல்லிக் கொடுத்ததை செஞ்சேன். நல்லா நடிச்சா விருதெல்லாம் கொடுப்பாங்கனுகூடத் தெரியாது."

கே.டி (எ) கருப்புதுரை
கே.டி (எ) கருப்புதுரை

``இந்த அங்கீகாரம் கிடைத்ததற்கு யாரு காரணம்னு நினைக்கிறீங்க?"

``எங்க அம்மா தந்த சப்போர்ட், என் பள்ளி ஆசிரியர்கள், முக்கியமா நடிக்க வாய்ப்புக் கொடுத்த டைரக்டர் மதுமிதா மேடம் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் காரணம். எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.''

``தொடர்ந்து படத்துல நடிக்க விருப்பமா? படிக்க விருப்பமா?"

``படிக்கணும். அப்படியே வாய்ப்புக் கிடைக்கும்போது படத்துல நடிக்கணும். இன்னும் சிறப்பா நடிச்சு, மதுரைக்குப் பெருமை சேர்க்கணும்."

``விருது நிகழ்வுல, அங்க வந்திருந்த நம்ம நடிகர்கள் பாராட்டுனாங்களா?"

``ஆமா, நடிகர் பார்த்திபன் சார், விஜய சேதுபதி சார் வாழ்த்துனாங்க. மதுரை ஏர்போர்ட்ல கவிஞர் வைரமுத்து சார் ஆசி வழங்கி வாழ்த்தினாங்க. ரஜினி சார், தனுஷ் சாரை எல்லாம் அங்க பார்த்ததும், அவங்க எல்லாம் விருது வாங்கின அதே மேடையில நானும் வாங்கினதும்... இப்போ நினைச்சாலும் அவ்ளோ உற்சாகமா இருக்கு'' என்றார்.

அம்மாவுடன் நாக விஷால்
அம்மாவுடன் நாக விஷால்

நாகவிஷாலின் அம்மா மைதிலி, ``சினிமாவுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஸ்கூல்ல நாடகத்துல கூட நடிச்சதில்லை. `சினிமாவுல நடிக்க பசங்களைத் தேர்வு பண்றாங்க, உன் பையனை அனுப்பி வை'னு தெரிஞ்சவங்க திடீர்னு சொன்னதை வச்சு சும்மா அனுப்பி வைச்சேன். அதுல தேர்வாகிட்டான். படத்துல நடிக்க அவனுக்கு வாய்ப்பு கிடைச்சபோதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம் படம் வந்த பிறகு எல்லாரும் பாராட்டுனாங்க. விருது அறிவிச்சபோதும், இப்ப விருது வாங்கிட்டு வந்தபோதும் எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

எனக்கு நாலு பிள்ளைங்க. நாலாவதா பிறந்தவன் நாகவிஷால். கஷ்டமான வாழ்க்கைன்னாலும், நாகவிஷாலுக்கு கிடைச்ச பெருமை அதையெல்லாம் மறக்க வச்சிருச்சு. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தா இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்" என்றார்.

மக்களை மகிழ்விக்க மதுரையிலிருந்து மற்றொரு திரைக்கலைஞன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism