Published:Updated:

`` `மச்சான்... இப்படி வேணாம்டா'ன்னு அனுராக்கூட சண்டை போடுவேன்!’’ - நட்டி

``சும்மா வந்துட்டுப்போற படங்கள்ல நடிக்கிறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை. 120 ரூபாய் கொடுத்துப் படம் பார்க்கிறவங்க `இவனும் இப்படித்தான்'னு என்னை நினைச்சுடக்கூடாது. அதனாலதான் கொஞ்சம் காத்திருந்து படங்கள் பண்றேன்'' என்கிறார், நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி.

Natty Natarajan
Natty Natarajan

நிறைய மியூசிக் ஆல்பங்களுக்கு வேலை பார்த்திருக்கீங்க. அப்போ இருந்த நட்டிக்கும், இப்போ இருக்கிற நட்டிக்கும் என்ன வித்தியாசம்?

Natty Natarajan
Natty Natarajan

``பெரிய வித்தியாசம் இல்லை. எதையும் நான் கன்டென்ட்டா பார்ப்பேன். மியூசிக் ஆல்பம் பண்ண காலத்திலேயும் எந்த மாதிரியான விஷயங்களை அதில் கொடுக்கலாம்னு மட்டும்தான் பார்த்தேன். என் கற்பனைகளுக்கு எட்டிய எல்லாத்தையும் அதில் பண்ணியிருக்கேன். எல்லா மியூசிக் ஆல்பத்துக்குப் பின்னாடியும் ஒரு கான்செப்ட் வெச்சிருந்தேன். அதுல எனக்கொரு திருப்தி கிடைச்சிருக்கு."

கேமராமேனுக்கும், லைட்மேனுக்கும் இடையில் இருக்கிற உறவு பற்றிச் சொல்லுங்க?

``ஒரு மனிதனுக்கும், அவன் கண்ணுக்குமான தொடர்பு மாதிரிதான். கண் இல்லைன்னா பார்க்க முடியாது; லைட்மேன் இல்லைன்னா, ஒளிப்பதிவாளரால கேமராவை இயக்க முடியாது. ஒரு கதையைப் படிக்கிறப்போ அந்தப் படத்துக்குன்னு ஒரு லைட்டிங் பண்ணுவோம். அந்த லைட் பேட்டனில்தான் கேரக்டரை டிசைன் பண்ணுவோம். ஒரு விஷயத்தை எங்கே, எப்படிச் சொல்லணும்னு அதுக்கு ஏத்த மாதிரி சொல்லுவோம். என்கூட வொர்க் பண்ற லைட்மேன்ஸ் எல்லோரும் நான் சொல்றதுக்கும் மேலேதான் வொர்க் பண்ணுவாங்க. மரத்துமேலே லைட்டிங் கட்டுங்கன்னு சொன்னா, `பரவாயில்ல சார், நாங்க பிடிச்சுக்கிறோம்'னு சொல்வாங்க. 40 கிலோவா இருந்தாலும், அதை ஆடாம பிடிச்சுப்பாங்க. சினிமாவின் முதுகெலும்பு இவங்கதான். முதுகெலும்பு இல்லைன்னா, நிற்க முடியாது."

இந்திப் படங்களில் நிறைய வேலை பார்த்திருக்கீங்க. மொழிப் பிரச்னை இருந்திருக்கா?

Natty Natarajan
Natty Natarajan

``ஆரம்பகாலத்தில் இந்தி சரியா தெரியாது. என்கூட வேலை பார்த்தவங்ககிட்ட இங்கிலீஸ்ல பேசிப் புரியவெச்சுக்குவேன். ஆனா, அங்கே இருக்கிற மக்கள் மனநிலையைப் புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதனால, அதிகமா அங்கே இருக்கிறவங்கிட்ட பேசிப் பழகினேன். ஆறு மாசத்துல இந்தி சரளமா பேச ஆரம்பிச்சுட்டேன். பாலிவுட்டைப் பொறுத்தவரை கேமராமேன் சொல்றதை முகம் சுளிக்காம பண்ணுவாங்க. அங்கே மொழி ஒரு தடையா இல்லை."

எந்த சீக்வென்ஸ் காட்சிகளைப் படமாக்க உங்களுக்கு சவாலா இருக்கும்?

``எந்த மாதிரியான படங்கள் பண்றோம்ங்கிறதைப் பொருத்துதான் அது. ஆக்‌ஷன் படம் பண்ணா, என் மொத்தக் கவனமும் ஆக்‌ஷன் சீக்வென்ஸ்மேல இருக்கும். காதல் படமா இருந்தா, இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிப்பதிவு பண்ணுவேன். ஒவ்வொரு காட்சியும் நமக்கு சவாலான விஷயம்தான்!"

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கும் உங்களுக்கும் நெருக்கமான நட்பு உண்டு. எப்போதாவது சண்டைகள் வந்து சமாதானம் ஆகியிருக்கீங்களா?

Natty
Natty

"அனுராக்கிட்ட நிறைய உரிமைகள் எடுத்துக்குவேன். 'மச்சான் இப்படி வேணாம்டா'ன்னு சண்டை போடுவேன். அவர்னு இல்ல... எனக்கு நெருக்கமான எல்லோர்கிட்டேயும் இப்படித்தான் இருப்பேன். அனுராக் அவனோட படங்களில் என்ன வேணும், எதைச் சொல்லணும்ங்கிறதை முன்னாடியே தெளிவா சொல்லிடுவார்/ வக்கிர புத்தி கொண்ட ஒருத்தனுடைய மனநிலையைக் காட்டணும்னா, அவன் எந்த இடத்திலிருந்து எப்படி வந்திருப்பான் அப்படீங்கிறதைத் திரையில் காட்ட அதுக்கான கிரியேட்டிவ் நமக்கு இருந்தாலே போதும். அதையெல்லாம் அந்தக் கேரக்டரோட லுக்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் எங்ககிட்ட அனுராக் சொல்வார். முக்கியமா, அனுராக் மேனரிஸம் என்கிட்ட கொஞ்சம் எட்டிப்பார்க்கும். 'சதுரங்க வேட்டை' படத்துல நிறைய இடங்களில் அவரை மாதிரியே கைகளை ஆட்டிப் பேசியிருப்பேன். அனுராக்கைத் தெரிஞ்சவங்களுக்கு அது புரியும்."

'துப்பாக்கி' படத்துல 'வெண்ணிலவே' பாட்டுக்கு மட்டும் ஒளிப்பதிவு பண்ணியிருந்தீங்களே?

"எப்போவுமே முருகதாஸ் சார் படம் பண்றப்போ ஒளிப்பதிவுக்காக என்கிட்ட பேசுவார். 'ரமணா' படத்திலிருந்தே அப்படித்தான். 'துப்பாக்கி' பட சமயத்துல சந்தோஷ் சிவன் சாருக்கு கால்ஷீட் பிரச்னை இருந்ததால, படத்துல எல்லா பாடலுக்கும் என்னை ஒளிப்பதிவு பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. எனக்கு அப்போ 'ராஞ்சனா' பட வேலைகள் இருந்ததால, 'வெண்ணிலவே' பாட்டுக்கு மட்டும் ஒளிப்பதிவு பண்ணிக் கொடுத்தேன்."

``தயாரிப்பாளர் எடிட் பண்ணிட்டார்; அதைக் கேட்குற உரிமை எனக்குக் கிடையாது..!’’ - நட்டி

தமிழிலிருந்து பலரும் பாலிவுட்டுக்குப் போறாங்க. அவங்களுக்கு அங்கே ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?

"கொண்டாடுவாங்க! எல்லா விஷயங்களுக்கும் தமிழ் சினிமா முன்னோடியா இருந்திருக்கு. பாலசந்தர், ஶ்ரீதர், பாரதிராஜா படங்கள் எல்லாமே பிறமொழி சினிமாவுக்கு முன்னோடிதான். எல்லா புதுமையும் இங்கே இருந்துதான் தொடங்கியிருக்கு. நாம தைரியமா எடுத்துவைக்கிற அடி அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. வடஇந்தியாவுக்குப் போனா, அங்கே இருக்கிறவங்களுக்குத்தான் முக்கியத்துவம்னு எதுவும் இல்லை. திறமை இருந்தா, கண்டிப்பா மதிப்பாங்க, ஆதரவும் தருவாங்க."

'சதுரங்க வேட்டை' காந்தி பாபு கேரக்டர் பற்றி?

" 'ரிச்சி' பட ஷூட்டிங்கிற்காக திருநெல்வேலி போயிருந்தேன். அப்போ ஒருத்தர் என்னைச் சுத்தி சுத்தி வந்தார். 'இவர் ஏன் இப்படிப் பார்க்கிறார்'ன்னு யோசனையா இருந்தது. கையில் ஒரு புத்தகம் வெச்சிருந்தார். அதுல 'சதுரங்க வேட்டை' பற்றிய விஷயங்கள் இருந்தது. என் பக்கத்துல வந்து, 'எங்க பொழைப்பைக் கெடுத்துட்டீங்களே'ன்னு சொல்லிட்டுப் போனார். என்னைப் பொறுத்தவரை 'சதுரங்க வேட்டை' விழிப்புணர்வு படம். இந்தப் படம் ஹிட்டாகும்னு தெரியும். ஆனா, பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும்னு ரிலீஸுக்குப் பிறகுதான் தெரிஞ்சது. படத்துல வர்றமாதிரி பலபேர் ஏமாந்திருக்காங்க. அது இந்தப் படத்துக்குப் பிறகு குறைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்."

Vikatan