சினிமா
Published:Updated:

“மாஸ்டர் டீஸர் ரெடி... நான்தான் மிஸ் பண்ணிட்டேன்!”

சாந்தனு
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தனு

படம்: அருண்டைட்டன்

விஜய்யுடன் ‘மாஸ்டர்’, விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ‘இராவண கோட்டம்’, லாக்டெளன் ஸ்பெஷலாக கெளதம் மேனனுடன் ஒரு பாடல் என சாந்தனு கரியரின் முக்கியக் கட்டம் இது. ‘ஒரு சான்ஸ் கொடு பொண்ணே’ பாடல் ஷூட் முதல் விஜய்ணா உடனான ‘மாஸ்டர்’ டான்ஸ் வரை பல விஷயங்கள் அவரிடம் பேசினேன்.

‘`லாக்டெளன்ல முதல் ரெண்டு மாசம் ரொம்ப வெட்டி. சாப்பாடு, தூக்கம். அவ்ளோதான்... அப்புறம் கொஞ்சம் டிக்டாக். ஷார்ட் பிலிம்னு நாள்கள் இன்ட்ரஸ்ட்டிங்கா நகருது.’’

‘`கெளதம்மேனனின் லாக்டெளன் புராஜெக்ட்டுக்குள் நீங்க எப்படி வந்தீங்க?’’

‘`ஒரு நாள் நைட் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் போன் பண்ணி இந்தப் பாடல் ஐடியா பற்றிச் சொன்னார். ‘நிச்சயமாப் பண்ணலாம்’னு சொன்னேன். அடுத்தநாள் நான், சதீஷ், கலையரசன்னு மூணு பேரும் கெளதம் சார் வீட்டுக்குப் போய் அவரைச் சந்திச்சு அரைமணிநேரம் பேசினோம். ரெண்டு நாளில் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. கெளதம் சாரோட டயலாக் டெலிவரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அதை ஃபாலோ பண்ணத்தான் முதல்ல கஷ்டமா இருந்தது. அவரோட ஸ்டைல் புரிஞ்சிக்கிட்டு அப்புறம் பேசினேன். அவர் டைரக்‌ஷன்ல ஒரு படத்துலயாவது நடிக்கணும்னு ஆசையிருக்கு. பார்ப்போம்.’’

சாந்தனு
சாந்தனு

‘`லாக்டெளன்ல யூடியூப் சேனல் தொடங்குற ஐடியா எப்படி வந்தது?’’

‘`யூடியூப் சேனல் ஆரம்பிக்கணும்கிறது கிகி-யோட ரொம்ப நாள் ஆசை. ‘லாக்டெளன்ல நீ பண்ணியே ஆகணும்’னு கிகி ரொம்பத் தொல்லை பண்ணி ஆரம்பிக்க வெச்சிட்டாங்க. இப்ப ஹாரர் ஜானர்ல ஒரு கதை எழுதிட்டிருக்கேன்.’’

‘` ‘மாஸ்டர்’ மேடையில விஜய்கூட டான்ஸ் ஆடி வைரல் ஆகிட்டீங்களே?’’

‘`ஷூட்டிங் அப்பவே ‘ஆடியோ லான்ச்ல நீங்க என்கூட ஒரே ஒரு ஸ்டெப் டான்ஸ் ஆடணும்’னு விஜய் அண்ணாகிட்ட கேட்டிருந்தேன். ‘ஆளா விடுடா சாமி... கூட்டத்தைப் பார்த்து டான்ஸ் ஆடுறப்போ டென்ஷன் ஆகிடுவேன். என்கிட்ட சொல்லாம திடீர்னு நீ கூப்பிட்டுறாத, கோபமாயிடுவேன்’னு சொல்லியிருந்தார். அப்படிச் சொன்ன விஜய் அண்ணா ஸ்டேஜ்ல ஆடுனதைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். விசில் அடிச்சுக் கொண்டாடிட்டு இருந்தேன். அப்போ, அநிருத்தையும் என்னையும் மேல வரச் சொன்னார். போலாமா வேண்டாமான்னு யோசிச்ச அநிருத்தை ‘வாய்யா போலாம்’னு கூட்டிட்டு ஸ்டேஜுக்குப் போயிட்டேன். அடுத்தநாள், ‘என்ன அண்ணா, இப்படிப் பண்ணிட்டீங்களே’ன்னு கேட்டேன். ‘ஏன்பா... ஆடியிருக்கக்கூடாதா’ன்னு கேட்டார். ‘ஐயோ...சூப்பர்ணா’னு சொன்னேன். ‘இன்னும் கொஞ்ச நேரம்கூட ஆடியிருக்கலாம்’னு சொன்னார்.’’

‘` ‘மாஸ்டர்’ டீஸர், ட்ரெய்லர் பார்த்தாச்சா?’’

‘`லோகேஷ் கனகராஜ் ஒருநாள் ஆபீஸுக்குக் கூப்பிட்டார். அப்போ, நான் ஷார்ட் பிலிம் எடிட் பண்ணிட்டிருந்ததால போக முடியல. அப்புறம்தான் டீஸர் பார்க்கக் கூப்பிட்டிருக்கார்னு தெரிஞ்சது. மிஸ் பண்ணிட்டோமேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினேன்.’’

‘`விக்ரம் சுகுமாரனின் ‘இராவண கோட்டம்’ படம் எப்படி வந்திட்டிருக்கு?’’

‘`ஒரு ஷெட்யூல் ஷூட் முடிச்சாச்சு. செகண்ட் ஷெட்யூல் ஜனவரில ராமநாதபுரத்துல தொடங்க இருந்தோம். அப்போ, திடீர்னு பெரிய மழை வந்திருச்சு. அதனால, திரும்பவும் ஷூட்டிங் தள்ளிப் போச்சு. எல்லாம் சரியாகி ஷூட்டிங் தொடங்கலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ லாக்டெளன் வந்திருச்சு. பார்ப்போம்.’’

‘`சிம்புதேவனின் ‘கசடதபற’ படம் எப்படி வந்திருக்கு?’’

‘`படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு ரிலீஸூக்கு ரெடியா இருக்கு. நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கல. ஆனா, ஓடிடி ரிலீஸ் அல்லது தியேட்டர் ரிலீஸ்னு எதுல பண்ணுனாலும் பெரிய வரவேற்பு இருக்கும். படத்தோட களமும் கதையும் செம சுவாரஸ்யமா இருக்கும்.’’