Published:Updated:

`` `காவியத்தலைவ'னுக்குப் பிறகு வசந்தபாலன் படம் ரிலீஸாகாதது சினிமாவுக்கு அவமானம்..!'' - சித்தார்த்

Siddharth
Siddharth

`காவியத் தலைவன்' மாதிரியான படம், தொலைஞ்சு போகாம நிக்கணும்ங்கிறதுதான் என்னோட வேண்டுதல். எந்த நோக்கத்துடன் ஒரு படத்தை எடுக்குறமோ அந்த நோக்கத்தை படம் அடையாம விட்டுட்டா கண்டிப்பா வருத்தம் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`` `சிவப்பு மஞ்சள் பச்சை' படத்துல கமிட்டானப்போ, இதுதவிர மூணு படங்களில் நடிச்சிட்டிருந்தேன். `டிராபிக் போலீஸ் கேரக்டருக்கு மீசை வைக்கணும்'னு சசி என்கிட்ட சொன்னார். `என்னால கண்டிப்பா மீசை வளர்க்க முடியாது. ஏன்னா, மத்த படங்களின் ஷாட்ஸ் அடிவாங்கும். மீசை இல்லாமலே போலீஸ் கேரக்டரில் கச்சிதமா பொருத்திக் காட்டுறேன்'னு சொல்லியிருந்தேன். முதல் நாள் ஷூட்டிங்கின் போது, யூனிஃபார்ம் போட்டு ஒரு ஷாட் நடிச்சி முடிச்சிட்டேன். அன்னைக்கு முழுநாளும் அவர் எதுவும் சொல்லல. அன்னைக்கு இரவு சசி சார்கிட்ட போய், `மீசை இல்லாமல் இருந்தது உங்களுக்கு ஏதாவது குறையா இருந்துச்சா'னு கேட்டேன். `என் மைண்ட்டுக்கு மீசை இல்லைங்கிற விஷயமே தோணலை'னு சொன்னார். இது பெரிய சந்தோஷத்தை எனக்குக் கொடுத்துச்சு'' எனப் பேச ஆரம்பித்தார், நடிகர் சித்தார்த்.

`காவியத் தலைவன்' சரியா போகாததில் உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கா?

Kaaviya Thalaivan
Kaaviya Thalaivan

``ஒரு படம், சேர வேண்டிய இடத்துல போய் சேரலைனா அதில் வேலை பார்த்த எல்லாருடைய உழைப்பும் வீண் போனதா நினைச்சுக்குறாங்க. இந்தப் படம் என்னால மறக்கவே முடியாத அனுபவம். இதுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கலைதான். படம் வந்து மூணு வருஷத்துக்குப் பிறகு மாநில விருதை அரசாங்கம் கொடுத்துச்சு. இந்த விருதுக்கு அர்த்தமே இல்லனு நினைக்குறேன். இந்த விருது இன்னும் என் கைக்கு வரல. இந்த விருதுக்குச் சான்றிதழ், முத்திரை கொடுப்பாங்களானுகூட எனக்கு தெரியல. ஆனா, நான் ஜெயிச்சிருக்கேன்னு சிலர் சொன்னாங்க.

கலைக்காக நல்ல படத்தை எடுக்குறப்போ, நியாயப்படி பார்த்தா அந்தப் படம் நல்லா ஓடணும். அதே மாதிரி வரலாற்றில் இடம் பிடிக்கணும். `காவியத் தலைவன்' மாதிரியான படம், தொலைஞ்சு போகாம நிக்கணும்ங்கிறதுதான் என்னோட வேண்டுதல். எந்த நோக்கத்துடன் ஒரு படத்தை எடுக்குறமோ அந்த நோக்கத்தை படம் அடையாம விட்டுட்டா கண்டிப்பா வருத்தம் இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் எடுத்த படத்தை இன்னும் ரிலீஸ் பண்ணலைங்கிறது சினிமாவுக்கே ரொம்ப அவமானமான விஷயம். அவர் நிறைய படங்கள் எடுக்கணும். அவரை மாதிரியான நேர்மையான மனிதர் கையில் சினிமா இருந்தா இன்னும் ஆரோக்கியமா இருக்கும்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு தயாரிப்பாளரா, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கிப் போகுதுனு நினைக்குறீங்களா?

Siddharth
Siddharth

``மூணு படம் தயாரிச்ச ஒரு தயாரிப்பாளரா சொல்றேன், இன்னைக்கு தமிழ்ப் படத்தை தயாரிச்சு ரிலீஸ் பண்றது மரண வேதனை. இது ஆரோக்கியமான சூழல் கிடையாது. எதுவுமே இங்கே சரியா போகல. நாட்டுல ஒரு விஷயம் நல்லா நடக்கலைனு சொன்னா, நம்மை ஆன்டி இந்தியன்னு சொல்ற மாதிரி, சினிமாத்துறையில் ஒரு விஷயம் நடக்கலைனு சொன்னா ஆன்டி சினிமாக்காரன்னு சொல்லிடப் போறாங்கனு பயமா இருக்கு. சினிமா மேலே இருக்கிற அக்கறையில்தான் இதைச் சொல்றேன். நிறைய அரசியல், குறைகள் இருக்கு. பெரியவங்க சேர்ந்து தீர்த்து வைச்சா, எங்களை மாதிரி இளம், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியா இருக்கும்.

உண்மையைச் சொல்லணும்னா, தயாரிப்பாளர்தான் ஒரிஜினல் சினிமா. அந்தத் தயாரிப்பாளருக்குப் பலன் கிடைக்காம போறதுக்குப் பல காரணமிருக்கு. எல்லா காரணமும் இப்போ ஒரே நேரத்துல வந்து, சினிமாத்துறையை ஆட்டிப் படைக்குது. மூணு படம் நல்லா ஓடுச்சுன்னா, இங்கே எல்லாமும் சரியா, நல்லாயிருக்குனு அர்த்தம் இல்லை. அப்படிச் சொல்றவங்களுக்கு சினிமாத்துறை பத்தி எதுவுமே தெரியலைனுதான் சொல்லுவேன். ஓடுற ஒரு படத்துக்கு முன்னாடி ஓடாத, ரிலீஸாகாத படங்கள் நிறைய இருக்கு. சினிமாத்துறைக்கு ஒரு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவங்களுடைய வொர்க்கிங் சிஸ்டம், ஸ்டைலை கண்டிப்பா மாத்தணும். எல்லாரும் சேர்ந்து விவாதிச்சு நல்ல முடிவுக்கு வரணும்.''

திரையில் நீங்க எடுக்குற புதுமுயற்சியை மக்கள் ஏத்துக்க கொஞ்சம் டைம் ஆகுதுனு நினைக்குறீங்களா?

Siddharth
Siddharth

``மக்கள் புதுமுயற்சியை ஏத்துக்கிட்டாங்களா, இல்லையாங்கிறது காசு போடுற தயாரிப்பாளருக்குதான் தெரியும். ஏன்னா, ரிலீஸின் போது அவங்களுக்குத் தெரிய வந்திடும். அதுக்காக, மக்கள் ஏத்துக்குற படத்தை நல்ல படம்னு சொல்ல முடியாது. ஏத்துக்காத படத்தை கெட்ட படங்கள்னு சொல்ல முடியாது. இன்னைக்கு தமிழ் சினிமா யோசிக்க வேண்டிய மிகமுக்கியமான விஷயம் இது.

இத்தனை வருடத்துல தமிழ் சினிமா நமக்கு எத்தனையோ நல்ல படங்களை கொடுத்திருக்கு. கமர்ஷியல் படங்களையும் தாண்டி சிந்திக்குற, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற எத்தனையோ படங்களைக் கொடுத்திருக்கு. நிஜ வாழ்க்கையில் நடந்த கதைகளையும் காட்டியிருக்கு. இதெல்லாம் சேர்ந்ததுதான் தமிழ் சினிமா. வெறும் கமர்ஷியல் படங்களை மட்டுமே சினிமா கொடுத்ததில்லை. ஆனா, இங்கே எல்லாமே தற்காலிகம்தான். எல்லாமே இங்கே மாறும். தொழில்நுட்ப ரீதியா நிறைய அட்வான்ஸ் விஷயங்கள் நம்ம தமிழ் சினிமாவுல நடந்திருக்கு. ஆனா, நம்ம போக வேண்டிய தூரங்கள் இன்னும் நிறைய இருக்கு. இங்கே இருக்கிற எல்லாருக்கும் நல்லது நடக்கணும்.''

இன்னும் பல கேள்விகளுக்கு, சுவாரஸ்யமான பதில்களை, இன்று வெளியான`ஆனந்தவிகடன்’ இதழில் பேசியிருக்கிறார், நடிகர் சித்தார்த்.

“சாக்லேட் பாய் என்றால் கூச்சம்!”
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு