Published:Updated:

"இந்த சந்தோஷத்தை இழந்துடக்கூடாது!”

விஷ்ணு விஷால்
பிரீமியம் ஸ்டோரி
விஷ்ணு விஷால்

விபத்துக்கு முன்னாடி வரைக்கும் ஓரளவுக்கு உடல் எடை மெயின்டெயின் பண்ணினேன்.

"இந்த சந்தோஷத்தை இழந்துடக்கூடாது!”

விபத்துக்கு முன்னாடி வரைக்கும் ஓரளவுக்கு உடல் எடை மெயின்டெயின் பண்ணினேன்.

Published:Updated:
விஷ்ணு விஷால்
பிரீமியம் ஸ்டோரி
விஷ்ணு விஷால்

சினிமா உலகைப் பொறுத்தவரையில், பொதுவெளியில் தன்னுடைய பர்சனல் விஷயங்களைப் பிரபலங்கள் பேசுவதென்பது, அரிதினும் அரிதுதான். அதிலும் குறிப்பாக டிப்ரெஷன், ரிலேஷன்ஷிப் போன்றவற்றை யாரேனும் கேட்டுவிட்டால், தாமதிக்காமல் `ஸாரி ப்ளீஸ்’ எனச் சொல்பவர்கள் அதிகம். இப்படியானவர்களுக்கிடையில், `நான் இதைப் பேசியே தீர்வேன்’ எனச் சொல்லி, கடந்த வருடங்களில் தான் எதிர்கொண்டிருந்த மனதளவிலான பிரச்னைகள், விவாகரத்து, டிப்ரெஷன், போதைக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது என எல்லாவற்றையும் நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் விஷ்ணு விஷால்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``வீழ்ந்த கதை, மீண்ட கதை - சொல்லுங்க”

``அடிப்படையில நான் ரொம்ப பாசிட்டிவான ஆள். ஆனா கடந்த ரெண்டு வருஷமா (2017-19) நான் அப்படியில்ல. என்னோட அந்த நாள்களை, `நான் நானாகவே இல்லை’ன்னுதான் சொல்லணும். சரியா சொல்லணும்னா, 2017-ல, விவாகரத்து கிடைச்ச நாள் தொடங்கி, ரொம்ப நெகட்டிவான ஆளா மாறத்தொடங்கிட்டேன். தொழில் ரீதியாவும் அந்த நேரத்துல நிறைய பின்னடைவுங்கறதால, என்னோட மன அழுத்தம் அதிகமாகிட்டே போயிடுச்சு. இடையிடையில, பெரிய பெரிய இயக்குநர்களோட முக்கியமான சில புராஜெக்ட்களிலிருந்து விலகுற சூழல்... போதாக்குறைக்கு, ஒரு படப்பிடிப்புல விபத்தும் ஏற்பட்டுடுச்சு!

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

விபத்துக்கு முன்னாடி வரைக்கும் ஓரளவுக்கு உடல் எடை மெயின்டெயின் பண்ணினேன். அப்போ, 78 கிலோ எடை இருந்தேன். அடிபட்டுக் கீழே விழுந்தது, சிகிச்சை எடுத்துக்கிட்டப்போ 89 கிலோவானேன். அப்போதான், திடீர்னு ஒருநாள் `நான் இப்படியான ஆள் இல்லயே’ன்னு எனக்குள்ளயே ஒரு பொறி! `ச்ச, லைஃப்ல ரெண்டு வருஷத்தை வீணாக்கிட்டோமே’ன்னு மைண்ட்ல எங்கிருந்தோ ஒரு ஸ்பார்க். அந்த நிமிஷம், அந்த நொடி... இனி வரப்போற ஒரு நொடியைக்கூட வேஸ்ட் ஆக்கக்கூடாதுன்னு தீர்க்கமா ஒரு முடிவெடுத்தேன். அப்போ அங்க ஆரம்பிச்சதுதான் ஃபிட்னெஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் ட்ரீட்மென்ட் முடியும்போது, `இன்னும் ஆறு மாசத்துக்கு, வொர்க்-அவுட் எதும் பண்ணாதீங்கன்னு’ டாக்டர் சொல்லியிருந்தாங்க. ஆனா, என்ன ஆனாலும் பரவாயில்லன்னு, என்னோட ட்ரெயினர், டயட்டீஷியன் ஹரியைச் சந்திச்சேன். அவர்கிட்ட, என்னைப் பத்தின எல்லா விஷயத்தையும் சொன்னேன். அவரோட வழிகாட்டுதல்படி, ஃபுட் ப்ராக்டிஸ் - எக்ஸர்சைஸ் எல்லாம் செஞ்சேன். இப்போ 72 கிலோல ஃபிட்டா இருக்கேன்.”

“குடும்பத்துக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட பிரிவு - அதை நீங்க சரிசெஞ்சுகிட்டது பற்றி..?”

``விவாகரத்துக்குப் பிறகுதான், மனசளவுல ரொம்பவே உடைஞ்சு போனேன். விவாகரத்து ஆனப்போ, என் பையன் ரொம்பச் சின்னக்குழந்தை. பொறந்து, சில மாசம்தான் ஆகியிருந்துச்சு. அப்போவே எனக்கும் அவனுக்கும் தூரம் வந்துடுச்சுன்னதும், அதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன். அவனை அப்பப்போதான் பார்ப்பேன்ற வேதனை ஒருபக்கம், இந்தச் சின்ன வயசுல குழந்தையைப் பிரிஞ்சு இருக்கோமேன்ற வருத்தம் இன்னொரு பக்கம். இதனாலயே, அவனைப் பார்க்கும்போதெல்லாம், ஒடஞ்சுபோயிடுவேன். `நாம பண்ணுன ஒரு விஷயம், ஒரு முடிவு நம்மளைத் தாண்டி, நம்ம குழந்தையை பாதிக்குதே’ன்னு நினைச்சு நான் வருத்தப்படாத நாளே கிடையாது. விவாகரத்துக்கு அப்புறம், வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள், சவால்கள்.விளைவு, மேலும் மேலும் துவண்டுபோயிட்டே இருந்தேன்.

இது எல்லாமே எங்க வீட்டுக்கும் தெரியும். வீட்ல இருக்கவங்க, என்னைப் புரிஞ்சுகிட்டு, எனக்கேத்த மாதிரி பேசி என்னைத் தேற்றி விடப் பார்ப்பாங்க. ரொம்ப கவனமாதான் என்னை அணுகுவாங்க! அப்பாக்கும் அம்மாக்கும், `நம்ம மகன் இப்படி இருக்கானே’ன்னு கவலை. எனக்கோ, என்னால என் மகன் வாழ்க்கை கஷ்டமாகிடுச்சேன்னு கவலை. எல்லாம் இருந்தாலும், துவண்டு விழுந்ததுலேருந்து நான் எழவே இல்லை.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

ஒருகட்டத்துக்கு மேல, வீட்ல இருக்கிற எல்லாரும் என்னால ரொம்ப கஷ்டப்பட ஆரம்பிச்சுட்டாங்க. `டைம் கொடுங்க, நான் சரியாகறேன்’னு நான் சொல்லிட்டே இருப்பேன். அப்போதான் ஒருநாள், நான் இல்லாம குடும்பம் எவ்வளவு நொறுங்கிப்போயிருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். அப்பா ரிட்டையர் ஆனதுகூடத் தெரியாம, வீட்டுக்குள்ள நான் முடங்கின அந்த நாள்...அன்னைக்குத்தான் என் புத்திக்கு எல்லாமே உறச்சுது. நான் தடுமாறிட்டா, என் குடும்பம் எந்த அளவுக்கு உடையும்னு அன்னைக்குத்தான் கண்கூடாப் பார்த்தேன். என்னோட தடுமாற்றம் என் பையனோட வாழ்க்கையையும் பாதிக்கும்னு தெரிஞ்சுது. அப்போ... அந்த நிமிஷம்... இனிமே, இவங்க எல்லாரும் நம்மளால சந்தோஷம் மட்டும்தான் படணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு மொதல்ல, எனக்கு நான் சந்தோஷமா மாறணும்னு புரிஞ்சுகிட்டேன். என்னை நான் சந்தோஷப்படுத்த எடுத்த அந்த முயற்சியில, இப்போ ஜெயிக்கவும் செஞ்சுட்டேன்!”

``இரண்டு வருஷங்களுக்கு முன்னாடி இருந்த விஷ்ணு - இப்போதைய விஷ்ணு... நீங்களே உங்களை ஒப்பிட்டுச் சொல்லுங்க!”

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

``இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மனசளவுல, 20 வயசுப் பையன் மாதிரி ஒரு ஃபீல். அவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கு! காரணம், `நான் என் மனசுகிட்ட என்ன சொன்னாலும், அதை என் உடம்பு கேட்கும். என் உடம்புக்கு ஏத்த மாதிரி, என் மனசு வளைஞ்சு கொடுக்கும்’ன்றதுதான். என் மனசும் உடம்பும் நேர்கோட்டுல செயல்படறதை நினைச்சாலே, எனக்கு செம்ம ஹேப்பியா எனர்ஜிட்டிக்கா இருக்கு. என்னோட இத்தனை வருஷ வாழ்க்கையில, முதன்முறையா என்னைப் பார்த்தா எனக்கே சந்தோஷமாவும் பெருமை யாவும் இருக்குன்றதால இந்த சந்தோஷத்தை நான் இழக்கவேகூடாதுன்னு இருக்கேன்.

ட்ரெயினிங் தொடங்கு றதுக்கு முன்னாடி வரைக்கும், கட்டுப்பாடில்லாம சாப்பிடுற ஆள் நான். சோகம் வந்தா சாப்பிடுவாங்களே... அந்த மாதிரியான ஆள் நான்! டிப்ரெஷனும் இருந்ததால, சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். இப்போ... நினைச்சாகூட அப்படி சாப்பிடறதில்லை. பழசையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தா சிரிப்புதான் வருது!

ரொம்ப முக்கியமான விஷயம், இன்னைக்கு என்னை நானே லவ் பண்றேன். உங்களை நீங்களே நேசிக்கும்போது இயல்பாவே, உங்களை சுத்தியிருக்கவங்களுக்கும் உங்க நேசம் பரவிடும். ஸ்ப்ரெட் பாசிட்டிவிட்டி!”

``ஒன் லாஸ்ட் பன்ச்!’’

``உடம்பு நல்லாருந்தா போதும் பாஸ், வாழ்க்கையில எதைவேணாலும் ஃபேஸ் பண்ணிடலாம்! ஸோ, உடம்பைப் பார்த்துக்கோங்க போதும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism