என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

விஜய் தேவரகொண்டா முதல் விஜய் வரை... அசத்தும் அழகான அம்மா

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

நிறைய நம்பிக்கையையும் பாசிட்டி விட்டியையும் கொடுத்த படம் அது.

மிழ், தெலுங்கு சினிமாக்களில் அம்மா கேரக்டருக்குப் போட்டி யின்றி தேர்வு செய்யப்படுகிறார் கல்யாணி நடராஜன். விஜய் தேவரகொண்டா முதல் விஜய் வரை முன்னணி ஹீரோக்களின் அழகான அம்மா. இன்னொரு பக்கம் ஜோதிகா, ராஷி கண்ணா, ரவீணா டாண்டன் என விளம்பரங்களில் பிரபலங் களுடன் ஸ்கிரீன் ஸ்பேஸ் பகிர்ந்து கொண்டிருப்பவர்.

‘`எனக்கும் பேட்டிக்கும் ரொம்ப தூரம். பேட்டி கொடுத்துப் பழக்கமே இல்லை...’’ - என்ற தயக்கத்துடனேயே பேசினார்... ‘`பிறந்தது, வளர்ந்தது, படிச்சதுனு எல்லாமே மும்பை. இங்கிலீஷ் லிட்ரச்சர் முடிச்சிட்டு, அயாடா அட்வான்ஸ்டு புரொஃபஷனல் டிகிரி முடிச்சிருக் கேன். அப்பா கல்ஃப்ல இருந்தார். அங்கே ரெண்டு வருஷங்கள் வேலை பார்த்துட்டு இந்தியா வந்தேன். பல வருட நண்பர் நடராஜனோடு 95-ம் வருஷம் கல்யாணம். கன்சீவ் ஆனதும் மும்பையில பார்த்திட்டிருந்த டிராவல் ஏஜென்சி வேலையை விட்டுட்டேன். இதுக்கிடையில ப்ரீ பிரைமரி கோர்ஸ் ஒண்ணு முடிச்சேன். ரெண்டு குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட பத்து வருஷ இடைவெளிக்குப் பிறகு ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலைக்குச் சேர்ந்தேன். இங்கிலீஷ் கிளாஸும், கூடவே டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் லண்டன் ஸ்டூடன்ட்ஸுக்கு ஸ்பீச் அண்டு டிராமாவும் சொல்லிக் கொடுத்திட்டி ருந்தேன். அது மூலமா தியேட்டர் ஆட்களின் அறிமுகம் கிடைச்சது.

விஜய் தேவரகொண்டா முதல் விஜய் வரை... அசத்தும் அழகான அம்மா

நான் தமிழர்னு தெரிஞ்சு தமிழ் டிராமாக்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. தமிழ் முகம் வேணும்னு தேடி கிட்டிருந்தவங்க என்னைப் பத்திக் கேள்விப்பட்டு, விளம்பரங்கள்ல நடிக்கக் கூப்பிட்டாங்க....’’ - குட்டி ஸ்டோரி பகிர்பவருக்கு முதல் விளம்பர வாய்ப்பே சூர்யா - ஜோதிகாவுடன் அமைந்திருக்கிறது.

‘`சூர்யா - ஜோதிகாவோடு சன் ரைஸ் விளம்பரத்துல கூட்டத்துல ஒருத்தியா நடிச்சிருப்பேன். ஆனா, அதே ஜோதிகாவோடு சக்தி மசாலா விளம்பரத்துல சேர்ந்து நடிச்சேன். ஜோதிகா நேர்லயும் பேரழகு. தான் எவ்வளவு பெரிய நடிகைங்கிற பந்தா இல்லாம ரொம்ப அன்பா பழகி னாங்க.

இப்போ ரவீணா டாண்டன்கூட விஐபி ஹேர் கலர் விளம்பரத்துல நடிச்சிருக்கேன். அவங்களுக்கு என்னைத் தெரியாது. அவங்க ஷாட் முடிஞ்சதும் என்னைக் கூப்பிட்டாங்க. வெறும் பத்து நிமிஷங்கள் சேர்ந்து நடிச்ச ஒருத்தங்களை மதிச்சு, ‘பை’ சொல்லிட்டுப் போகணும்னு அவங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் ஒரே மாதிரி இருக்கணும்னு இவங்க ரெண்டு பேர்கிட்டயும் கத்துக் கிட்டேன்...’’ - சிலாகிப்பவருக்கு ‘சைவம்’ படம்தான் தமிழ் சினிமாவில் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.

‘`மாடலிங் கோ ஆர்டினேட்டர் தாரா உமேஷின் மகள் மூலமா ‘சைவம்’ படத்துல வாய்ப்பு வந்தது. அதுக்கு முன்னாடி டைரக்டர் விஜய்யின் ‘தலைவா’ படத்துல சத்யராஜ் சார் மனைவியா நடிக்க ஆடிஷன் பண்ணித் தேர்வாகியிருந்தேன். திடீர்னு ஷூட்டிங் கூப்பிட்டாங்க. அப்போ நான் டிராமால பிசியா இருந்த தால அந்தப் படம் மிஸ் ஆயிடுச்சு. அதை ஞாபகம் வெச்சுக்கிட்டு விஜய், அடுத்து அவர் இயக்கிய `சைவம்' படத்துக்குக் கூப்பிட்டார்.

நிறைய நம்பிக்கையையும் பாசிட்டி விட்டியையும் கொடுத்த படம் அது. அந்தப் படத்துல ‘மேக்கப்கூட தேவை யில்லை, வெயில்ல காய்ஞ்சிட்டு வாங்க, அந்த கலர் போதும்’னு சொன்னார் டைரக்டர் விஜய். அடுத்து ‘பிசாசு’, ‘குற்றம் 23’, ‘மாலைநேரத்து மயக்கம்’, `டியர் காம்ரேடு'னு நல்ல படங்கள், நல்ல நல்ல கேரக்டர்ஸ் பண்ணிட்டேன்’’ என்பவரின் சமீபத்திய சந்தோஷம் ‘மாஸ்டர்’ பட வாய்ப்பு.

விஜய் தேவரகொண்டா முதல் விஜய் வரை... அசத்தும் அழகான அம்மா

விஜய்யுடன் ‘தெறி’, ‘சர்க்கார், ‘மாஸ்டர்’ என ஹாட்ரிக் வாய்ப்பில் பூரித்துப் போயிருக்கிறார் கல்யாணி.

‘`முதல் படம் பண்ணபோது விஜய் சார்கூட நடிக்கப் போறோமானு கொஞ்சம் பதற்றமா தான் இருந்தது. ‘வீட்டுல எல்லாரும் நல்லாருக் காங்களா’னு அக்கறையா விசாரிச் சார் விஜய். ‘சர்க்கார்’ல நான் அவருக்கு அம்மா. அவர் மேல இருந்த மரியாதை இன்னும் அதிகமாச்சு. ‘தெறி’ பண்ணிட்டிருந்த டைம்... விஜய் சார் பையன் படிக்கிறதுக்காக கனடா போயிருந்த தைப் பத்தியும் என் மகன் யுகே போயிருந்ததைப் பத்தியும் பேசிட் டிருந்தோம். ‘மாஸ்டர்’ டைம்ல அதை ஞாபகம் வெச்சு விசாரிச்சார்’’ - விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பெருமையோடு காட்டும் கல்யாணி, நிஜத்தில் இரண்டு மகன்களின் மாடர்ன் மம்மி.

‘`கணவர் நடராஜன், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். பல வருஷ கார்ப்பரேட் வேலைக்குப் பிறகு அவரும் இப்போ தியேட்டர், நடிப்பு, டைரக்‌ஷன்னு பிசியா இருக்கார்.மூத்த மகன் சித்தாந்த், பிசினஸ் பண்ணிட்டே படிக்கிறார். கிடாரிஸ்ட். சின்ன மகன் ஷாரங், யுகேல ஃபிலிம் புரொடக்ஷன் படிக்கிறார் `டூ ஸ்டேட்ஸ்' படத்துல ஆலியா பட்டுக்கு தம்பியா நடிச்சிருக்கார். மாமியார் எங்ககூடதான் இருக்காங்க. நான் அழகா டிரஸ் பண்ணிக்கணும், நிறைய படங்கள் பண்ணணும்னு ஆசைப்படற மனுஷி.

குடும்பத்தோட சப்போர்ட் இல்லைன்னா என்னால எதுவும் பண்ணியிருக்க முடியாது. எல்லாத்துக்கும் நான் வீட்டுல இருக்கணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. ‘உன் வேலையை நீ பாரு... வீட்டு விஷயங்களை நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்'னு சொல்வாங்க. வீட்டுல யார் என்ன பண்றாங்களோனு நான் என்னிக்கும் கவலைப்பட்டதில்லை. 40 ப்ளஸ்ல தான் மீடியாவில் என் கரியரை ஆரம்பிச்சேன். அதுல என்னை விடவும் என் கணவருக்கும் மகன் களுக்கும்தான் பெருமை'' - சக்சஸ்புல் செகண்டு இன்னிங்ஸில் இன்னும் சில திட்டங்கள் வைத்திருக்கிறார் கல்யாணி. செல்லப்பிராணிகளின் உளவியலை அறியும் `கனைன் பிஹேவியர்' கன்சல்ட்டன்ட் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கிறார்.

‘`எங்க வீட்டுல கோல்டன் ரெட் ரீவர் நாய் வளர்க்கறோம். அவன் எனக்கு மூணாவது மகன் மாதிரி. அவனுக்காகத்தான் இந்த கோர்ஸே படிக்கிறேன். என்னை மாதிரியே பெட் லவ்வர்ஸுக்கு கனைன் பிஹேவியர் கன்சல்ட்டன்ட்டா உதவி செய்ய நிறைய விஷயங்கள் வெச்சிருக்கேன்...’’

- அநியாயத்துக்கு நல்லவராகப் பேசும் கல்யாணிக்கு, அநியாயத்துக்குக் கெட்டவராக, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

அட....