கட்டுரைகள்
Published:Updated:

மூணு டாட்டூல ஒண்ணை அழிக்கணும்!

லட்சுமி மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி மேனன்

எல்லாருக்கும் சினிமால நடிக்குற வாய்ப்பு அவ்ளோ சீக்கிரம் வராது. என்னோட பிரெண்ட்ஸ் பலரும் சினிமால வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்காங்க.

ரொம்ப நாளா காணோமேன்னு விசாரிச்சா... ஆளே மாறியிருக்காங்க லட்சுமி மேனன்!

‘‘எப்படி ஸ்லிம் ஆனேன்னு எனக்கே தெரியலை. நிறைய டான்ஸ் பண்ணினேன். ஆனா, எடை குறைக்கணும்கிறதுக்காக டான்ஸ் பண்ணல. அதுவா குறைஞ்சுடுச்சு. எப்போவுமே நல்லா சாப்பிடுவேன். அதுல எந்தக் குறையும் வெச்சதில்ல!”

“காலேஜ் முடிச்சுட்டீங்களா?”

‘`இப்போதான் பைனல் இயர். கொச்சின் அண்ணாமலை யுனிவர்சிட்டில சோசியலாஜி!’’

“நாலு வருஷமா சினிமாவுக்கு ஏன் பிரேக்?”

“நானே ஆசைப்பட்டு எடுத்துக்கிட்ட விஷயம் இது. நடிக்குறதுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. எல்லாத்தையும் நானே தவிர்த்தேன். சின்ன பிரேக் வேணும்னு தோணுச்சு. இப்போ, தமிழில் ஒரு படத்துல கமிட்டாகியிருக்கேன். ஆரி ஹீரோவா நடிக்க இருக்கார். என்னோட கேரக்டரும் பவர்புல்லா இருக்கும்.”

“நீங்க நடிச்ச படங்களில் பேவரைட் படம்னா எதைச் சொல்லுவீங்க?”

“ஜிகர்தண்டா!’’

“ஸ்கூல் படிக்குறப்போதே சினிமாவுக்கு வந்தது நல்லதுன்னு நினைக்குறீங்களா, இல்ல சில விஷயங்களை மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணுறது உண்டா?”

‘`எல்லாருக்கும் சினிமால நடிக்குற வாய்ப்பு அவ்ளோ சீக்கிரம் வராது. என்னோட பிரெண்ட்ஸ் பலரும் சினிமால வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்காங்க. இவங்களைப் பார்க்குறப்போ நமக்கு நல்லது நடந்திருக்குன்னு பாசிட்டிவா தோணும். ஆனா அதேநேரம் குழந்தைப் பருவத்துலயே அடல்ட் கதை கொண்ட படத்துல நடிச்சிட்டேன். ஸ்கூல் லைப் மிஸ்ஸாகிருச்சு. அது சமயங்களில் உறுத்தலாத்தான் இருக்கும்.”

“நடிப்புக்கு ஸ்கோப் கொடுக்குற மாதிரியான கதைக்களம் இன்னும் ஏன் உங்களுக்கு மலையாளத்தில் அமையலை?”

“எனக்கும் அந்தக் கேள்வியிருக்கு. மலையாள சினிமாவைப் பொறுத்தவரை தெரிஞ்ச பொண்ணு, பிரபலமான பொண்ணுங்கிறது முக்கியம் கிடையாது. அந்தக் கேரக்டருக்கு ஏத்த பெண்ணாங்கிறதுதான் முக்கியம். சிலபேருக்கு சில பட வாய்ப்புகள் மட்டும்தான் அமையும். ஆனா காலத்துக்கும் அந்தப் பாத்திரங்கள் நிற்கும். ஒரே ஒரு படம் போதாதா நம்மை நிரூபிக்க? எனக்கான பாத்திரம் அப்படி இன்னும் மலையாள சினிமாவில் உருவாகலைன்னுதான் நினைக்கிறேன். அதற்காக ஆசையுடன் காத்திருக்கேன்.”

“தமிழ் சினிமாவில் என்ன மாறணும்னு நினைக்கிறீங்க?”

“இங்கே படம் பார்க்குற ஆடியன்ஸ்தான் மாறணும்னு நினைக்குறேன். ஏன்னா, ஆடியன்ஸ் ஆசைப்படுறதுதானே கொடுக்க முடியும். பார்க்கிறவங்க ரசனை உயர்ந்தா படங்களின் தரமும் உயரும்!”

“டாட்டூஸ் புதுசா போட்டிருக்கீங்களே?”

“ஒரு முறை டாட்டூஸ் போட்டுட்டாலே addiciton ஆகிருவோம். இதனாலயே கை, கழுத்துக்குப் பின்னாடி, மார்புக்கு மேலன்னு மொத்த மூணு டாட்டூஸ் வரை போட்டுட்டேன். கழுத்துக்குப் பின்னாடி வித்தியாசமா இருக்கணும்னு mandala டாட்டூஸ் போட்டேன். கையிலே angel wings போட்டிருக்கேன். மார்புக்கு மேல இருக்குற டாட்டூவை ரிமூவ் பண்ணணும்னு நினைச்சிட்டிருக்கேன்.”

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

“தமிழ் சினிமாவில் எந்த நடிகர்கூட சேர்ந்து நடிக்க ஆசையிருக்கு?”

“தனுஷ் சார். அவரோட நடிப்பு ரொம்ப நல்லாருக்கு. ‘வடசென்னை’, ‘அசுரன்’லாம் பார்த்து மிரண்டுட்டேன்.

“இன்னும், தமிழில் யார் கூடவாவது டச்ல இருக்கீங்களா?”

“எப்போதாவது விஷால்கிட்ட மெசேஜ்ல பேசுவேன். வேற யார்கூடவும் பெருசா பேசல. விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்கு. கல்யாணத்துக்குச் சொன்னார்னா போவேன். அப்போ இருக்குற சூழலைப் பொறுத்து.”

நீங்க நடிச்ச ஹீரோ பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க.

விஜய் சேதுபதி - சிம்பிள்

விஷால் - கூல் கய்

அஜித் - ஜென்டில்மேன்

ஜெயம் ரவி - funny

சித்தார்த் - திறமைசாலி

கார்த்தி - க்யூட்

சசிகுமார் - mystery

பிரபுதேவா - unknown