Published:Updated:

ஆசைகள் ஆயிரம்: ரஜினிக்கு சமைச்சுக் கொடுக்கணும்!

நிவேதா தாமஸ்
பிரீமியம் ஸ்டோரி
நிவேதா தாமஸ்

தர்பார்..? பெயரைச் சொன்னாலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசமாகிறது நிவேதாவின் முகம்.

ஆசைகள் ஆயிரம்: ரஜினிக்கு சமைச்சுக் கொடுக்கணும்!

தர்பார்..? பெயரைச் சொன்னாலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசமாகிறது நிவேதாவின் முகம்.

Published:Updated:
நிவேதா தாமஸ்
பிரீமியம் ஸ்டோரி
நிவேதா தாமஸ்

`பாபநாசம்' திரைப்படத்தில் கமலின் மகளாக நெல்லை பாஷையில் அசத்திய நிவேதா தாமஸ், தர்பாரில் ரஜினியின் பெண்ணாக நடித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் இரண்டு இமயங்களின் மகளாக நடித்த பெருமைக்குரிய நிவேதா, இப்போது தர்பார் ரிலீஸ் சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆசைகள் ஆயிரம்: ரஜினிக்கு சமைச்சுக் கொடுக்கணும்!

அவருடன் ஓர் இனிய சந்திப்பு...

``மலையாளி என்றாலும் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். குழந்தை நட்சத்திரமா சின்னத்திரையில ஆரம்பிச்ச என் பயணம், இப்போ வெள்ளித்திரையில் தொடர்ந்துட்டிருக்கு. `மை டியர் பூதம்' சீரியல்ல நடிச்சேன். இல்லே இல்லே... அந்த சீரியல்லதான் நான் நடிப்பையே கத்துகிட்டேன். அப்புறம் படிப்பு, நடிப்பு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணினேன். ஒருவழியா ஆர்கிடெக்ட் கோர்ஸ் முடிச்சுட்டேன்’’ என்கிறவர், இப்போதும் தன்னுடன் ‘மை டியர் பூதம்’ சீரியலில் நடித்தவர்களுடன் நட்பில் இருக்கிறாராம்.

தர்பார்..? பெயரைச் சொன்னாலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசமாகிறது நிவேதாவின் முகம்.

``ஆக்சுவலா ரஜினி சார் பொண்ணா நான் நடிக்கணும்னு சொன்னப்ப உதற ஆரம்பிச்சிடுச்சு. எல்லாருக்கும் ரஜினி சார்கூட நடிக்கணும்கிறது ஒரு கனவுதானே? எனக்கு அந்தக் கனவு நிஜமாச்சு. வாய்ப்பைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்.

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

முதல் நாள் ஷூட்டிங்ல எனக்குள்ள இருந்த உதறல், ரஜினி சாரை நேர்ல பார்த்ததும் ஓடியே போச்சு. அந்த நொடியே அவரை என் அப்பாவா பார்க்க ஆரம்பிச்சுட்டேன். நானும் ரஜினி சாரும் இருக்கிற காட்சிகளை 45 நாள்கள் எடுத்தாங்க. ஷூட்டிங் கடைசி நாள் அன்னிக்குதான் அவர்கூட ஒரு செல்ஃபிகூட எடுக்கலைங்கிறது உறைச்சது. உடனே ரஜினி சார்கிட்ட தயக்கத்தோடு கேட்டேன். ‘அப்படியா?’னு அவர் ஆச்சர்யத்தோடு கேட்டார். அடுத்த நொடியே, ‘வாடா கண்ணா’ன்னு கூப்பிட்டு செல்ஃபி எடுத்துக்க வெச்சார். அந்த போட்டோவை ரொம்ப பத்திரமா வெச்சிருக்கேன்.

ஒண்ணு தெரியுமா உங்களுக்கு... நான் பார்க்கிறதுக்கு ரஜினி சார் பொண்ணுங்கள்ல ஒருத்தர் மாதிரி இருக்கேன்னு ரசிகர்கள் சொல்றாங்க. அதனால அப்பா ஃபீலிங்கும் கூடுதலா எனக்குள்ள வந்திருச்சு. சார் செம டைப். செட்ல மத்த சீன்களைவிட காமெடி சீன் பண்றப்ப ரொம்ப சந்தோஷமாகிடுவார். வெரைட்டியா சாப்பிடுறதுன்னா அவருக்கு அவ்ளோ இஷ்டம். சார் ரசிச்சு சாப்பிடுறதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒருநாள் சார் இஷ்டப்படுற உணவை நானே சமைச்சுக் கொடுக்கணும். நிச்சயம் என் ஆசை நிறைவேறும்னு நம்பறேன்.

ஆசைகள் ஆயிரம்: ரஜினிக்கு சமைச்சுக் கொடுக்கணும்!

படம் பார்த்தவங்க எல்லாம் என்னை மாதிரி ஒரு பொண்ணு தனக்கு இல்லையேன்னு ஃபீல் பண்ணினாங்களாம். இந்த மேஜிக்குக்குக் காரணம் ரஜினி - முருகதாஸ் காம்போதான்’’ என்று மகிழ்கிறார் நிவேதா.

`உங்க ரியல் பேமிலி ஸ்டோரி?'

‘‘நான் வீட்ல முதல் பொண்ணு. அதனால செல்லம் கொஞ்சம் அதிகம். நானும் தம்பியும் சேர்ந்தா `டிக்டாக்'கால வீடே ரெண்டுபடும். என்னை வீட்ல ‘குக்கீ’ன்னுதான் கூப்பிடுவாங்க. நிக் நேமுக்கு ஏத்த மாதிரி சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடுற ஆள் நான். எந்த ஊர்ல என்ன உணவு ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கிட்டு அதைத் தேடித்தேடி ரசிச்சு ருசிப்பேன். அம்மா சமையல்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல அம்மாவை சமைக்கச் சொல்லி ரசிச்சு சாப்பிடுவேன்.

`உன் வாழ்க்கையில எந்த ஒரு நாளையும் வீணாக்கிட்டோமேன்னு பின்னாடி நீ வருத்தப்படக் கூடாது. முடிஞ்சவரை மத்தவங்களை காயப்படுத்தாம, சந்தோஷமா இரு. ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாததா வெச்சிக்கோ’னு அப்பா அடிக்கடி சொல்வார். முடிஞ்சவரை நானும் அதை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்’’ என்கிறவரிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, `ஹீரோயினா நடிக்கிறீங்க... மகள், தங்கை கேரக்டரும் பண்றீங்களே' என்பதுதானாம்.

‘‘ஹீரோயின்கிற வட்டத்துக்குள்ள சுருங்கறதைவிட, நல்ல நடிகையா இருக்கறதுதான் எனக்கு முக்கியம். ஹீரோயினா இருந்தாலும் சும்மா வந்துட்டு போவதுபோல இல்லாமல் முக்கியமான கதாபாத்திரமா இருக்கணும். இப்ப எனக்கு 23 வயசுதான் ஆகுது. 60 வயசுலேயும் நல்ல வலுவான கேரக்டர்ல நடிச்ச நடிகைங்கிற பெயரை வாங்க விரும்புறேன்” என்கிறவருக்குப் புதிதாக ஓர் ஆசை உருவாகியிருக்கிறதாம்.

``மோகன்லால் சார், விஜய் சார், கமல் சார், ரஜினி சார்... இப்படி இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களோட நடிச்சுட்டேன். இந்த வரிசையில அஜித் சார்கூட நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அதுவும் கூடிய சீக்கிரம் நிறைவேறும்னு நம்பறேன்’’ என்று சிரிக்கிறார் நிவேதா தாமஸ்.

அடுத்து `தல' தங்கச்சியா!