Published:Updated:

சாய் தன்ஷிகா... பெண்கள் அழுகாச்சியாக இருக்கக்கூடாது!

சாய் தன்ஷிகா
பிரீமியம் ஸ்டோரி
சாய் தன்ஷிகா

நானே நானா?

சாய் தன்ஷிகா... பெண்கள் அழுகாச்சியாக இருக்கக்கூடாது!

நானே நானா?

Published:Updated:
சாய் தன்ஷிகா
பிரீமியம் ஸ்டோரி
சாய் தன்ஷிகா

ழக்கமாக நடிகர்கள் சண்டைக்காட்சியில் நடிப்பதற்காக மட்டுமே சண்டைப் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். விதிவிலக்காக விளங்கும் சாய் தன்ஷிகாவோ சிலம்பாட்ட வீராங்கனை. ‘பரதேசி’ படத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் அடிமை கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார். இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையான ‘யோகிடா’ படத்தில் நடித்துவரும் சாய் தன்ஷிகாவிடம் பேசினோம்.

‘பேராண்மை’ படத்துக்குப் பிறகு ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தில் என்ன கேரக்டர்?

முதல்ல ஜனநாதன் சார் டைரக்‌ஷன்ல ‘பேராண்மை’ படத்துல நடிக்கும்போது நெவர்ஸா இருந்தது. சார்தான் ‘ரொம்ப டென்ஷன் எல்லாம் ஆக வேண்டாம். இயல்பா நடிங்க’ன்னு எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். ஜனா சார் சினிமாவில் மட்டுமல்ல... எல்லாத்திலேயுமே என்சைக்ளோபீடியா. எதைப்பத்தி பேசினாலும் அதைப்பத்தின எல்லா விஷயங்களையும் விரல்நுனியில வெச்சிருக்கிற வித்தைக்காரர். ஆக மொத்தம், அவர் ஓர் அனுபவக்கடல்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வெஜிடேரியன் உணவை அளவோடு சாப்பிடுங்க... அசைவ உணவை ஃபுல் கட்டு கட்டுங்க. ஆனா, மறுநாள் செமையா எக்சர்சைஸ் பண்ணுங்க!
சாய் தன்ஷிகா
சாய் தன்ஷிகா

ஜனா சாருக்கும் ரஞ்சித் சாருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. யாரோ ஓர் அடையாளம் தெரியாத ஆள் நல்ல ஐடியாவோ, கருத்தோ சொன்னால், அதை அலட்சியப்படுத்தாம கேட்பாங்க. ‘லாபம்’ படப்பிடிப்புக்குப் போகும்போதும் அதே பயத்தோடுதான் போனேன். ஏற்கெனவே அறிமுகமான கோ-டைரக்டர், அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் இருந்த தாலே அச்சம் விலகிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்டுல என் நடிப்பைப் பார்த்துட்டு, ‘பரவாயில்ல இந்தப் பொண்ணு முன்பைவிட இப்போ நடிப்புல நல்லா மோல்டு ஆயிருக்கு’ன்னு சொன்னதைக் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். விஜய் சேதுபதி நடிப்பிலயும் பழகும் தன்மையிலயும் இயல்புத்தனமும் உண்மைத்தன்மையும் தெரியும். ஏற்கெனவே ‘சங்கத் தேவன்’ படத்துல அவரோட நடிக்கறதா இருந்துச்சு. கடைசியில முடியாம போச்சு. ஜெகபதிபாபு காம்பினேஷனில் நடிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை டைரக்டர் கொடுத்திருக்கார். இப்போ அதுபற்றி எதுவும் பேசக்கூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டிருக்கார். அதனால நோ நியூஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமா என்ன கற்றுக்கொடுத்திருக்கிறது?

ஒவ்வொரு படத்துலயும் வெவ்வேறு அனுபவம். `பேராண்மை’ படத்துல ஏற்பட்ட அனுபவத்தை ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ‘அரவாண்’ வேறொரு ஜானர்... நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை கத்துக்கொடுத்தது. `பரதேசி’ படத்துல நடிக்க என்னை ஒப்பந்தம் செய்யும்போது பாலா சாரை பார்க்கவே பயந்தேன். அந்தப் படத்துல எனக்குக் கொடுத்திருக்கிற ஸ்கோப்பை ஸ்கிரீன்ல பார்க்கும்போதுதான் உணர்ந்தேன். ‘அது நானே நானா'ன்னு என்னைப்பார்த்து வியந்த திரைப்படம்!

‘கபாலி’ படத்துல வேறொரு பாடத்தைக் கத்துக்கிட்டேன். முதன்முதலா ரஜினி சாரை சந்திக்கும்போது எதிரிகள்கிட்டேயிருந்து காப்பாத்தறதுக்காக சண்டை போடுவேன் அப்போ ‘அப்பா...’னு கத்துவேன். ரஜினி சார் என்னை நெகிழ்ச்சியோட பார்த்துக்கிட்டே இருப்பார். அந்தக் காட்சியை ரஞ்சித் சார் விளக்கும்போது ‘சார், தன்ஷிகா சண்டை போடுவாங்க’ன்னார். ‘அப்போ நான் என்ன பண்ணனும்'னு ரஜினி சார் கேட்க, `அதுக்கு நீங்க சும்மா பாத்துக்கிட்டே இருந்தா போதும்’னு ரஞ்சித் சார் சொல்ல, ‘ஓ... அப்ப இந்த சீன்ல தன்ஷிகா ஹீரோ, நான் ஹீரோயினா’ன்னு வெள்ளந்தியா சொன்னார் ரஜினி சார்! சினிமாவுல அவரோட உச்சம் எங்கே? நான் எங்கே? இந்தக் காட்சியை ஒப்புக்கிட்டு நடிக்க யாருக்கு சார் இப்படியொரு மனசு வரும்!

அழகையும் எடையையும் பராமரிக்க எந்த அளவுக்கு மெனக்கெடுகிறீர்கள்?

பெண்கள் அழகை மெருகேத்தணும்னா ஏற்கெனவே பெரியவங்க சொல்லிக் கொடுத்த ஃபார்முலாவைக் கடைப்பிடிச்சாலே போதும். இப்போ இருக்கிற கெமிக்கல் அயிட்டங்களைப் பயன்படுத்தறது நல்லது இல்லை.

உணவு விஷயத்துல கட்டுப்பாடு உண்டு. எனக்கு எதிரே ஸ்வீட் வெச்ச மனசு லேசா சஞ்சலப்படும். ரசகுல்லா வெச்சுட்டா சபதம் அபீட்டாகிவிடும். பெரும்பாலும் தென்னிந்திய உணவுகள்தான் இஷ்டம். நாட்டுக்கோழி குழம்பு, பிரான் ஃப்ரை சமைப்பதில் நான் எக்ஸ்பர்ட்.

உங்களுக்கு நான் சொல்றது இதுதான்... வெஜி டேரியன் உணவை அளவோடு சாப்பிடுங்க... அசைவ உணவை ஃபுல் கட்டு கட்டுங்க. ஆனா, மறுநாள் செமையா டயர்டு ஆகிற அளவுக்கு எக்சர்சைஸ் பண்ணுங்க. அப்புறமென்ன உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை!

சாய் தன்ஷிகா
சாய் தன்ஷிகா

இப்போது நடித்துவரும் ‘யோகிடா’ படம் குறித்து?

ரஜினி சாரோடு நடித்த ‘கபாலி’ படத்துல என் கேரக்டர் பேர் `யோகி'ன்னு உங்களுக்கே தெரியும். ரஜினி சார் பேசும் ‘கபாலிடா...’ டயலாக் உலகம் முழுக்க இருக்கற சினிமா ரசிகர்கள்கிட்டே ரீச்சான மாஸ் வசனம். அதே மாதிரி இருக்கணும்னு என் அங்கிள் தயாரிக்குற படத்துக்கு ‘யோகிடா’ன்னு பெயர் வெச்சோம். பெண்களைச் சுத்தி நடக்கற பிரச்னைகள்... அதையெல்லாம் அவங்க எப்படிச் சமாளிச்சு ஜெயிக்கிறாங்க என்பதுதான் ‘யோகிடா’ படத்தின் மையக் கதை.

‘கபாலி’ யோகி மாதிரியே இந்தப் படத்துலயும் ஆரம்பத்துல கலாட்டா, அடிதடி, துவம்சம்னு நடிச்சிருப்பேன். அப்படி அடிக்கிற மாதிரி நடிக்கிறபோது ஆடியன்ஸா இருக்கிற பெண்கள் அவங்களே அப்படி தாக்குற மாதிரி நிச்சயம் ஃபீல் பண்ணுவாங்க. இடைவேளைக்கு அப்புறம்தான் என் கேரக்டர் என்னன்னு தெரியவரும். நான் `கபாலி' படத்துல வெச்சிருந்த ஹேர்ஸ்டைல் எல்லாராலும் ரொம்ப பேசப்பட்டது. நிறைய இளம்பெண்கள் ஆர்வமா அதேமாதிரி தலைமுடியை வெட்டிக்கிட்டாங்க.

‘யோகிடா’ சண்டைக்காட்சி சிறப்பா வந்திருக்குன்னா முழுப் பெருமையும் கணேஷ் மாஸ்டரையே சேரும். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கத்துக்க போனப்போ அவரின் உறவினர் கணேஷ் மாஸ்டர் பழக்க மானார். ‘யோகிடா’ சண்டைக்காட்சி சிறப்பா வந்திருக்குன்னா முழுப் பெருமையும் கணேஷ் மாஸ்டரையே சேரும்.

பெண்கள் இப்போ இருக்கறதைவிட இன்னும் முன்னுக்கு வரணும்... எல்லாத்துலயும் ஜெயிச்சு காட்டணும்னு சொல்கிற சினிமாதான் ‘யோகிடா’. பெண்கள் அழுகாச்சியாக இருக்கவே கூடாது. பொம்பளைன்னா இவ்வளவுதான் எல்லாரும் வெச்சிருக்கிற அளவுகோலை உடைக்கணும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism