
காஸ்ட்யூம்ஸ்: அஞ்சு சங்கர்
பெயர்: ஸ்மிருதி வெங்கட்
ஊர்: பூர்வீகம் திருநெல்வேலி; பிறந்தது, வளர்ந்தது சென்னை.
கேரக்டர்: ஜாலியான பொண்ணுதான். சில சமயம் ‘பட்’டுனு கோபம் வரும். அந்தக் கோபம் சில நிமிடங்களில் மறைஞ்சிடும்.



படிச்சது: எம்.ஏ. கம்யூனிகேஷன்.
முதல்ல நடிச்சது: தீப எண்ணெய் விளம்பரம்.
பிடிச்ச இடம்: கொடைக்கானல்.
பயணங்களின் போது என்ன செய்வீங்க: பாட்டு கேட்பேன், இயற்கையை ரசிப்பேன்.
எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை: விஜய் சேதுபதி. சேர்ந்து வர்ற மாதிரி சின்ன ரோல் போதும்.



ரிலாக்ஸ் டைம் எப்படிப் போகும்: வீட்டுல பாட்டி, அக்கா குழந்தைகளுடன் இருப்பேன். பெயின்டிங், கார்டனிங் கொஞ்சம்.
இதுவரை எத்தனை புரொபோசல் வந்திருக்கு: அடடா, கவுன்ட் பண்ணலையே... நாலஞ்சு இருக்கும். `மூக்குத்தி அம்ம’னுக்குப் பிறகுகூட ‘வில் யூ மேரி மீ?’ன்னு கேட்டாங்க.



ட்ரீம் மேன் எப்படி இருக்கணும்: உயரமா, பாடி பில்டிங்ல அக்கறையுடன் ஒர்க் அவுட் பண்ணணும். என்னுடைய அறிவை அதிகப்படுத்துகிறவரா இருக்கணும்.
பேமிலிக்கு பி.ஜே.பி தொடர்பு இருக்காமே: ஆஹா, ஸ்மிருதியை மனு ஸ்மிருதியுடன் கனெக்ட் செய்றீங்களா?! ஆனா என்னுடைய பதில் `தெரியாது.’ அரசியல் அறிவுல நான் பூஜ்யம்.