சினிமா
தொடர்கள்
Published:Updated:

மூன்றுபேர்... ஒரு பிரச்னை!

கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ்

``இது ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்.

டத்தோட நாயகன் நிக்கி சுந்தரம், நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் போலீஸ் அதிகாரியான கிஷோர், இந்த மூணு பேரும் ஒரு பிரச்னையின் மையப்புள்ளியில் இணையும்போது என்ன நடக்குது அப்படிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன். மருத்துவத்துறையில் இருக்கக்கூடிய பிரச்னைகள் பற்றி இந்தப் படம் பேசும்...’’ என ஆரம்பிக்கிறார் ‘மெய்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகும், இயக்குநர் பாஸ்கரன்.

``கமல், சித்திக், ஜித்து ஜோசப்கூட வேலை பார்த்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க?’’

``சினிமாவில் உதவி இயக்குநரா முதலில் சேர்ந்தது மலையாள இயக்குநர் சித்திக் சார்கிட்டதான். அதுக்குப் பிறகு ஜித்து ஜோசப் சார்கிட்ட இருந்தேன். அந்த நேரத்தில் அவர் ‘பாபநாசம்’ படம் இயக்கிக்கிட்டிருந்தார். அப்போ ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் சார்கூட வேலை பார்க்கிற அனுபவம் கிடைச்சது. அதுக்குப் பிறகு கமல் சார் நடிச்ச ‘விஸ்வரூபம்-2’, `தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களிலும் வேலை பார்த்தேன்.

மூன்றுபேர்... ஒரு பிரச்னை!

இந்தச் சூழலில் தனியா ஒரு படம் டைரக்‌ஷன் பண்ணலாம்னு தோணுச்சு. கதையை ஜித்து ஜோசப் சார்கிட்ட சொன்னப்போ, ‘கதை நல்லா இருக்கு. எந்தச் சூழலிலும் சமரசம் ஆகாமல் படம் பண்ணுங்க’ன்னு சொன்னார். அப்படித்தான் மெய் தொடங்குச்சு.’

`` `மெய்’ உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையா?’’

``நண்பர்கள் மத்தியில் நடந்த சில மெடிக்கல் விஷயங்களை அடிப்படையா வைத்துதான் இந்தத் திரைக்கதையை வடிவமைத்தேன். முக்கியமா படத்தோட கதையில் என் நண்பர் செந்த முருகேசன் வேலை பார்த்திருக்கார். இவர் இயக்குநர் ராம் மற்றும் சித்திக் படங்களில் வேலை பார்த்தவர். படத்தோட திரைக்கதையை வடிவமைக்கப் பேருதவியா இருந்தார்.’’

``அறிமுகம் நடிகர் நிக்கி சுந்தரம் பற்றி?’’

``நிக்கி யு.எஸ் காரர். இவருக்கு சினிமா மேலே பெரிய காதல் இருக்கு. அதனாலே யு.எஸ்.ல இருந்து சென்னைக்கு வந்து சினிமா பற்றிப் படிச்சிட்டு இந்தப் படத்துல கமிட்டானார்.

மூன்றுபேர்... ஒரு பிரச்னை!

சினிமா பற்றியும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வெச்சிருக்கார். நிக்கியோட குடும்பம்தான் இந்தப் படத்தோட முதல் தயாரிப்பாளர்.’’

``ஒரு அறிமுக நடிகருடன் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி சம்மதம் சொன்னாங்க?’’

``மருத்துவத்துறையில் வேலை பார்க்கிற ‘ருத்ரா’ங்கிற கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க. உதவின்னு கேட்டு யாராவது வந்துட்டா, தன்னுடைய வேலை களைக்கூட விட்டுட்டு ஓடிப்போய் உதவி பண்ணுற ஒரு கேரக்டர். இந்தப் படத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டானப்போ ‘கனா’ படத்துல நடிச்சிட்டிருந்தாங்க.

மூன்றுபேர்... ஒரு பிரச்னை!

தவிர, மணிரத்னம் சார் படத்துல கமிட்டாகியிருந்தாங்க. இருந்தும் படத்தோட கதையைக் கேட்டுப் பிடிச்சிருந்ததனால ஓகே சொன்னாங்க. இந்தப் படத்தோட கதை அந்த அளவுக்கு வலுவானது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.’’