Published:Updated:

``கமல், இளையராஜா, மணிரத்னத்தை பார்த்தப்போ, எனக்குள்ள கேட்ட வாய்ஸ் ஓவர்..!'' - கௌதம் மேனன்

''ஒரு கதை எந்த ரூட்ல எப்படிப் போகும்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. நம்ம மனம், இருக்கிற இடம், பாஸிட்டிவ் எனர்ஜி இதெல்லாம்தான் இதை முடிவுபண்ணுது. நிறைய நாள்கள் லேப்டாப்பை வெறிச்சுப் பாத்துக்கிட்டு எதுவுமே தோணாம உட்கார்ந்துட்டு இருந்திருக்கேன்.''

'நீ தானே என் பொன்வசந்தம்' இசைவெளியீட்டு விழாவுக்கு இளையராஜாவுக்காக நிறைய பேரை வர வெச்சிருந்தீங்க. முன்னாடியே இதைப் ப்ளான் பண்ணிட்டீங்களா?

இளையராஜா
இளையராஜா

``இதுவரைக்கும் இளையராஜாவுக்காக யாரும் இப்படிப் பண்ணது இல்லைனு தைரியமாச் சொல்வேன். ஸ்கூல், காலேஜ் படிச்ச காலத்துல அவருடைய மியூசிக்கைக் கேட்டு வளர்ந்தவன். வாழ்க்கையில அவர் இசையால் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்திருக்கு. `இந்தப் படத்துல வொர்க் பண்ண முடியுமா'னு ராஜா சார்கிட்ட கேட்டதுக்கு, ஏன் இப்படிக் கேட்குறீங்க... வாங்க பண்ணுவோம்'னு சொன்னார். நோ சொல்லிடுவாரோங்கிற தயக்கம் எனக்குள்ள ஓடிகிட்டே இருந்தது. `உங்க படங்கள்லாம் தெரியும்'னு ராஜா சார் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இந்தப் படத்துல ஒவ்வொரு பாட்டுக்கும் மூணு ட்யூன் கொடுத்தார். மொத்த கம்போஸிங்கும் அரை மணி நேரத்துல முடிஞ்சிருக்கவேண்டியது. ஏன்னா, ஒவ்வொரு செகண்டும் எனக்காக வேலைபார்த்தார். பாட்டோட வேலைகளுக்காக லண்டன் வந்தார். முதல்ல நோட்ஸ் எழுதுவார், அப்புறம் ஒரே டேக்ல பாட வெச்சு, மொத்த ரெக்கார்டிங்கையும் முடிச்சிடுவார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இசை வெளியீட்டு விழாவுக்கு அவரோட வேலை பார்த்த எல்லோரும் வந்திருந்தாங்க. என்னுடைய வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் அது. இதுக்கப்புறம் என்னுடைய படங்கள் எதுக்கும் அவ்வளவு பெரிய விழா நடத்தலை. "

உங்களுடைய படங்கள்ல துணை கதாபாத்திரங்கள்கூட தனித்துத் தெரியும் ரகசியம் என்ன?

விடிவி கணேஷ்
விடிவி கணேஷ்

ஒரு படத்துக்கு துணை கதாபாத்திரம் ரொம்பவே முக்கியம். துணை கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க எனக்கு ஒரு தனி டீமே இருந்தாங்க. நானும் நிறைய டைம் எடுத்துப் பார்ப்பேன். `விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துல சிம்புவோட ஃப்ரெண்டா கணேஷை நடிக்க வெச்சது யாருக்கும் பிடிக்கலை. இந்த கேரக்டர் வொர்க்அவுட் ஆகும்னு நானும் சிம்புவும்தான் நம்பினோம். `வேட்டையாடு விளையாடு' படத்துல இருந்தே நானும் கணேஷும் சேர்ந்து வொர்க் பண்றோம். என்னுடைய பல படங்கள் உருவானதுக்கு அவரும் முக்கியக் காரணம். பாடி லாங்குவேஜ், வாய்ஸ்னு அவருடைய ஸ்பெஷல் யார் கண்ணுக்கும் தெரியலை. ஆனா, அவருடைய கேரக்டர் செம ஹிட்டாச்சு. ஸோ, கண்டிப்பா படத்துக்காக செலெக்ட் பண்ற ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`துருவ நட்சத்திரம்'ல விக்ரம்கூட வொர்க் பண்ண அனுபவம்...

விக்ரம்
விக்ரம்

எப்பவும் துறுதுறுனு இருப்பார். சின்னதா கரெக்‌ஷன் சொன்னாலும் ஓகேனு மறுபடியும் பண்ணுவார். அதிகபட்சம் ரெண்டே டேக்ல முடிச்சிடுவார். நடிப்புனு மட்டும் இல்லாம எல்லாத்துலயும் அவருடைய பங்களிப்பு இருக்கும்னு நினைப்பார். அதே சமயம், நம்மளுடைய விஷயத்துல தேவையில்லாம தலையிட மாட்டார். ரொம்பவே ஜென்யூன்.

உங்க படங்களின் டெக்னிக்கல் டீமை எப்படி செலெக்ட் பண்றீங்க?

அது முழுக்கவே என்னுடைய மனைவிதான் செலெக்ட் பண்ணுவாங்க. பொதுவா ஒரு படத்துக்கு ஒளிப்பதிவாளர் ரொம்ப முக்கியம். நாம நினைக்கிறதை அவர்தான் திரையில காட்டப்போறார். ஸோ, ரெண்டு பேரும் ஒரே வேவ் லென்த்ல இருக்கணும். அதேசமயம், சொல்ல வர்றதை அதிக செலவு இல்லாமலும் செய்யணும்னு நினைப்பேன். இந்தச் சின்ன வைப்ரேஷன், ரெண்டு பேருக்கும் இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்குற நீங்க, 'நடுநிசி நாய்கள்' படத்துல இசையே இல்லாம பண்ணிட்டீங்களே?

கவுதம்
கவுதம்

ஏன்னா, இந்தப் படத்துக்கு பாடல்கள் தேவைப்படலை. இசை இல்லாம சவுண்ட் மிக்ஸிங் பண்ணலாம்னுதான் இந்தப் படத்தையே ஆரம்பிச்சேன். அந்த சீன் நடக்குற இடத்தைச் சுத்தி நடக்குறது மட்டுமே படத்துல வரணும்னு நினைச்சேன். வண்டி, நாய், மழைனு இந்த சவுண்டை மட்டும்தான் படத்துல வெச்சேன். இதே ஸ்டைல்ல இன்னொரு படம் முயற்சி பண்ணப்போறேன்.

பட டைட்டில்லாம் எப்படிப் பிடிக்கிறீங்க?

அடுத்தப் படத்தோட டைட்டில், `ஜோஷ்வா இமைபோல் காக்க'. படத்தோட பெயர் எப்படி இருக்கணும்னு யோசிக்கிறதே இல்லை. ஸ்க்ரிப்ட் முடிக்கும்போதோ, ஷூட்டிங் சமயம் மனசுல தோணும், அதையே டைட்டிலா வெச்சிடுவேன். அவ்வளவுதான். `என்னை அறிந்தால்' படத்துக்கு அந்த ஒரே டைட்டில்தான் தோணுச்சு, அஜித்கிட்ட சொன்னேன், ஓகே ஆகிடுச்சு. வேற எதுவும் ஸ்பெஷல் காரணமெல்லாம் இல்லை

`நாயகன்' உங்களுடைய இன்ஸ்பிரேஷன்னு நிறைய இடத்துல சொல்லியிருக்கீங்க. `வேட்டையாடு விளையாடு' டேக் ஆஃப் ஆனதும் உங்களுக்கு எப்படி ஃபீல் ஆச்சு?

கமல்
கமல்

என்னை ரொம்ப பாதிச்ச படம், `நாயகன்'. சினிமாவுல எனக்கான பாதையை அமைச்சிக்கொடுத்ததே இந்தப் படம்தான். இதுல இன்ஸ்பயராகி என்னுடைய படங்கள்ல அதே மாதிரி நிறைய சீன்ஸ் வெச்சிருக்கேன். இளையராஜா, கமல், மணிரத்னம்னு மூணு பேரையும் சந்திச்சப்போ, `என்னுடய வாழ்க்கை என்னை சரியான இடத்துலதான் கொண்டுவந்து விட்ருக்கு'னு ஒரு வாய்ஸ் ஓவர் மனசுக்குள்ள கேட்சுச்சு. கமல் சார் நடிச்ச `சத்யா' பார்ததுக்கப்புறம்தான் கையில காப்பு போட ஆரம்பிச்சேன். `காக்க காக்க' படம் பார்த்துட்டு, போன் பண்ணி படம் பண்ணலாம்னு சொன்னார். `வேட்டையாடு விளையாடு' டேக் ஆஃப் ஆச்சு. நிறைய டிஸ்கஸ் பண்ணதுக்கப்புறம்தான் சீரியல் கில்லர் சப்ஜெக்ட் உள்ள வந்தது. ஒரு ரசிகனாதான் `கற்க கற்க' பாட்டை ஷூட் பண்ணேன். கமல் சாரை இயக்குனது மனசுக்கு செம கொண்டாட்டமா இருந்தது.

மூணு வருஷத்துக்கப்புறம் இயக்கப்போறீங்க. என்ன ஃபீல் பண்றீங்க?

சினிமாவில் இருக்கிற பிசினஸால, ஒரு படத்தை ரிலீஸ் பண்ண முடியாமப்போனது எனக்கு கிடைச்ச பாடம். என்னோட அடுத்த படத்துல இந்தத் தவறு கண்டிப்பா இருக்காது. 55 நாள்ல `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடிச்சிட்டேன். ஆனா, ரீலிஸுக்கு ரெண்டரை வருஷம் தேவைப்பட்டது. டீமோட சேர்த்து சில விஷயங்களை நான் பண்ணியிருக்கக் கூடாது. சினிமாவுல இருக்கிற பிசினஸைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்.

அதிக ஆங்கில வசனங்கள், சுத்தத் தமிழ் பாடல்கள்... இதுதான் கௌதம் ஸ்டைலா?

தாமரை
தாமரை

படத்துல பேசுற வசனங்கள் நிஜ வாழ்க்கையில பேசுற மாதிரியே இருக்கணும். ஆனா, பாட்டுனு வரும்போது தமிழ் வார்த்தைகள்தான் அதிகமா உணரவைக்கும். ரொம்ப சில பாடல்கள்லதான் ஆங்கில வார்த்தைகள் வரும். தாமரை, கார்க்கிகூட வொர்க் பண்ணும்போது சுலபமா வார்த்தைகள் விழுந்துடும்.

``நிஜத்துல நான் ஜெஸ்ஸி... கார்த்திக் தான் கற்பனை!”- கெளதம் வாசுதேவ் மேனன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு