Published:Updated:

சினிமா விகடன்: மூன்று முதல்வர்கள் தலைமையில் எங்கள் வீட்டுத் திருமணங்கள்!

குடும்பத்துடன் ஐசரி கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் ஐசரி கணேஷ்

எல்லாரும் சிவப்பு நிற உடைகள் அணிந்து லிவ்விங் ஏரியாவில் நமக்காகக் காத்திருக்க, குடும்ப அன்பர்களை அறிமுகப்படுத்தினார் ஐசரி கணேஷ்.

சினிமா விகடன்: மூன்று முதல்வர்கள் தலைமையில் எங்கள் வீட்டுத் திருமணங்கள்!

எல்லாரும் சிவப்பு நிற உடைகள் அணிந்து லிவ்விங் ஏரியாவில் நமக்காகக் காத்திருக்க, குடும்ப அன்பர்களை அறிமுகப்படுத்தினார் ஐசரி கணேஷ்.

Published:Updated:
குடும்பத்துடன் ஐசரி கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் ஐசரி கணேஷ்

லாக்டெளனின் அன்லாக் வெர்ஷனில் சினிமா பிரபலங்கள் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள, நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வீட்டுக்கு விசிட் அடித்தோம். சில்லென்று அடித்த பீச் காற்றுடன் முகப்பில் விநாயகரும் நந்தியும் அலங்கரிக்கும் வீட்டுக்குள் நம்மை அழைத்தார், ஐசரி கணேஷ். எல்லாரும் சிவப்பு நிற உடைகள் அணிந்து லிவ்விங் ஏரியாவில் நமக்காகக் காத்திருக்க, குடும்ப அன்பர்களை அறிமுகப்படுத்தினார் ஐசரி கணேஷ்.

“ ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’னு சொல்லுவாங்க. ஆர்த்தி, இறைவனால் எனக்குக் கிடைச்ச வரம். வேல்ஸ் குரூப் ஆப் ஸ்கூல்ஸைப் பார்த்துக்குறாங்க. இந்த வருஷத்துலதான் எங்களுடைய சில்வர் ஜூப்ளி திருமண விழாவைக் கொண்டாடினோம். எங்க வீட்டுல சந்தோஷத்தை நிரப்புறது எங்களுடைய குழந்தைகள்தான். என்னோட மூத்த பொண்ணு ப்ரீத்தா; ரெண்டாவது பொண்ணு குஷ்மீதா மற்றும் வீட்டோட சுட்டிப் பையன் சர்வேஷ். எங்க எல்லாருக்கும் ஆசீர்வாதம் கொடுக்க அம்மா புஷ்பா வேலன் இருக்காங்க” என ஐசரி கணேஷ் சொல்லவும், மனைவி ஆர்த்தி தொடர்ந்தார்.

‘`எவ்வளவு பிஸியா இருந்தாலும் இவர் குடும்பத்தோட நேரம் செலவழிக்கத் தவறியதில்லை. இவர்கிட்ட பிடிக்காதது ஒரே ஒரு பழக்கம்தான். நேரத்துக்கு சாப்பிட வீட்டுக்கு வர மாட்டார்’’ என ஆர்த்தி கணேஷ் வருத்தப்பட, அம்மா புஷ்பா, “என் வீட்டுக்காரர் இறந்ததுக்குப் பிறகு குடும்பச்சுமை கணேஷ் மேல விழுந்திருச்சு’’ எனக் கண்கலங்கினார். அம்மாவை அமைதிப்படுத்திவிட்டு, கணேஷ் தொடர்ந்து பேசினார்.

குடும்பத்துடன் ஐசரி கணேஷ்
குடும்பத்துடன் ஐசரி கணேஷ்

‘`காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே அப்பா தவறிட்டார். அப்பா சினிமாவுல நடிச்சிருந்தாலும் அரசியல் சார்ந்து வேலை பார்த்திருந்தாலும் அப்பாவுடைய இறப்புக்குப் பிறகு வீட்டுல ஏழ்மையான நிலைதான். அந்த நேரத்துல எம்.ஜி.ஆரை நேர்ல சந்திச்சு வீட்டோட நிலைமையைச் சொன்னேன். ஐயாவுடைய உதவியாலதான் எங்க குடும்பம் இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கு’’ என்ற கணேஷைத் தொடர்ந்தார், மூத்த மகள் ப்ரீத்தா.

“லண்டன்ல மேற்படிப்பு படிக்க நான் போனப்போ என்னைப் பிரிய முடியாம ரொம்ப வருத்தப்பட்டார். நான் பட்டம் வாங்குனதைப் பார்த்துட்டு அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நான் பட்டம் வாங்குறப்போ எல்லோரும் லண்டன் வந்ததுதான் எங்களோட கடைசி ஃபாரின் ட்ரிப். கொரோனாவால அடுத்து எங்கேயும் போக முடியலை’’ என ப்ரீத்தா வருத்தப்பட, ‘`எனக்கும் இதே வருத்தம்தான். எங்கேயும் வெளியே போக முடியல. தினமும் மூணு மணி நேரம் ஆன்லைன் கிளாஸ் வேற நடக்குது’’ எனச் சுட்டிப் பையன் சர்வேஷும் கவலைப்பட்டார்.

``நாங்க வருத்தப்பட்டாலும் இந்த லாக்டெளன் கொஞ்சம் ஜாலியாகவே போச்சுன்னு சொல்லலாம். அப்பா, அம்மாகூட சேர்ந்து நிறைய இண்டோர் கேம்ஸ் விளையாடினோம்’’ என்று உற்சாகமானார் குஷ்மீதா.

‘`என் மூத்த பொண்ணு படிப்புல கில்லி. லண்டன் வரை போய்ப் பொறுப்பா படிச்சிட்டு பட்டம் வாங்கிட்டு வந்துட்டாள். இப்போ, வேல்ஸ் குரூப்ஸ் ஆப் இன்ஸ்டிட்யூட்டின் துணைத் தலைவர். லண்டன் கல்வித் தரம் மாதிரியே நம்ம யுனிவர்சிட்டியையும் மாத்தணும்னு ஆசைப்படுறாள்; நிச்சயமா நிறைவேற்றுவாள்னு நம்புறேன். சின்னப் பொண்ணு குஷி லாயருக்குப் படிச்சிட்டு இருக்காள்’’ என்று மனநிறைவுடன் சொல்லும் ஐசரி கணேஷ், ``நான் படங்கள் தயாரிக்க வந்ததுக்கு மிக முக்கிய காரணமே பிரபுதேவா மாஸ்டர்தான். நான் வாழ்க்கையில் சந்திச்ச பல மனிதர்கள் என்னோட சந்தோஷத்துல உறுதுணையா இருந்திருக்காங்க. அதுல முக்கியமானவர் பிரபுதேவா. என்னோட கடைசிப் பையன் பிறந்தப்போ ஹாஸ்பிட்டல்ல என் கூடவே இருந்தார். எங்களோட நட்பு பெருசு. அதுதான், என்னை `பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ங்கிற நிறுவனத்தைத் தொடங்க வெச்சது’’ என்ற ஐசரி கணேஷ், மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியைப் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

``எங்க வாழ்க்கைக்கு பெரும் உதவியா இருந்தது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான். அவர்தான் என் தங்கை மகாலட்சுமி கல்யாணத்தை நடத்தி வெச்சார். என் திருமணத்தை ஜெயலலிதா அம்மா நடத்தி வெச்சாங்க. இன்னொரு தங்கை அழகு தமிழ்ச்செல்வி திருமணத்தை கலைஞர் ஐயா நடத்தி வெச்சார். மூன்று முதலமைச்சர்களும் எங்க குடும்பத் திருமணத்தை நடத்தி வெச்சது பெருமையான விஷயம்” என்று ஐசரி கணேஷ் சொல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறது.