ராதாமோகன் படங்களைப் போலவே அவருடைய படப்பிடிப்பும் ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்துவிடுகிறது. எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ‘பொம்மை’ படத்தைப் பாதிக்கும் மேல் ஷூட்டிங் நடத்தி முடித்துவிட்டார் ராதாமோகன். சென்னையின் ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ‘பொம்மை’ படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவர்களிடம் அடித்த ஜாலி அரட்டை இது.

“ராதாமோகன் படத்துல எஸ்.ஜே.சூர்யா... வித்தியாசமான காம்போவா இருக்கே?’’

ராதாமோகன்: ‘`இந்தப் படமே வித்தியாசமான படம்தான். இதுவரை நான் செய்த படங்கள்ல இருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கும். அதுவும் இந்தக் கதாபாத்திரத்துக்கு எஸ்.ஜே. சூர்யா அவ்வளவு பொருத்தமானவர். ’’

எஸ்.ஜே. சூர்யா: ‘`அவரோட படங்கள்ல இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டிருந்தாலும் ராதாமோகன் சாரோட ஒரு ட்ரீட்மென்ட் இந்தப் படத்துல நிச்சயம் இருக்கும். அவர் படத்துல நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்ங்கிறது சந்தோஷமா இருக்கு.’’

‘`ஒரு இயக்குநர் இன்னொரு இயக்குநரோட படத்துல நடிக்கும்போது கருத்துவேறுபாடு வருமே?”

ராதாமோகன்: ‘`அந்த இரண்டு இயக்குநர்கள் யாருங்கிறதைப் பொறுத்து அது மாறும். ‘பொம்மை’ படத்துல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கலையே. நடிகர் எஸ்.ஜே.சூர்யாதான் இருக்கார். என்னோட வேலையில அவர் தலையிடவே இல்ல. சீனுக்கு எது தேவையோ அதுமட்டும்தான் தருவார்.’’

எஸ்.ஜே. சூர்யா: ‘`நடிகர் எஸ்.ஜே.சூர்யாவைவிட இன்னொரு எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இங்க பொறுப்பு அதிகமா இருக்கு; தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யா. அதனால கூடுதல் கவனம் இருக்கும்ல. பொதுவாவே இன்னொரு இயக்குநர் படத்துல நடிக்கும்போது அவங்க ஏரியாக்குள்ள போகக்கூடாதுன்னுதான் நினைப்பேன். இந்தப் படத்துல அதை இன்னும் தீவிரமா கடைப்பிடிச்சிருக்கேன்.’’

‘`எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானிசங்கர் ஜோடி ‘மான்ஸ்டர்’, ‘பொம்மை’னு தொடர்ந்து ரெண்டு படங்கள் பண்ண என்ன காரணம்?’’

ப்ரியா பவானிசங்கர்: ‘`சிலர் நடிக்கிறதைப் பார்த்தா நமக்கு ஒரு நம்பிக்கை, எனர்ஜி கிடைக்கும். எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பு அப்படிப்பட்டதுதான். ‘மான்ஸ்டர்’ படம் சமயத்துலேயே அவரைப் பார்த்து நிறைய நடிக்கக் கத்துக்கிட்டேன். இப்போ இதை இன்னொரு வாய்ப்பாதான் பார்க்கறேன்.’’

எஸ்.ஜே.சூர்யா: `` ‘மான்ஸ்டர்’ படத்துல பார்த்த ப்ரியாவை நீங்க இந்தப் படத்துல பார்க்க மாட்டீங்க. அந்தப் படத்துல நடிக்கும்போது ரொம்ப அடக்கி வாசிச்சிருப்பாங்க. இதுல ரொம்பத் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க.”

‘`யுவன் ஷங்கர் ராஜாவோட இசை..?’’

ராதாமோகன்: ‘`இதுதான் எனக்கு யுவனுடன் சேர்ந்து வேலை செய்ற முதல் படம். மொத்தம் ரெண்டு பாட்டு. ரொம்ப அழகா வந்திருக்கு. ஆனா பாடல்களைவிட இந்தப் படத்தோட பின்னணி இசைக்குத்தான் நான் ரொம்ப ஆவலா இருக்கேன். இந்தக் கதையின் அடிப்படைக்கு ஒரு ஆழமான இசை தேவைப்படுது. அதை யுவன் எப்படி உருவாக்கப்போறாருன்னுதான் கேக்கக் காத்துக்கிட்டு இருக்கேன். ஒரு இயக்குநர்ங்கிறதைத் தாண்டி ஒரு யுவன் ரசிகனா எனக்கு இது ரொம்ப முக்கியமான படம்.’’

ப்ரியா பவானிசங்கர்: ‘`இங்க யாருதான் யுவன் ரசிகர் இல்லை? அந்தப் பாட்டு ஷூட்டிங் முடிச்சு கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த பாட்டத்தான் ரிப்பீட் மோட்ல கேட்டேன். மொத்தமா அடிமையாகிட்டேன். நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு பெரிய அனுபவமா இருக்கும்.’’

‘`அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்குப் படம் வெளியாகும்னு சொன்னீங்க. அப்போ படத்துல காதல் அதிகமா இருக்குமே?’’

ப்ரியா பவானிசங்கர்: ‘`இதுக்கு நான் பதில் சொல்றேன். பொதுவாவே ராதாமோகன் சார் படங்கள்ல இருக்கிற பெண் கதாபாத்திரங்களுக்குத் தனி முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்துல இருக்கிற என் பாத்திரமும் அப்படி ஒரு வலிமையான ரோல்தான். அந்தப் பாத்திரத்துக்கும் ஒரு காதல் கதை இருக்கும். அது ரொம்ப வித்தியாசமா இருக்கும்.’’

எஸ்.ஜே.சூர்யா: ‘`இந்தப் படத்துல இருக்கிற காதல் கதை ஒருத்தனோட உளவியல் சார்ந்த காதல் கதையா இருக்கும். அது அவனை எப்படியெல்லாம் மாத்துது, அதனால அவன் வாழ்க்கையில என்ன மாதிரி தாக்கம் ஏற்படுதுன்னு படத்தில் பார்க்கலாம். இதுக்குள்ள ஒரு த்ரில்லர் திரைக்கதை இருக்கு.’’