Published:Updated:

“என் ராசி கன்னி ராசி!”

ஹரிஷ் கல்யாண்
பிரீமியம் ஸ்டோரி
ஹரிஷ் கல்யாண்

`தனுசு ராசி நேயர்களே’, `தாராள பிரபு’ என இரு படங்கள் ரிலீஸுக்கு ரெடி.

“என் ராசி கன்னி ராசி!”

`தனுசு ராசி நேயர்களே’, `தாராள பிரபு’ என இரு படங்கள் ரிலீஸுக்கு ரெடி.

Published:Updated:
ஹரிஷ் கல்யாண்
பிரீமியம் ஸ்டோரி
ஹரிஷ் கல்யாண்

யக்குநர் சசி, இயக்குநர் சிம்புதேவன் படங்கள் பைப்லைனில் இருக்கின்றன எனத் தனி டிராக்கில் பயணிக்கும் ஹரிஷ் கல்யாணை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பிக் பாஸுக்கு முன், பின்னு உங்க கரியரை இரண்டாகப் பிரிக்கலாம். இந்த ஃபீல் உங்களுக்கும் இருக்கா?’’

``சினிமாவே ஒரு மேஜிக்கல் உலகம்தான். நினைச்சா ஒரே நைட்ல பிரபலமாகிடலாம். ஆனா, எனக்கு அப்படி ஒரே ராத்திரில இது நடந்திடலை. நிறைய வருடங்கள் போராட்டத்துக்கு அப்புறம்தான் சின்னதா ஒரு இடம் கிடைச்சிருக்கு. மக்கள் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு ஏத்துக்கிட்டாங்க; அன்பை வெளிப்படுத்துறாங்க. இதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்

``நீங்க என்ன ராசி. உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’’

``கன்னி ராசிதான் ப்ரோ. ராசி, ஜாதகம் போன்ற விஷயங்கள்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா, அதை மட்டுமே நோக்கிப் போறவன் நான் இல்லை. `தனுசு ராசி நேயர்களே’ படத்துல என்னுடைய கதாபாத்திரம் அப்படியே இதுக்கு நேரெதிர். படத்துல ராசி, ஜாதகத்தை மட்டுமே நம்பி இருக்கிற பையன்தான் நான். இந்த மாதிரியான விஷயங்களை நம்பலாமா, நம்பக்கூடாதாங்கிறதை செம ஜாலியா சொல்ற படம்தான் `தனுசு ராசி நேயர்களே.’ என்கூட முனீஸ்காந்த் நடிச்சிருக்கார். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச ரெண்டு படங்களும் ரொமான்டிக்கா இருந்தது. ஒரு படம் முழுக்கவே ஃபேமிலி ஆடியன்ஸுக்காகப் பண்ணிடலாம்னுதான் இந்தப் படம் பண்ணினேன்.”

``சிம்புதேவனின் ‘கற்க கசடற’ படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?”

``ஆந்தாலஜி படங்கள் பாலிவுட்ல நிறைய வந்திருக்கு; கோலிவுட் பக்கம் யாரும் இதைப் பெருசா தொட்டதில்லை. சிம்புதேவன் சார் என்கிட்ட கதை சொல்லும்போது, `இதுல நீங்க ஒரு கதை பண்ணுனா நல்லா இருக்கும்’னு என்னுடைய கதையைச் சொன்னார். கேட்டவுடனே எனக்கு ரொம்பப் பிடிச்சது. இதுவரைக்கும் நான் இந்த மாதிரியான ரோலில் நடிச்சதில்லை. ஆனா, என்னை வெச்சு இந்த மனுஷன் எப்படி இப்படி யோசிச்சார்னு எனக்குத் தெரியலை. என்னுடைய கதையில நானும் அரவிந்த் ஆகாஷும் நடிச்சிருக்கோம். எங்களைத் தவிர, ரெஜினா, ப்ரேம்ஜி, சாந்தனு, வெங்கட் பிரபு சார், சம்பத் சார், ப்ரியா பவானிஷங்கர்னு நிறைய பேர் இருக்காங்க. இந்தப் படம் எனக்குப் புது அனுபவமா இருந்தது.”

``வெங்கட் பிரபு தயாரிப்புல நடிச்சாச்சு. அவருடைய கதையில எப்போ நடிப்பீங்க?”

``வெங்கட் பிரபு சார் ஒரு கதை சொன்னார். வழக்கம்போல் அவருடைய ஸ்டைல்ல ஒரு ஜாலியான படம். கதை சொல்லும்போதே அந்த ஃபீல்ல உள்ள போயிட்டேன். அவருக்கும் அவருடைய படங்களுடைய வேலை போயிட்டிருக்கு, எனக்கும் என்னுடைய வேலை போயிட்டிருக்கு. எங்களுடைய வேலைகளை முடிச்சிட்டு நிச்சயம் படம் பண்ணுவோம்.”

``இயக்குநர் சசி படத்தில் என்ன ஸ்பெஷல்?”

`` `ரோஜா கூட்டம்’, `சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’னு விதவிதமான ஜானர்களில் படம் இயக்கியிருக்கார். இப்போ வந்திருக்கும் `சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துலகூட அவருடைய ஐடியாலஜி வேற மாதிரி இருக்கும். சிம்பிள் லைனை அவ்வளவு அழகா காட்டக்கூடியவர். எனக்கு நாலு மாசம் முன்னாடி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் நடிச்சுக்காட்டி கதை சொன்னார். கதை சொல்லி முடிச்சதும், `நான் உங்களை ஓகே பண்ணிட்டேன். நீங்க என்னை ஓகே பண்ணிட்டீங்களான்னு அப்புறம் சொல்லுங்க’ன்னு ஸ்வீட்டா சொன்னார். `நான் என்ன சார் சொல்ல, எனக்கும் ஓகேதான்’னு அப்பவே சொல்லிட்டேன். `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படத்தைத் தயாரிச்ச அதே தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். படத்துடைய ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. ரெண்டு மாசத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சிடும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism