சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இது அப்படியே ரீமேக் படமில்லை!

மாறா
பிரீமியம் ஸ்டோரி
News
மாறா

டிசம்பர் மாதம் அமேசான் தளத்தில் வெளியாகவிருக்கும் ‘மாறா’ படத்தின் இயக்குநரைச் சந்தித்தேன்.

ந்து வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சார்லி’ படத்தை, மாதவனை வைத்து `மாறா’ என்ற பெயரில் தமிழில் எடுத்திருக்கிறார், அறிமுக இயக்குநர் திலீப் குமார். டிசம்பர் மாதம் அமேசான் தளத்தில் வெளியாகவிருக்கும் ‘மாறா’ படத்தின் இயக்குநரைச் சந்தித்தேன்.

இது அப்படியே ரீமேக் படமில்லை!

``முதல் படமாக ரீமேக்கைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்..?’’

“விளம்பரப் படங்கள் இயக்கும்போதே எனக்குத் தோணுற ஒன்லைனர்களை வெச்சும், என்னை இன்ஸ்பயர் பண்ணுன சிறுகதைகளை வெச்சும் சில கதைகள் பண்ணிட்டிருந்தேன். அப்படிப் பண்ணிய கதைதான், ‘கல்கி.’ இதை 40 நிமிடங்களுக்கு ஒரு குறும்படமாக எடுத்து நெட்ப்ளிக்ஸில் ரிலீஸ் செய்தோம். இந்தக் குறும்படத்தோட தயாரிப்பு நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ்தான், ’மாறா’ படத்தையும் தயாரிச்சிருக்காங்க. முதலில் என்னை இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணுறதுக்குத்தான் கேட்டாங்க. நானும், `ரீமேக் படம்தானே; ஈஸியா தமிழாக்கம் பண்ணிக் கொடுத்திடலாம்’கிற எண்ணத்தில் ஓகே சொன்னேன். ஆனால், அவங்க என்கிட்ட, ‘எங்களுக்கு சீன் பை சீன் ரீமேக் பண்ண வேணாம். அந்தக் கதையோட மையக்கருவை வெச்சுக்கிட்டு வேற மாதிரி இந்தப் படத்தை எடுக்கணும்’னு சொன்னாங்க. ஆர்வத்துடன் நான் கதையை எழுதி முடிச்சதும் என்னையே டைரக்ட் பண்ணுறதுக்கும் கேட்டாங்க.

பொதுவா ரீமேக் பண்ணுற படங்களில் வித்தியாசங்கள் காட்டணும்னு கேரக்டர்களை வெச்சு ட்விஸ்ட் கொடுக்கிறது; சில சீன்ஸ் மாத்துறதுன்னு பிளான் பண்ணுவாங்க. ஆனால் நாங்க, இந்தக் கதையோட டிஎன்ஏவை மட்டும் மாற்றாமல், வேற ஒரு கதையைச் சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதனால `சார்லி’யை ஓரமாக வெச்சுட்டு `மாறா’வை எப்படி எடுக்கலாம்னு பிளான் பண்ணினோம். அதேநேரத்தில் ‘சார்லி’ தரும் உணர்வை அப்படியே ‘மாறா’ தரும்.’’

இது அப்படியே ரீமேக் படமில்லை!

`` ‘மாறா’ நடிகர்கள்?’’

‘`நான் இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் வொர்க்குக்காக கமிட்டாகுறதுக்கு முன்னாடியே மாதவன் சார் ஹீரோவா கமிட்டாகிட்டார். துல்கர் நடிச்ச கேரக்டருக்கும் மாதவன் சார் நடிச்சிருக்கிற கேரக்டருக்கும் சம்பந்தம் இருக்காது. அதே மாதிரி, பார்வதி நடிச்ச கேரக்டரை ஷ்ரத்தா நாத்திற்குக் கொடுக்கலாம்னு நாங்க அவங்களை கமிட் பண்ணலை. நாங்க எழுதுன கதைக்கு யார் நடிச்சா நல்லா இருக்கும்னு பார்த்துத்தான் கமிட் பண்ணினோம். ஹீரோ, ஹீரோயினைத் தவிர மெளலி சார், ஷிவதா, ஸ்டாண்டப் காமெடியன் அலெக்சாண்டர் பாபுன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.

இது அப்படியே ரீமேக் படமில்லை!

மலையாளத்தில் ‘சார்லி’ ஒரு பக்கா மியூசிக்கல் படமா இருந்துச்சு. அதே மாதிரி, இந்தப் படமும் மியூசிக்கலா ரொம்ப நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். படத்தோட பாடல்களை எல்லாம் நானும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் ரொம்ப ஆர்வமா வொர்க் பண்ணினோம். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே முக்கியமான காட்சிகளுக்கு எல்லாம் பின்னணி இசையை முடிச்சிட்டோம். அந்தக் காட்சி களைப் படமாக்கும்போது, பின்னணியில் அந்த சீனுக்கான பின்னணி இசையைப் போட்டுத் தான் ஷூட் பண்ணினோம். அது ரொம்பவே புது அனுபவமா இருந்துச்சு.’’

இது அப்படியே ரீமேக் படமில்லை!

``நீங்க இயக்கும் முதல் படம் தியேட்டரில் ரிலீஸாகாமல், நேரடியாக அமேசான் தளத்தில் வெளிவருவதை எப்படி உணர்கிறீர்கள்?’’

``உலகம் இப்போ சந்திச்சிட்டி ருக்கிற பிரச்னைகளுக்கு மத்தியில் என் முதல் படம் தியேட்டரில் ரிலீஸாகாதது ரொம்ப சின்ன பிரச்னைதான். இதுக்காக வருத்தமோ, கோபமோ பட ஒன்றுமில்லை. இந்த விஷயத்தில் தயாரிப்புத் தரப்பு எடுத்த முடிவு ரொம்பவே சரின்னு நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், கடந்த சில வருடங்களாகவே ஓடிடி தளத்துக் காக மட்டுமே நிறைய பேர் படங்கள் எடுத்திட்டிருக்காங்க. அப்படி ஒரு படமாக `மாறா’ இருக்கட்டும்னு மகிழ்ச்சியோடு இந்த முடிவை ஏத்துக்கிட்டேன்.’’