Published:Updated:

``கும்முருடப்பருனா... இம்பாசிபிள் மீம்ஸ்... ஹீரோ கஷ்டம் சூரி..!’’ - சாட் வித் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

'நம்ம வீட்டு பிள்ளை'யாக சூப்பர் ஹிட் கொடுத்தவர், அடுத்து சூப்பர் ஹீரோவாக வந்து நிற்கிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் தனி இடத்தைப் பிடித்துவிட்டார் சிவகா. `ஹீரோ'வை சந்தித்தோம்.

''சிவகார்த்திகேயன்கிட்ட கேட்கணும்னு நினைச்ச முதல் கேள்வி இதுதான். ஆமாம், அந்த 'கும்முருடப்பரு'னா என்ன அர்த்தம்?''

``கும்முருடப்புருனா, ஐரிஷ் மொழியில சந்தோஷமா இருங்கன்னு அர்த்தம். அப்படினு சொல்லிக்க வேண்டியதுதான். ஆனா, அந்தக் கும்முருடப்புரு வரியை இமான் அண்ணாதான் சொன்னார். நான் அவர்கிட்ட `காந்தக் கண்ணழகி'னு ஒரு பாட்டுப் பண்ணலாம்னு படம் ஆரம்பிக்கும்போது சொல்லியிருந்தேன். 'காந்தக்கண்ணழகி' பாட்டை நீங்களே எழுதிருங்க'ன்னு பாண்டிராஜ் சார் சொல்லிட்டார். அப்படி எழுதினதுதான் அந்தப் பாட்டு.''

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

``ஹீரோவா அறிமுகமாகப் போற நடிகர் சூரி-க்கு உங்க அட்வைஸ் என்ன?''

``அட்வைஸ்லாம் எதுவும் இல்லை ப்ரோ. ஒரு நாள் என்கிட்ட வந்து `தம்பி, உங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன்'னு சொல்லி வெற்றிமாறன் சார் படம் பற்றிச் சொன்னார். கையைக் கொடுத்து 'நீங்க பண்ணலாமா வேணாமானுலாம் யோசிக்காதீங்க.... உங்களுடைய வேற ஒரு பரிமாணத்தை வெற்றிமாறன் சார் வெளிக்காட்டுவார். நிச்சயம் பண்ணுங்க'ன்னு சொன்னேன். சூரி அண்ணா மாதிரி ஒரு மனிதனுக்கு இது கிடைக்கவேண்டிய அங்கீகாரம்தான். நடிகரா வர்றதுக்கு முன்னாடி எக்கச்சக்க வேலைகள் பார்த்தவர் அவர். ஹீரோவா மாறுறதுல இருக்கிற கஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியும். இந்தப் படத்தோட முதல் நாள், முதல் ஷோவுக்காக ஐ'ம் வெயிட்டிங்.''

''தமிழில் இப்போது நிறைய வெப்சீரிஸ்கள் வர ஆரம்பித்துவிட்டன. வெற்றிமாறன், கெளதம் மேனன் என முன்னணி இயக்குநர்கள் வெப்சீரிஸ்களை இயக்குகிறார்கள். OTT பிளாட்ஃபார்ம் தமிழ் சினிமாவுக்கு நல்ல வருமானத்தைத் தர ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க?''

'' OTT பிளாட்ஃபார்ம், மொழி எல்லைகளை உடைக்குதுனு நினைக்கிறேன். சமீபத்துல இந்த பிளாட்ஃபார்ம்ல என்னோட 'நம்ம வீட்டு பிள்ளை' ரிலீஸ் ஆகியிருக்கு. என்னோட ட்விட்டர் டைம்லைன் போனா, ஆந்திராவிலிருந்து அவ்ளோ மெசேஜஸ். வேற வேற நாடுகள்ல இருந்தும் இந்த வழியா படங்கள் பார்க்கிறாங்க. இது இன்னும் அதிகப்படியான மக்களுக்கு படங்களைக் கொண்டுபோய் சேர்க்குது. தயாரிப்பாளருக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்குது. வெப் சீரிஸ்கள் ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா, பர்சனலா எனக்கு எதைப் பார்த்தாலும் முடிவை உடனே தெரிஞ்சிக்கணும். காத்திருந்து காத்திருந்து பார்க்குறது பிடிக்காது.''

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

''நல்லா காமெடி பண்றவங்க எல்லாம் ஹீரோவாகிட்டாங்க. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் குறைஞ்சிட்ட மாதிரி இருக்கே?''

''எனக்கு அப்படித் தோணலை. இப்பதான் தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்காங்கன்னு நினைக்கிறேன். சூரி அண்ணண், சதீஷ், யோகிபாபு, ரோபோ ஷங்கர் அண்ணன், முனீஷ்காந்த், காளி வெங்கட்னு நிறையப் பேர் இப்ப சினிமாவில் இருக்காங்க. அப்புறம், வடிவேல் சார் திரும்ப வந்துட்டார். விவேக் சார் இப்ப நிறைய படங்கள் பண்றார். அதனால, நகைச்சுவை நடிகர்களுக்கு எந்தப் பஞ்சமும் இல்லாமத்தான் போயிட்டிருக்கு. ஆனா, இன்னைக்கு இருக்கிற சேலஞ் மீம்ஸ். தினம் தினம் ஏகப்பட்ட மீம்ஸ் பார்க்குறோம். அதுல பெரிய கிரியேட்டிவ் பிரில்லியன்ஸ் இருக்கு. அதனால, சினிமாவில் காமெடி குறைஞ்சிடுச்சோன்னு ஒரு எண்ணம் இருக்கலாம். ஆனால், சினிமாவில் அப்படிப்பட்ட காமெடிகளை செஞ்சிட முடியாது. அந்த மீடியத்துக்குனு சில எல்லைகள் இருக்கு. சீக்கிரத்திலேயே முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையமாகக் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வரும்.''

``உங்களுடைய படங்கள் பார்த்துட்டு உங்க மகள் ஆராதனா என்ன சொல்வாங்க?''

``அவங்க என் படத்தை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க. என்னைப் பத்தி ஒரு தொகுப்பு நியூஸ் சேனல்ல வரும்போது, என்னுடைய `மிஸ்டர் லோக்கல்' சரியாப் போகலைங்கிற மாதிரி அதில் சொன்னாங்க. உடனே பாப்பா, `நல்லாத்தானே இருந்துச்சு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது, தியேட்டர்லேயும் எல்லாரும் சிரிச்சாங்களே'னு சொன்னாங்க. நான் ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டா, என்னுடைய படங்கள் பத்திப் பேசுவாங்க. `இந்தப் படம் என்ன கதை', `யார் டைரக்டர்'னு ஏதாவது கேட்டுட்டே இருப்பாங்க. அவங்களோட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''

சிவகார்த்திகேயனின் முழுமையான பேட்டி நாளை வெளியாகும் ஆனந்த விகடன் இதழில்..!

அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு