Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''செய்தி வாசிக்கிறதை விட டப்ஸ்மாஷ் கஷ்டமா இருக்குப்பா!’’ - மெர்சி சித்ரா கலாய்

மெர்சி

''ஒரு டீச்சரா கெத்தா எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கணும் என்பதுதான் என் சின்ன வயசு ஆசை. ஆனால், அம்மாவின் ஆசைக்காகப் பகுதி நேரச் செய்தி வாசிப்பாளராக கேமிரா முன்னாடி வந்தவள், இப்போ முழு நேரச் செய்தி வாசிப்பாளராகவே மாறிட்டேன்'' என்கிறார் கலைஞர் டி-வி செய்தி வாசிப்பாளர் மெர்சி சித்ரா. 

மெர்சி

''என் சொந்த ஊர் சென்னை. பி.ஏ ஆங்கிலம் படிச்சு முடிச்சதும், பி.எட் படிச்சு ஆசிரியராக நினைச்சேன். சர்ச்ல அடிக்கடி பைபிள் வாசிப்பேன். என் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்குனு நிறைய பேர் பாராட்டுவாங்க. அதனால், 'பகுதி நேரச் செய்தியாளர் வேலைக்குப் போ'னு அம்மா சொன்னாங்க. அவங்க ஆசைக்காக, எம்.ஏ படிச்சுக்கிட்டே செய்தி வாசிப்பாளர் வேலைச் செய்யறதுன்னு முடிவுப் பண்ணினேன். முதன்முதலில் சத்தியம் டிவியில்தான் செய்தி வாசிச்சேன். என் உச்சரிப்பு ரொம்பப் பிடிச்சுபோய், ஃபுல் டைமா வேலைப் பார்க்கச் சொன்னாங்க. சரின்னு முழு நேர செய்தி வாசிப்பாளரானேன். இப்போ, கரஸ்ல எம்.ஏ படிச்சுட்டிருக்கேன். சொல்ல வரும் ஒரு செய்தியை எல்லாருக்கும் புரியுற மாதிரி சரியாகவும் வேகமாகவும் சொல்றதுதான், ஒரு செய்தி வாசிப்பாளரின் முக்கிய தகுதி. எவ்வளவு பெரிய நியூஸையும் லைவ்வாக திணறாமல் வாசிச்சிருவேன். அதைப் பார்த்து நியூஸ் ஹெட் நிறைய முறை பாராட்டியிருக்கார்'' என்கிற மெர்சி சித்ரா, பாட்டுப் பாடி கேட்பவர்களை சொக்கவைப்பவர். 

மெர்சி

''எனக்குப் பாடுறது அவ்வளவுப் பிடிக்கும். கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானியும் தெரியும். டப்ஸ்மாஷ் பண்றதும் என் பொழுதுபோக்கு. நான் டப்ஸ்மாஷ் பண்ற வீடியோவை அப்லோடு பண்றதுக்காகவே, Dubsmash Mercyனு  ஃபேஸ்புக்ல பேஜ் வெச்சிருக்கேன். உண்மையைச் சொன்னா... செய்தி வாசிக்கிறதை விட டப்ஸ்மாஷ் ரொம்ப கஷ்டம்பா. கொடுக்கிறதை வாசிக்கிறதுக்கும், ஒருத்தர் பேசினதை அப்படியே பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். என் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் ஆதித்யா டிவியிலும் வரும். சின்னத்திரையில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துச்சு. இப்போதைக்கு அதில் ஆர்வமில்லை. வெள்ளித்திரையில் சின்னச் சின்ன டப்பிங் வொர்க், சில படங்களில் நியூஸ் வாசிக்கிற மாதிரியான காட்சிகள் மட்டும் பண்ணிட்டிருக்கேன். கேமிராவை நினைச்சு எனக்கு எப்பவும் பயம் கிடையாது. ஆனால், ஒரு மாசத்துக்கு முன்னாடி, பத்து வயசு குழந்தை ஒண்ணு கர்ப்பமாகி, ஆப்ரேஷன் பண்ணி அவள் வயித்திலிருந்து குழந்தையை வெளியில் எடுத்த நியூஸைப் படிக்கும்போது ரொம்பவே கலங்கிட்டேன். நம்ம சமூகம் இவ்வளவு மோசமாக இருக்கேன்னு நினைச்சப்போ கோபம் கோபமா வந்துச்சு'' என்கிற மெர்சி சித்ரா, தேவாலயத்தில் ஊழியம் செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 

மெர்சி

''சர்சுக்குப் போகும்போதெல்லாம் எனக்குள் ஓர் அமைதி உண்டாகும். எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் அதுதான். அங்கே பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவேன். சமீபத்தில், சர்ச் மூலம் ஜெர்மனிக்கு அனுப்பி வெச்சாங்க. அங்கே இருபது நாள் சர்வீஸ் பண்ணிட்டு வந்தேன். கடவுளுக்காகச் சேவை பண்றது பிடிச்ச விஷயம்'' என்று நெகிழ்கிறார் மெர்சி சித்ரா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்