Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“தியேட்டர்ல வாட்ஸ்அப் பார்க்க வைக்காதீங்க ப்ளீஸ்!” - ஓர் இயக்குநரின் வேண்டுகோள்

'பாணா காத்தாடி'... இயக்குநருக்கும் ஹீரோ அதர்வாவிற்கும் முதல் படம். இன்றைய ஆந்திர மருமகள் சமந்தா இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும்  முதன்முதலில் திரையில் தோன்றியது இந்த படத்தில்தான். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அடுத்ததாக இயக்கியிருக்கும் படமான 'செம போத ஆகாத' பற்றி தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். 


அதர்வா

ஷார்ட் ஃபிலிம்னா என்னனே தெரியாத சமயத்துல அதுக்கு தேசிய விருது வாங்கியது பத்தி சொல்லுங்க...

“ஆமாங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஷாட்ர் ஃபிலிம்க்கான ஸ்பேஸ் ரொம்ப ரொம்ப குறைவு. நாங்க ஃபிலிம் இன்ஸ்டியூட்ல படிச்சதுனால ஷார்ட் ஃபிலிம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அந்த நேரத்துலதன் ஃபிக்சன் கேட்டகரில தேசிய விருது கிடைச்சது. எடிட்டர் லெனின் தான் எங்களோட பெரிய இன்ஸ்பிரேஷன். அவர்தான் ஷார்ட் ஃபிலிம்க்கான ஒரு அமைப்பை கொடுத்தார். ஆனா, இப்போ கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரியான ஆட்கள் இன்னைக்கு ஷார்ட் ஃபிலிமை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டாங்க. படம் இயக்கணும்னு கனவோடு இருக்கவங்களை ஷார்ட் ஃபிலிம் மூலமா சினிமாக்குள்ள போகலாம்னு ஒரு ட்ரெண்ட் செட் பண்ணிட்டாங்க."

ஷார்ட் ஃபிலிம் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு 'பாணா காத்தாடி'. அந்த இடைவெளிக்கான காரணம் என்ன?

"ஷார்ட் ஃபிலிம்களுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, படம் பண்ண முடியாம போச்சு. அந்த நேரங்கள்ல நான் டிவில கொஞ்சம் பிஸியா இருந்தேன். சீரியல், ரியாலிட்டி ஷோனு நிறைய எபிசோட்கள் பண்ணேன். சன் டிவில 'நாளைய நட்சத்திரம்'னு ஒரு ஷோ பண்ணோம். அப்புறம் 'கிங் க்வீன் ஜேக்'னி விஜய் டிவில ஷோ பண்ணினோம். அதுலதான் அனிருத், தர்புகா சிவா எல்லாம் பெர்ஃபார்ம் பண்ணாங்க. ஜெகன், ரம்யாவுக்கு இதுதான் ஆங்கரிங்ல முதல் ஷோ. இப்படி நிறைய ரியாலிட்டி ஷோக்கள் பண்ணிட்டு இருந்ததுதான் காரணம்."

'பாணா காத்தாடி' படத்துல அதர்வா, சமந்தானு எப்படி முடிவு பண்ணீங்க?

"முதல்ல பண்ண வேண்டிய படம் இன்னும் பண்ணலை. அந்த கதையைதான் தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அப்போதான் இந்த கதையை படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. இப்போவும் அந்த கதையை பண்ணலாம்னு தயாரிப்பாளர் சொல்லிருக்காங்க. அது ஹாரர் ஜானர்ல இருக்கும். இந்த கதை இல்லாம இன்னொரு கதைக்குத்தான் அதர்வா ஹீரோனு முடிவு பண்ணிருந்தேன். சமந்தா ஏற்கனவே சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் முதலில் வெளியானது 'பாணா காத்தாடி' தான். படத்துக்கு மூணு மாசம் வொர்க்‌ஷாப் பண்ணோம். அதனால அவங்க புது முகங்களாவே தெரியலை. முரளி சாரை கலாய்க்கத்தான் அந்த படத்துல அவருக்கு ஒரு சீன் வெச்சோம். அது அவருக்கும் தெரியும். அவர் அவ்ளோ ஸ்போர்டிவா எடுத்து நடிச்சார். கதையில நிறைய மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுச்சு."
 

அதர்வா

அதர்வா அப்பவும் இப்பவும் உங்க பார்வையில எப்படி இருக்கார்? என்ன வித்தியாசம் இருக்குனு நினைக்குறீங்க?

“அதர்வாவை காலேஜ் ஸ்டூடன்டாகவும் பார்த்தேன். இப்போ ஒரு பெரிய சினிமா ஸ்டாராகவும் பாக்குறேன். உண்மையாக அதர்வா ஒரு சினிமா வெறியன். சின்னச்சின்ன நுணுக்கமான விசயங்களை கூட அருமையா நடிக்கிறார். சீன் என்னனு சொல்லிட்டா போதும் சூப்பரா மேனேஜ் பண்ணிடுவார். பாலா சார் படத்துல நடிச்சு நிறைய விசயங்கள்ல தன்னை செதுக்கி தயார்ப்படுத்தியிருக்கார். காலேஜ் பையான அதர்வாவுக்கும் இப்போ இருக்கும் அதர்வாவுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருக்குன்னே சொல்லலாம். இப்போ அவரே இந்த படத்தை தயாரிக்கிறார்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. "

'பாணா காத்தாடி'க்கு பிறகு இந்த படம் எடுக்க இவ்ளோ இடைவேளை ஏன்? 

“நிறைய ஷோ பண்ணிட்டு இருந்தேன். மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் மாதிரியான நிகழ்ச்சிகளை இயக்கிட்டு இருந்தேன். ஒரு வகையில் இதுவும் படம் பண்ற மாதிரிதான். ஒரு எபிசோடுக்கு 15 லட்சம் வரை செலவு செய்யப்படுது. கோடிக்கணக்கில் செலவு செஞ்சு பிரம்மாண்டமா நிகழ்ச்சி பண்றோம். டிவி இல்லைனா சினிமால நிறைய பேர் காணாமல் போயிருப்பாங்க. அதனால டிவில வொர்க் பண்றதும் ஹாப்பிதான். முதல்ல நம்மளோட அடிப்படை விசயங்களை தயார்படுத்திட்டுதான் மத்ததுக்கு போகணுங்கறது தான் என் லாஜிக். நடுவுல வேறொரு கதை ப்ளான் பண்ணேன். அது மிஸ் ஆகிடுச்சு. ஆனா, இனி அந்த கேப் இருக்காதுனு உறுதியா சொல்றேன்".

'செம போத ஆகாத' என்ன மாதிரியான படம்?

"முழுக்க முழுக்க கமர்சியல் என்டர்டெயினர் படமா கண்டிப்பா இது இருக்கும். கொஞ்சம் போரான உடனே தியேட்டர்குள்ள வாட்ஸ்அப் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க. ஆனா, இதுல அந்த சூழல் வராது, வரக்கூடாதுனு ப்ளான் பண்ணிருக்கோம். நிறைய ஸ்டரஸ்ல இருக்க மக்கள் ரிலாக்ஸ் பண்ண படம் பாக்க வர்றாங்க. கண்டிப்பா 'செம போத ஆகாத' சந்தோசப்படுத்தும்னு நம்புறோம்."
 

பத்ரி வெங்கடேஷ்

உங்களோட ரெண்டு படத்துலயுமே யுவன் இருக்காரே...

"என் முதல் படத்துக்கு கிடைச்ச வெற்றிக்கு யுவன் முக்கிய பங்கு. எனக்கும் யுவனுக்கும் வேவ் லெங்த் செட் ஆகிடுச்சு. 'செம போத ஆகாத' படத்துக்கு கதை சொன்ன அடுத்த நிமிஷம் கம்போசிங் போலாமானு கேட்டார். மெலடி, சைலன்ஸ், த்ரில்லர்னு யுவன் இந்த படத்தில புகுந்து விளையாடி இருக்கார். சீக்கிரம் யுவன் ரசிகர்களுக்கு விருந்து உண்டு. யுவன் இல்லாமல் படம் பண்ணமாட்டேன். என் அடுத்த படங்கள்ல நிச்சயமா யுவன் இருப்பார். "

அடுத்த ப்ளான் என்ன?

“மூணு கதை காத்திட்டு இருக்கு. இனிமே கேப் விழுந்திட கூடாதுனு கவனமாவே இருக்கேன். அடுத்த படத்துக்கான வேலைகள் இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பிக்கும். அதுல அதர்வாவுக்கு ஒரு கதை ப்ளான் பண்ணிருக்கேன். ஆனா, யுவன் மூணு படத்துலையும் இருப்பார். 'செம போத ஆகாத' படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கிட்டாங்க. 'மெர்சல்'படத்துக்கு பிறகு நாங்கதான் வருவோம்னு நினைக்கிறேன்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்