"மருத்துவ முத்தம், ரைசாவுடன் ரொமான்ஸ்...!" - ஹரிஸ் கல்யாண் அட்டகாசம்

" 'ப்யார், பிரேமா, காதல்’ படத்திற்காக எனக்கும் ரைசாவுக்கும் வொர்க் ஷாப் போய்ட்டு இருக்கு பிரதர். தொடர்ந்து இன்னும் சில படங்களின் கதை கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் அடுத்த பட அறிவிப்பும் வரும்...  பட வேலைகள் தொடர்ந்து போய்ட்டு இருந்தாலும் 'பிக் பாஸ்' பற்றி கேட்குறவங்களும் இன்னமும் இருக்காங்க ப்ரோ." என கூலாக பேசுகிறார் ஹரிஸ் கல்யாண். முன்பை விட செம பிரஷாக இருக்கிறார். 

ஹரிஸ் கல்யாண்

"எல்லாரும் உங்ககிட்ட 'பிக் பாஸ்' பற்றி பேசுவதால்... நாங்களும் 'பிக் பாஸ்' பற்றிய கேள்வியில் இருந்தே தொடங்குகிறோம். எப்படி 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள போனீங்க?"

" 'பிக்பாஸில்' ஆரம்பிக்கும்போதே அதில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு வந்ததுங்க. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்ததால் என்னால் முதல் நாளில் இருந்து பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்புறம் எதேச்சையா என்னுடைய ஷூட்டிங் தள்ளிப்போனது. அந்த நேரத்துல 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள வந்துட்டேன். செம ஜாலியா இருக்கணும்னு நினைச்சுதான் அங்க போனேன். அதே மாதிரி ஜாலியாதான்  இருந்தேன்.  சில டாஸ்க் போது மட்டும்தான் அதை போட்டியா எடுத்துகிட்டேன்." 

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள் போகும்போதே அந்த நிகழ்ச்சியை பார்த்துட்டுதான் போனீங்களா?"

"நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி போறதுக்கு முன்னாடியே ஓவியா ஆர்மி பற்றி கொஞ்சம் தெரியும். ஷூட்டிங் இல்லாததால் கொஞ்ச நாள் ஹைதராபாத்ல இருந்தேன். சில 'பிக் பாஸ்' எபிசோட்தான் பாத்துட்டு போனேன்." 

" 'பிக்பாஸ்' வீட்டுக்குள்ள போகும்போதே எகிறி குதிச்சு எல்லாம் போனீங்களே?" 

" அந்த வாரம் நான், சுஜா, காஜல்னு மொத்தம் மூன்று இன்ட்ரோ இருந்துச்சு. ஒவ்வொரு இன்ட்ரோவும் ஒவ்வொரு மாதிரி பிளான் பண்ணிருந்தாங்க. சுஜா கிரைன்ல இருந்து இறங்குற மாதிரி. எனக்கு வந்து எகிறி குதிக்கிற மாதிரி. அது நல்லா இருந்துச்சு. பரணி ப்ரோ உள்ள வந்தப்போ கூட என்கிட்ட "நான் எகிறி குதிச்சி வெளியே போனேன். நீங்க எகிறி குதிச்சி உள்ளே வந்துருக்கீங்க'னு சொன்னார். வெளியே வந்ததுக்கு அப்புறம் நிறைய பேர் என்கிட்ட இதை பற்றி பேசுனாங்க." 

"உங்களுக்கும் பிந்து மாதவி, ரைசாவுக்கும் இருக்கிற 'கெமிஸ்ட்ரி ' பற்றி சொல்லுங்க?"

"ப்ரோ... அப்படியெல்லாம் எதுவுமே இல்லை ப்ரோ... (சிரிக்கிறார்). பிந்து மாதவி ரொம்ப அமைதியானவங்க. சண்டையெல்லாம் போட மாட்டோம். அதனால, நல்லா செட் ஆகிட்டாங்க. ரைசா ஒருவாரம்தான் இருந்தாங்க." 

"நீங்க யாருக்கும் மருத்துவ முத்தம் கொடுக்க முயற்சி செய்யலையா?" 

"அய்யோ... ஏன் இந்த கொலை வெறி. மருத்துவ முத்தம் நான் யாருக்கும் கொடுக்கலை ப்ரோ. முக்கியமா எனக்கு அந்த வாய்ப்பும் அமையலை.அமைச்சுக்கவும் விரும்பலை." 

"நல்லா பாடுறீங்க. அந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?"

"சின்ன வயசுல இருந்தே மியூசிக் ஓரளவுக்கு கத்துக்கிட்டேன். அப்படி கீபோர்டு வாசிக்கும் போதே பாடுவேன். சின்ன சின்னதா வரிகள் கூட எழுதி டியூன் போடுவேன். அதனால பாட்டு பாடுறதுல ஆர்வம் இருக்கு." 


"சிம்பு கூப்பிட்டு பரிசு எல்லாம் கொடுத்தாராமே... என்ன பரிசு கொடுத்தார்?"

" 'பியார், பிரேமா, காதல்’ படத்துக்காக உங்களுக்கும் ரைசாவுக்கும் ரொமான்ஸ் வொர்க் ஷாப் நடந்துச்சாமே..."

"ஹரிஷ் கல்யாண் ஆர்மி பற்றி என்ன நினைக்கறீங்க?" 

"நீங்க ஒரு சாயலில் பார்த்தால் விஜய் மாதிரியும், இன்னோரு சாயலில் பார்த்தால் அஜித் மாதிரியும் இருக்கீங்கனு ஒருத்தர் ட்விட்டர்ல சொல்லி இருந்தாரே... நீங்க கவனிச்சீங்களா?"

"அம்மா, அப்பா வெளியே வந்ததும் என்ன சொன்னாங்க?" என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஜாலியாக பதில் தந்தவர். அவரது அம்மா, அப்பாவையும் நமக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் ஹரிஸ் கல்யாண் பற்றி சொன்ன பதில்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்... 

முழுமையான வீடியோ பேட்டியைக் காண...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!