Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குங்பூ' பிரபுதேவா, 'மாமன் மகள்' லட்சுமி மேனன், 'அப்பா' தங்கர்பச்சான் - 'யங் மங் சங்' பெயர் காரணம் சொல்லும் இயக்குநர்.

அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில், பிரபுதேவா - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'யங் மங் சங்'. பரபரப்பான நடிகராக வலம் வந்த பிரபுதேவா கொஞ்ச கால இடைவெளியில் இயக்குநர் அவதாரம் எடுத்து, இப்போது, மீண்டும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் அர்ஜுனை தொடர்புகொண்டோம்.    
 

யங் மங் சங்

குங்ஃபூவை வெச்சு ஒரு படம் பண்ணணும்ங்கிற ஐடியா எப்படி வந்தது? 

"எங்க ஊர் நெய்வேலி பக்கத்துல ஒரு சின்ன கிராமம். அந்த ஊர்ல இருக்க தியேட்டர்ல சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் புரூஸ் லீ, ஜாக்கி சான் படம் போடுவாங்க. அந்தக் காலக்கட்டத்துல 'குங்ஃபூ' மேல ரு தனி மோகம் இருந்துச்சு. நான் காமெடி ஜானர்ல ஒரு படம் பண்ணப்போறேன்னு முடிவெடுத்த பிறகு, அதுல காமெடி மட்டும் இல்லாமல் ஒரு ரிவெஞ்ச் இருக்கணும், எமோஷன் இருக்கணும்னு நினைச்சேன். தமிழ் சினிமாக்கள்ல குங்ஃபூவை மையப்படுத்தின படங்கள்ல வந்ததில்லை. அதனால், குங்ஃபூவை வெச்சு பண்ணலாம்னு ஃபிக்ஸ் பண்ணேன். படத்துல ஃபைட் எல்லாமே சைனீஸ் ஸ்டைல்ல புதுமையா இருக்கும்."
 

பிரபுதேவா - லட்சுமி மேனன் ஜோடி இந்தக் கதைக்குச் சரியா இருக்கும்னு எப்படி நினைச்சீங்க?  

"பிரபுதேவா 'தேவி' படம் பண்ண நேரத்துலதான் இந்தக் கதையை முடிச்சிருந்தேன். காமெடி, ஆக்‌ஷன்னு ரெண்டுமே கலந்து பண்ணுற ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் குறைவு. பிரபுதேவா சார் திரும்ப வர்றார்னு தெரிஞ்சவுடனே அவர்கிட்டப் போய் இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கு கதை பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டார். இது ஒரு 1970 - 1987 வரை நடக்குற கதை. லட்சுமி மேனன் நிறைய கிராமத்துப் படங்கள் பண்ணிருந்தாலும் ஒரு பீரியட் ஃபிலிம்ல அவங்க நடிச்சதில்லை. அதனால், அவங்க சரியா இருப்பாங்கன்னு தோணுச்சு."
 

பிரபுதேவா

தங்கர்பச்சான் அப்பாவா நடிக்கிறாராமே..!

"தங்கர் பச்சான் சார்தான் ஹீரோ அப்பாவா நடிக்கிறார். தான் பாதிக்கப்பட்ட ஒரு விஷயம் தனக்குப் பின்னாடி வர்றவங்களை பாதிக்கக்கூடாதுனு தன் மகனை ஒரு வீரனா மாத்தணும்னு சைனாவுக்குப் போய் குங்ஃபூ ஸ்கூல்ல விடுவார். எதுக்கு வீரனாக்குறார்ங்கிறதுக்கான பின்னணி படத்துல வரும். சொல்லப்போனா, அப்பாவோட கனவுதான் கதை. கிராமத்துப் பின்னணில யதார்த்தமா நிறைய படங்கள் பண்ணிருந்தாலும், 'சிதம்பரத்தில் அப்பாசாமி'படத்துல கொஞ்சம் காமெடி ரோல்ல நடிச்சிருப்பார். அந்த தங்கர் சார்தான் இந்தக் கதைக்கும் தேவைப்பட்டுச்சு. அவர் முழு கதையும்கேட்டவுடனே, கிராமத்து சூழல்ங்கிற காரணத்துக்காகவும், பிரபுதேவா சாரை வெச்சுப் படம் எடுத்திருந்த காரணத்தாலும் அவருக்கு இந்தக் கதை கம்ஃபோர்ட்டா இருந்துச்சு."
 

'ஜில் ஜங் ஜக்' மாதிரி அதென்ன 'யங் மங் சங்'? 

"பிரபுதேவா பேர் யங்க நாராயாணன், ஆர்.ஜே.பாலாஜி பேர் மங்கலம், 'கும்கி' அஷ்வின் பேர் சங்கர். கிராமத்துல இருந்து மூணு சின்னப் பசங்களை குங்ஃபூ கத்துக்க சைனா அனுப்புறாங்க. அவங்க அங்க போய் குங்ஃபூ கத்துக்கிட்டவுடனே, அவங்க பேரை, மாஸ்டர் யங், மாஸ்டர் மங், மாஸ்டர் சங்னு மாத்திக்கிறாங்க. பிரபுதேவா எடுக்கிற முடிவுகளுக்குக் கூட இருக்க நண்பர்கள் எப்படி பாதிக்கப்படுறாங்க. அதை எப்படி சமாளிக்கிறாங்கனு சின்ன ப்ளே இருக்கும். அந்தக் காட்சிகள் எல்லாம் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்"
 

யங் மங் சங்

லட்சுமி மேனனுக்கு என்ன மாதிரியான ரோல்? 

"தங்கர்பச்சான், சித்ரா லக்‌ஷ்மணன், ராமமூர்த்தி, ரவீந்திரன்னு நாலு பேர். அதுல, சித்ரா லக்‌ஷ்மணனோட பொண்ணுதான் லட்சுமி மேனன். அந்தப் பொண்ணை ஹீரோவுக்காக வளர்ப்பார். 1980கள்ல ஒரு பொண்ணு பிறக்கும்போதே அந்தப் பொண்ணை யாருடைய பையனுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும்னு பெத்தவங்க முடிவு பண்ற காலகட்டம். அந்தச் சூழல்ல வளர்க்கப்படுற பொண்ணு. ஆனா, ஒருத்தனுக்காக நான் ஏன் என்னை மாத்திக்கணும்? எனக்குப் பிடிச்ச விஷயங்களை நான் ஏன் தியாகம் பண்ணணும்னு யோசிக்கிற பொண்ணு கேரக்டர். அப்படி இருக்க பொண்ணு எந்தக் கட்டத்துல ஹீரோவை ஏத்துக்கிறார்ங்கிற மாதிரி லவ் ஃப்ளேவர் இருக்கும்" 
 

படப்பிடிப்பு முடிஞ்சுதா? படம் எப்போ ரிலீஸ்? 

"இன்னும் பத்து நாள் ஷூட் இருக்கு. க்ளைமாக்ஸ் ஃபைட் எடுக்க வேண்டியிருக்கு. படத்தை மார்ச்  கடைசில அல்லது ஏப்ரல் மாசத்துல ரிலீஸ் பண்ற ப்ளான் இருக்கு". 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்