வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (19/02/2018)

கடைசி தொடர்பு:08:46 (19/02/2018)

''சிரஞ்சீவி, பவன் கல்யாண்... என்னையும் சேர்த்து ஒன்பது பேர் சினிமாவுல இருக்கோம்!" - 'நல்ல நாள் பாத்து சொல்றேன்' நிஹாரிகா

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் அறிமுகம் ஆனவர், நிஹாரிகா. கல்லூரிப் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் நிஹாரிகா, தன் எதார்த்தமான நடிப்பால் ஆடியன்ஸை 'வாவ்' சொல்ல வைத்திருக்கிறார். விஜய்சேதுபதியுடன் 'மாமா'னு பேசுவதாக ஆகட்டும், கெளதம் கார்த்திக்கின் லூஸுத்தனத்தைப் பார்த்து காதல் செய்வதாகட்டும், தனக்குக் கொடுத்த போர்ஷனை ரசிக்கும்படி  நடித்த, நிஹாரிகாவிடம் கொஞ்சம் ஜாலி சாட்...

நிஹாரிகா

''சொந்த ஊர் ஆந்திரா. என் குடும்பத்தில் பலபேர் சினிமாவில் டாப் ஹீரோக்கள். அப்பா நாகேந்திர பாபு தயாரிப்பாளர் மற்றும் நடிகர். அப்புறம் சீரஞ்சீவி, நாகேந்திரா பாபு, பவன் கல்யாண் இவங்க எல்லோரும் அப்பாகூட பிறந்த ப்ரதர்ஸ். தெலுங்கு சினிமாவுல எல்லோரும் டாப் ஹீரோ லிஸ்ட்டில இருக்காங்க. என்னையும் சேர்த்து என் குடும்பத்தில் ஒன்பது பேர் சினிமாவில் இருக்காங்க. 

என் குடும்பத்துல இன்னும் சில பேர் டாக்டரா இருக்காங்க.  நான் பத்தாவது படிக்கும்போது, டாக்டர் ஆகணும்னுதான் நினைச்சேன். ஆனா, வீட்டுல இருந்த டாக்டர்களே, 'வேண்டாம் பாப்பா, டாக்டருக்குப் படிக்குறது ரொம்பக் கஷ்டம்'னு சொல்லிட்டாங்க. காலேஜ்ல மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். அப்போ எனக்கு சினிமா மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. 

நிறைய ஸ்க்ரிப்ட் எழுதுவேன். வெப் சீரியஸுக்கு நான் கதை, திரைக்கதை எழுதியிருக்கேன். எனக்கு ப்ரொடக்‌ஷன் மேல ஆர்வம் அதிகம். அந்த வொர்க்கும் பார்த்திருக்கேன். திடீரென்னு எனக்கு ஆக்டிங் மேல ஆர்வம் வந்திருச்சு. உடனே, அப்பாகிட்ட சொன்னேன். அவர் ரொம்ப ஷாக் ஆயிட்டார். என்னை நடிக்க அனுப்புறதுக்கு ரொம்பவே யோசிச்சார். 

என் பெரியப்பா, சித்தாப்பானு எல்லோர்கிட்டேயும் என் ஆசையைச் சொன்னேன். அவங்க எல்லோரும் ஒண்ணா பேசிட்டு, ஓகே சொன்னாங்க. பிறகென்ன?  என் முதல் படம் 'ஒக்க மனசு' தெலுங்கில் நடிச்சு முடிச்சேன். அதுல எனக்கு வலுவான கேரக்டர். படமும் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்துச்சு. ஆனா, அந்தப் படம் வசூல் ரீதியா பெருசாப் போகலை. 

அப்போதான், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தோட இயக்குநர் ஆறுமுககுமார்கிட்ட என் போட்டோவை யாரோ காட்டிருக்காங்க. அவருக்கு இந்தப் படத்துல நான் நடிச்சா நல்லா இருக்கும்னு தோணியிருக்கு. எங்க அப்பாகிட்ட கதை சொன்னார். எனக்கும் பிடிச்சிருந்தது, தமிழ்லேயும் அறிமுகம் ஆயிட்டேன்.  

நிஹாரிகா

ஆறுமுக குமார் நல்ல எழுத்தாளர். அவர் படத்தோட கதையை என்கிட்ட சொன்னப்போ, விழுந்து விழுந்து சிரிச்சேன். இரண்டு ஹீரோயின்ஸ் படத்துல இருந்தாலும், என் கேரக்டருக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க எப்போவும் செம காமெடியாதான் இருக்கும். படத்துல நடிச்ச டேனியல் ரொம்ப காமெடியான மனுஷன். படத்தைவிட ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய காமெடி அடிச்சிக்கிட்டே இருப்பார். தவிர, ரொம்ப ஸ்பீடா தமிழ் பேசுவார். அதுவே செம காமெடியா இருக்கும். பல நேரத்துல, 'இவர் தமிழ்தான் பேசுறாரா, சைனீஸ் பாஷை பேசுறாரா'னு சந்தேகமே வரும். 

எனக்கு ஜோடியா இந்தப் படத்துல கெளதம் கார்த்திக் நடிக்கப்போறார்னு தெரிஞ்சவுடனேயே, 'அவர் அப்பா பெரிய ஸ்டார் ஆச்சே, அதனால ஓவரா பந்தா காட்டுவாரோ'னு பயந்தேன். ஏன்னா, சின்ன வயசுல கார்த்திக் சார் நடிச்ச நிறைய படங்களை நான் பார்த்திருக்கேன். தெலுங்கிலும் அவர் பெரிய ஹீரோ. ஆனா, கெளதம் கார்த்திக் எந்த பந்தாவும் இல்லாம இயல்பா இருந்தார். ரொம்ப ஸ்வீட் அவர். தமிழ் வசனங்களுக்கு அவர்தான் எனக்கு உதவியா இருந்தார்.

விஜய்சேதுபதி எப்போதும் செட்ல அமைதியாதான் இருப்பார். என்கிட்ட அதிகமா பேசமாட்டார். ராஜ், ரமேஷ் திலக்கூடதான் அதிகமா பேசிக்கிட்டு இருப்பார். அவர்கூட நடிக்கும் போது நிறைய விஷயங்களை நாம கத்துக்கலாம். நல்ல நடிகர். இந்தப் படத்துல எனக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டா இருந்தது, படத்தோட இரண்டாம் பாதி முழுக்க ஆந்திராவில்தான் ஷூட்டிங் நடந்துச்சு. அங்கே தெலுங்கு பேசுறவங்கதான் அதிகம். அதனால, எனக்கும் கம்ஃபர்டபிளா இருந்தது. விஜய்சேதுபதி சார் எதுவாயிருந்தாலும் சீக்கிரம் கத்துக்குவார். அவர், ஷூட்டிங் முடியிறதுக்குள்ள அவர் தெலுங்கு பேச ஆரம்பிச்சுட்டார். அவருக்குப் படத்துல நிறைய தெலுங்கு வசனங்களும் இருந்தது. பேசும்போது ஏதாவது தப்பா சொல்லிட்டா, 'சார், இப்படி சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லணும்'னு நான் கரெக்‌ஷன் சொல்வேன்.  

நிஹாரிகா

  பட ரிலீஸுக்குப் பிறகு என் கேரக்டருக்கு கிடைக்கிற வரவேற்பு எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. ஆனா, இன்னும் வீட்டுல அப்பா இந்தப் படத்தைப் பார்க்கலை. அப்பாக்கிட்ட சென்னையில இருக்கிற நண்பர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் சொல்றதே, அவருக்கு சந்தோஷமா இருக்கு. எங்க வீட்டிலேயே அம்மாவும், அப்பாவும் எனக்குப் புரியக்கூடாதுனு தமிழ்ல பேசித்தான் சண்டை போடுவாங்க. நான் நிறைய தமிழ் படமெல்லாம் சின்ன வயசுலே இருந்து பார்த்து தமிழ் பேசக் கத்துக்கிட்டது அவங்களுக்குத் தெரியாது. தமிழ்சினிமாவுல சூர்யா சாரோட ஆக்டிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடன் ஒரு படத்துலேயாவது நடிக்கணும். தமிழ்சினிமாவுல அதிக கவனம் செலுத்தணும். ஏன்னா, எனக்கு ஏத்த ஜோடி தெலுங்கு சினிமாவுல இல்லை. எங்கிட்டுப் பார்த்தாலும் ஃபேமிலி ஆட்களே இருக்காங்க.'' எனச் சிரிக்கிறார், நிஹாரிகா. 

வெல்கம் பேபி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க