வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (27/02/2018)

கடைசி தொடர்பு:12:22 (27/02/2018)

'' 'ஜானி'யில் ஸ்ரீதேவி லவ் புரபோசல் பார்த்து ரஜினி புலம்பிட்டாரு!''- இயக்குநர் மகேந்திரன்

''என் ஜானியின் கதாநாயகி அர்ச்சனா மறைந்துபோனதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை.  ஒருவரைப் பற்றி பேசுவதற்கு அவருடன் பல படங்கள் சேர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என்றில்லை. ஒரு படம் சேர்ந்து பணியாற்றியிருந்தால்கூட போதும் என்பேன் நான். இந்த வகையில் ஸ்ரீதேவி நடிப்பைப் பற்றி சொல்வதற்கு என்னிடம்  நிறைய சம்பவங்கள் இருக்கின்றன'' என்கிற இயக்குநர் மகேந்திரன், அவற்றை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மகேந்திரன்

 ஜானியின் நாயகி அர்ச்சனா ஒரு சென்சிட்டிவான கேரக்டர். தான் விரும்பியவனின் மீது பிடிவாதமாக நம்பிக்கையும், பிரியமும் வைக்கிற கதாபாத்திரம் அது. ஶ்ரீதேவியின் நடிப்பும் அழகும் தனித்தன்மையானது என்பதாலேயே அந்தக் கதாபாத்திரத்துக்கு அவரைத் தேர்ந்தெடுத்தேன்.

 ஶ்ரீதேவி நடித்த அர்ச்சனா கதாபாத்திரத்தை, படம் வெளிவந்த 1980-ல், தூய்மையான கதாபாத்திரம் என்று பத்திரிகைகள் வர்ணித்தன. அந்தளவுக்கு என் நாயகியின் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருந்தார் ஶ்ரீதேவி.

ஜானி படத்தின் பாடகி கதாபாத்திரம் பற்றி ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஶ்ரீதேவியிடம் சொல்லியிருந்தேன். முதல் நாள் ஷூட்டிங். காரில் இருந்து எப்படி இறங்கினார் தெரியுமா ஶ்ரீதேவி? வார்ம் கலர் காட்டன் புடவை, இழுத்துப் போர்த்திய முந்தானை, கழுத்தில் ஒற்றை சர முத்துமாலை என்று இறங்கினார். நான்  என் நாயகியை ஸ்கிரீனில் எப்படிக் காட்ட வேண்டும்  என்று மனதுக்குள் முடிவெடுத்திருந்தேனோ, அப்படியே வந்திருந்தார் ஶ்ரீதேவி. நான் ஆச்சர்யப்பட்டு இதை அவரிடம் சொன்னபோது, 'இந்த பாடகி கேரக்டருக்கு நீங்கள் இப்படித்தான் மனதுக்குள் காஸ்ட்யூம் டிஸைன் செய்து வைத்திருப்பீர்கள் என்று யூகித்தேன்; என்று சொல்லி சிரித்தார். 

ஜானி

 என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. இன்டோர் ஷூட் ஆரம்பித்துவிட்டால், இரவு 9 மணியை மாலை 6 மணி என்று நினைத்து வேலை செய்துகொண்டிருப்பேன். நடு ராத்திரி 12 மணியை இரவு 9 மணி என்று நினைத்து எல்லோரையும் வேலை வாங்கிக்கொண்டிருப்பேன். அதிலும் ஊட்டிப் பனியில் நேரமே தெரியாது.  ஜானியில் நடிக்கும்போது அவருக்கு 20 வயதுகூட ஆகவில்லை. ஆனால், அந்த வயதுக்கு உரிய 'எப்ப ஷூட் முடியும்' என்கிற படபடப்பில்லாமல், விடிய விடிய ஷூட் என்றாலும் அமைதியாக நடித்துக்கொண்டிருப்பார்.

 ரஜினியிடம், ஶ்ரீதேவி தன் காதலை சொல்கிற சீனையும் ஒரு நள்ளிரவில்தான் எடுத்தேன். அந்த சீனை இரண்டு நாள்களுக்கு முன்னால்கூட சேனல் ஒன்றில் பார்த்தேன். நாள் முழுக்க நடித்த களைப்பே அவர் முகத்தில் தெரியாது. 

 ஶ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லிவிட்டு, 'நான் அப்படித்தான்' என்று கண்களைத் துடைப்பார். அந்த சீனின் ரிகர்சலை குளோசப்பில் பார்த்த கேமராமேன் சட்டென்று ஒரு கமென்ட் பண்ணிவிட்டார். நிச்சயம் அந்த கமென்ட் ஶ்ரீதேவியின் காதிலும் விழுந்திருக்கும். அவ்வளவு நெருக்கத்தில்தான் கேமரா இருந்தது. இந்த கமென்ட்டுக்குப் பிறகு இந்தப் பெண் இயல்பாக மறுபடியும் அந்த சீனை நடிக்குமா என்று நான் பயந்தேன். ஆனால், அந்த கேலியை காதில் வாங்கியதாகவே காட்டிக்கொள்ளவில்லை அந்தப் பெண். 

ந்த காதல் சீனை ரஷ் பார்த்த ரஜினி என்னிடம், 'ஶ்ரீதேவிதான் இந்த சீன்ல ஸ்கோர் பண்ணிட்டாங்க' என்று புலம்பினார். நான்தான் அர்ச்சனா கதாபாத்திரத்தின் கனத்தை எடுத்துசொல்லி அவரை சமாதானப்படுத்தினேன்.

னக்குத் தெரிந்த வரைக்கும் ரொம்ப லைட்டா மேக்கப் போடுறவங்க அவங்க. 

ஜானி

 ஜானி படத்தில் பல சீன்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறாரா அல்லது நடித்து முடித்துவிட்டாரா என்று புரியாமல் பார்த்திருக்கிறேன். பல தடவை கட் சொல்லவும் மறந்துபோய் அவருடைய நடிப்பை ரசித்திருக்கிறேன். அவர் பிறவி நடிகை.

வர் நடித்த 'மீண்டும் கோகிலா' திரைப்படத்தை முதலில் நான்தான் இயக்குவதாக இருந்தது. அப்போது எனக்கு போன் செய்து, ''சார் உங்களுடன் மறுபடியும் ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நிறைவேறிவிட்டது' என்றார். ஆனால், அவர் ஆசை நிறைவேறவே இல்லை. 

 


டிரெண்டிங் @ விகடன்