``தனுஷ் கூட இனி அடிக்கடி சண்டைபோட வேண்டி இருக்கும்!" - 'மாரி-2' டொவினோ தாமஸ்

"எனக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. கல்லூரிப் படிப்பை கோயம்புத்தூர்லதான் முடிச்சேன். அதனாலேயே எனக்கு நிறைய தமிழ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க!" - கொஞ்சம் மலையாளம் கொஞ்சம் தமிழ் கலந்து கியூட்டாகப் பேசுகிறார், 'அபியும் அனுவும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் டொவினோ தாமஸ். 

டொவினோ தாமஸ்

கெளதம் மேனனின் அறிமுகம் எப்படி கிடைச்சது?

" 'அபியும் அனுவும்' படத்தோட ஷூட்டிங் போயிட்டிருந்தப்போ கொச்சினிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட்ல வரும்போது கெளதம் சாரைப் பார்த்தேன். ரெண்டுபேரும் நிறைய சினிமா சார்ந்த விஷயங்களைப் பேசினோம். சென்னைக்கு வந்தபிறகு கெளதம் சார்கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு. '' 'ஒன்றாக' மியூசிக் ஆல்பத்துக்கு நீங்க ஃபர்பார்ம் பண்ணணும்னு' சொன்னார். ஏற்கெனவே அவங்க பண்ண 'கூவ' பாட்டைப் பார்த்தவுடனேயே எனக்கு பயங்கர ஷாக். ஏன்னா, அதுல டான்ஸ் மாஸ்டர் சதீஷோட ஃபர்பாமென்ஸ் சூப்பரா இருந்தது. எனக்கு டான்ஸ் அவ்வளவா வராது. அதை அவர்கிட்ட சொன்னேன். 'நீங்க டான்ஸ் பண்ணவேணாம். நான் சொல்ற இடத்துல லிப்சிங் பண்ணுங்க போதும்'னு சொன்னார். அந்த ஆல்பத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. அதுக்கு முழுக் காரணம், கெளதம் சார்தான்!"   

டொவினோ தாமஸ்

தமிழ் ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு?

"இந்த ஆல்பத்துல என்னைப் பார்க்கும்போது எனக்கே என்னை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. மலையாளத்துல நிறைய படங்கள் பண்ணிருந்தாலும், என்னை மக்கள் தெரிஞ்சிக்கிறதுக்கு நிறைய டைம் எடுத்துச்சு. ஆனா, இந்த ஆல்பம் மூலமா தமிழ் ஆடியன்ஸ் என்னை எங்கே பார்த்தாலும் கரெக்டா அடையாளம் கண்டிபிடிச்சுப் பேசுறாங்க. ஐ யம் ஸோ ஹாப்பி." 

தமிழில் டப்பிங் பேசுவீங்களா?

"கண்டிப்பா பேசுவேன். 'அபியும் அனுவும்' படத்துக்கு ரெண்டு நாள்ல டப்பிங் பேசிட்டேன். இப்போ 'மாரி 2' படத்துக்கும் நானே டப்பிங் பேசுவேன். என் வாய்ஸ் எப்படி இருக்குனு ஆடியன்ஸ்தான் சொல்லணும்." 

'அபியும் அனுவும்' படத்துல சீனியர்ஸ்கூட நடிச்ச அனுபவம்? 

"டைரக்டர் விஜயலட்சுமி மேடமும் பிரபு, மனோபாலா, ரோகிணி எல்லோரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். பெரிய நடிகர்களோட நடிக்கிறதுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனா, எல்லோரும் சூப்பரா நடிச்சாங்க, என்னோட டயலாக் டெலிவரிக்கு நிறைய ஹெல்ப் பண்ணாங்க. சந்தோஷமா இருந்தது!"

டொவினோ தாமஸ்

'மாரி 2' ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்கள்? 

"இந்தப் படத்துல நான் நடிக்கிறதைப் பத்தி கேரளாவுல இருக்குறவங்ககூட கேட்கிறாங்க, அப்டேட்ஸ் விசாரிக்கிறாங்க. ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருக்கும். நிறைய வசனங்களை இந்தப் படத்துல பேசியிருக்கேன். அதுக்குப் பலரும் எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க. மலையாளத்துல நிறைய படத்துல வில்லன் ரோல் பண்ணியிருக்கேன். தமிழில் 'மாரி 2'ல தனுஷூக்கு வில்லன் கேரக்டர் பண்றதுல எனக்கு செம ஹாப்பி. தாடியெல்லாம் வெச்சுட்டு என்னைப் பார்க்க எனக்கே ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. இந்த செட்டே ரொம்ப பில்டப் இல்லாம இருக்கும். ஏதோ பரபரப்பா இருக்கிற மாதிரியெல்லாம் இருக்காது. எல்லோரும் அவங்கவங்க வேலையை சரியா பண்ணுவாங்க. கண்டிப்பா என் கேரக்டர் ஆடியன்ஸூக்குப் பிடிக்கும். இப்போதைக்கு அவ்வளவுதான் பேச முடியும்!" 

'மாரி 2' வாய்ப்பு எப்படி வந்தது?

"மலையாளத்திலே ஏற்கெனவே தனுஷ் தயாரிப்புல ரெண்டு படம் பண்ணியிருக்கேன். அதனால, அந்த நிறுவனத்துடன் நல்ல நட்பில் இருந்தேன். ஒருநாள் வொண்டர் பார் கம்பெனியில் இருந்து போன் வந்தது, மலையாளப் படத்துக்காகத்தான் கூப்பிடுறாங்கனு நினைச்சேன். ஆனா, 'தமிழ்ல நடிக்கணும்'னு சொன்னாங்க. வில்லனா பல மலையாளப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, தமிழ்ல வில்லனா நடிக்க கொஞ்சம் தயக்கம். ஆனா, கதையைக் கேட்ட பிறகு, 'இதை மிஸ் பண்ணிடவே கூடாது'னு கால்ஷீட் கொடுத்துட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல இதுவரை ஒரே ஒருநாள்தான் தனுஷைப் பார்த்திருக்கேன். இனிமே, நிறைய காட்சிகள் இருக்கு. அப்போ, அடிக்கடி பார்ப்பேன்னு நினைக்கிறேன்!"

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!