Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"விஜய் அப்பவே அப்படித்தான். அவர் இன்னும் மாறலை!" - 'ராஜாவின் பார்வையிலே' இந்திரஜா

இந்ரஜா

"நான் தமிழ்ப் பொண்ணு. என்னைக்குமே தமிழையும் தமிழர்களையும் மறக்கமாட்டேன். ரசிகர்களும் என்னை மறக்கக் கூடாதுனு நினைக்கிறேன்" என்கிறார் நடிகை இந்திரஜா. 'ராஜாவின் பார்வையிலே' மற்றும் 'எங்கள் அண்ணா' படங்களில் நடித்தவர். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். 

"முதல் சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?" 

''குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. எதேர்ச்சையா வந்த வாய்ப்புதான். அப்படி 'உழைப்பாளி' படத்தில் நடிகை ஶ்ரீவித்யாவின் குழந்தைப் பருவ ரோலில் நடிச்சேன். ஒன்பதாவது படிக்கும்போது 'எமலீலா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினா அறிமுகமானேன். ஒரு வருஷத்திலயே 10 தெலுங்கு படங்களில் நடிச்சுட்டேன். அதில், பெரும்பாலும் ஹிட். அங்கே பீக்ல இருந்த சமயம், 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். ஆனால், அடுத்த ஏழு வருஷம் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையலை. அதுக்காக வருத்தப்படவும் இல்லை. ஏன்னா, தெலுங்கில் மனசுக்கு நிறைவான படங்கள் அமைஞ்சது. நிறையப் புகழும் விருதுகளும் கிடைச்சது. கிட்டத்தட்ட 60 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். இப்பவும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்குது." 

"விஜய்யுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

" 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்க்கு ஜோடி. அவர் ரொம்ப அமைதியான டைப். ஆனால், நடிப்புன்னு வந்துட்டால், தூள் கிளப்பிடுவார். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். பல வருஷங்கள் கழிச்சு, விமான நிலையத்தில் ஒரு முறை அவரைப் பார்த்தேன். சின்னச் சிரிப்பை வெளிப்படுத்திக்கிட்டோம். பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலை."' 

இந்ரஜா

"ஏழு வருஷத்துக்குப் பிறகு 'எங்கள் அண்ணா' படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த அனுபவம் பற்றி..." 

"2000-ம் வருஷத்துக்குப் பிறகு மலையாள சினிமாவில் என்ட்ரி ஆனேன். முதல் படத்திலேயே மம்முட்டி ஜோடி. தொடர்ந்து மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்ட டாப் ஹீரோகளோடு நடிச்சேன். மலையாளத்தில் ஹிட்டான 'க்ரோனிக் பேச்சுலர்' படத்தில் ஹீரோ மம்முட்டிக்கு எதிரான ரோலில் நான் நடிச்சேன். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்தான் 'எங்கள் அண்ணா'. அதிலும், நெகட்டிவான பவானி ரோலில் நானே நடிச்சேன். பல வருஷத்துக்குப் பிறகு தமிழில் நடிச்சதில் ரொம்ப சந்தோஷம். ஆனால், அதுக்கு அப்புறமும் தமிழில் வாய்ப்பு கிடைக்கலை." 

"தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கலையேனு கொஞ்சமும் ஆதங்கம் இல்லையா?" 

"நான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவளா இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியும். இருந்தும் மற்ற மொழிகளில் கிடைச்ச அங்கீகாரம், தாய் மொழியான தமிழில் கிடைக்கலையேன்னு ஆதங்கம் இருக்கு. கன்னடத்திலும் அஞ்சு படங்களில் நடிச்சிருக்கேன். இப்பவும் தமிழ் சினிமாவில் நடிக்க தயார். போன வருஷம் நான் நடிச்ச தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட். இப்போ, 'ஹேப்பி வெடிங்' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன்.'' 

குடும்பத்துடன் இந்திரஜா

"சீரியல் ஆக்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"சன் டிவி 'பாசம்', என் முதல் சீரியல். அந்த சீரியல் நல்லா போயிட்டிருந்த சமயத்தில் சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு, சீரியலே ட்ராப் அவுட் ஆகிடுச்சு. தொடர்ந்து, 'ஆண் பாவம்', 'பைரவி', 'வள்ளி' உள்ளிட்ட சீரியல்களில் நடிச்சேன். சினிமாவுக்கு இணையான ரோல் கிடைச்சா சீரியலில் நடிப்பேன்." 

"உங்க குடும்ப வாழ்க்கைப் பற்றி..." 

"கணவர் முகமது அப்சர், பிரபல சின்னத்திரை நடிகர். 'சொந்தம்' சீரியலில் நடிச்சபோது அவரின் ஆக்டிங் பிடிச்சுப் பாராட்டினேன். அப்போ ஆரம்பிச்ச நட்பு, காதலாகி 2006-ம் வருஷம் எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. ரெண்டு பேருமே ஆக்டிங் ஃபீல்டில் இருக்கிறதால், ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியுது. எங்க பொண்ணு சாரா, நாலாவது படிக்கிறாள். நான் நடிச்சுகிட்டிருக்கும் சமயத்தில், கணவர் கால்ஷீட் எதுவும் கொடுக்காமல் குழந்தையைக் கவனிச்சுக்கும் பொறுப்பை ஏற்பார். அதேமாதிரி, அவர் நடிக்கும் சமயத்தில் நான் குழந்தையைப் பார்த்துப்பேன். எங்க குழந்தை எந்தக் காரணத்தாலும் தனிமையை உணரக்கூடாது என்பதில் நாங்க உறுதியா இருக்கோம்.'' 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்