Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``டெலிவரிக்கு முந்தின நாள் வரை ஷூட்டிங்கானுலாம் கேட்டாங்க?!" ’ஹாப்பி மாம்’ நீலிமா ராணி

நீலிமா ராணி

``பொண்ணு பிறந்த பிறகு தாய்மை அனுபவத்தை மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவளின் அன்பினால் என் வொர்க்கை சிறப்பாகச் செய்ய உதவுது" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை நீலிமா ராணி. 

``கர்ப்பிணியாக இருந்தபோது நடிச்ச அனுபவம் பற்றி..." 

``நான் கர்ப்பமான தருணம், சீரியல் கதையிலும் கர்ப்பிணியா இருக்கிற மாதிரி மாத்தினாங்க. அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. டெலிவரிக்கு முன்னாடி, சீமந்தம் நடக்கிற மாதிரியான காட்சியில்தான் கடைசியா நடிச்சேன். அது ஷூட்டிங்னாலும், சீரியல் டீம் எல்லோரும் எனக்கு நிஜமாகவே சீமந்தம் செய்து அனுப்பிவெச்சாங்க. என்னையே ஒரு குழந்தை மாதிரி கவனிச்சுக்கிட்டாங்க. சொந்த அம்மா வீட்டில் இருக்கும் உணர்வைக் கொடுத்துச்சு." 

நீலிமா ராணி

``உங்க பொண்ணு என்ன சொல்றாங்க?'' 

`` `அம்மா... அம்மா'னு கூப்பிட்டு சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கிறா அதிதி இசை. மே மாசம் முதல் பிறந்தநாள் வருது. டெலிவரிக்கு முந்தின நாள் வரை நடிச்சுட்டிருந்தேன். குழந்தை பிறந்த ஒரு மாசத்திலேயே மறுபடியும் ஷூட்டிங் போயிட்டேன். அங்கே குழந்தையைப் பார்த்துக்க எனக்காகத் தனியா ஒரு ரூம் கொடுத்துட்டாங்க. என் பொண்ணும் ரொம்ப சமத்து. ஷூட்டிங் டைமில் அழுது அடம் பிடிக்காம அமைதியாவே இருப்பாள். `கர்ப்பமா இருக்கும்போது நடிப்பா? குழந்தை பிறந்ததுமே ஷூட்டிங்கா?'னு பலரும் பயப்பட்டாங்க. ஆனால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாமே நம்ம கையில்தான் இருக்கு. எல்லா விஷயத்தையும் பாசிட்டிவா எதிர்கொண்டால், எல்லாமே சாத்தியமே.'' 

``உங்களின் முதல் சீரியலுக்கும் இப்போதைக்குமான அனுபவத்தை எப்படிப் பார்க்கறீங்க?" 

``என் முதல் சீரியல், ஆறாவது படிக்கிறப்போ, `ஒரு பெண்ணின் கதை'. படிச்சுக்கிட்டே தமிழ், தெலுங்கு, மலையாள சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். பத்தாவது படிக்கும்போது, சன் டிவியின் `அச்சம் மடம் நாணம் பிருந்தாவனம்', ஹீரோயினா என் முதல் சீரியல். 25 வருஷத்தில் அறுபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சாச்சு. இப்போ வொர்க்ல நிறைய டெக்னிக்கல் மாற்றங்கள் வந்திருக்கு. முன்பைவிட சேனல்கள், சீரியல்கள், ஆர்ட்டிஸ்டுகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கு. கால மாற்றங்கள் வேகமா சிறப்பா நடந்துட்டிருக்கு." 

நீலிமா ராணி

 

``தயாரிப்பாளர் அனுபவம் எப்படி இருக்கு?" 

``இதுவரை ஒரு நடிகையா ஷூட்டிங் வந்தோமா, ஸ்கிரிப்டைப் பார்த்து நடிச்சுட்டு கிளம்பினோமானு இருந்தேன். நடிப்பைத் தாண்டி ஒரு சீரியலை டெலிவரி பண்றதில் எத்தனை சவால்கள் இருக்கு எனப் புரிஞ்சிருந்தாலும் அதை அனுபவிச்சதில்லை. ஜீ தமிழின் `நிறம் மாறாத பூக்கள்' சீரியலை தயாரிச்சேன். கதை தயாரிப்பு, ஆர்டிஸ்ட் செலக்‌ஷன், சேனல், டெலிகாஸ்டிங் என எல்லா வேலைகளையும் செய்துமுடிச்சப்போதான் சவாலை நிஜத்தில் உணர்ந்தேன்." 

``சினிமாவில் கவனம் செலுத்துறதை குறைச்சுட்டீங்களா?" 

``இல்லை. சீரியல்களில் நடிக்கிறது, குழந்தையைக் கவனிச்சுக்கிறதுனு நேரமின்மையே காரணம். நல்ல கேரக்டர்கள் வந்தால் சினிமாவிலும் நடிப்பேன். இப்போ, `கஜினிகாந்த்' மற்றும் `சத்ரு' படங்களில் நடிச்சிருக்கேன். `தேவர் மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமா சினிமா பயணத்தை ஆரம்பிச்சு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். பிறகு சீரியலில் பிஸியாகிட்டேன். சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தும், நடிக்க நேரமில்லை. ஆனாலும், சப்போர்ட் ரோல்களில் நடிச்சேன். அதில், `திமிரு', `நான் மகான் அல்ல'னு பல படங்கள்ல புகழ் கொடுத்திருக்குது. தமிழ், தெலுங்கில் 30 படங்கள் வரை நடிச்சிருக்கேன்."
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்