Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"சர்வானந்துக்கும் எனக்கும் பிரச்னைனு கிளப்பிவிட்டாங்களே... அது என்னன்னா..?!" சாய் பல்லவி

மலையாளக் கலையோரம் தமிழ் பாடிய சாய்பல்லவி, தற்போது தெலுங்கிலும் பிஸி. `இவரது நடிப்புக்கும், நடனத்துக்கும் ஆடிப்போனது ஆந்திரா' என்று கூறினால் அது மிகையாகாது. இப்படிப் பக்கத்து மாநிலங்களை மட்டும் என்டர்டெயின் பண்ணிக்கொண்டிருந்த இவர், தற்போது `கரு' படத்தின் மூலம் தமிழ்நாட்டையும் எட்டிப்பார்க்கிறார். அவருடனான சந்திப்பிலிருந்து...

சாய் பல்லவி

`` `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் உங்களுக்குக் கிடைத்த அனுபவம் எப்படி இருந்துச்சு? அதுல கலந்துக்கிட்டவங்ககூட இப்பவும் தொடர்புல இருக்கீங்களா?"

``சின்ன வயசுல இருந்தே எனக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட அம்மா டான்ஸ்மேல எனக்கு இருக்குற ஆர்வத்தைப் பார்த்துட்டு, மாதுரி திக்ஷித், ஐஸ்வர்யா ராய் அவங்களோட டான்ஸ் வீடியோ எல்லாத்தையும் போட்டுக் காட்டினாங்க. அதையெல்லாம் பார்த்துதான் நான் வளர்ந்தேன். இதுவரை டான்ஸ் க்ளாஸுக்குப் போய் முறையா கத்துக்கிட்டது இல்லை. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில கலந்துக்கும்போது எனக்கு விவரம் தெரியாத வயசு. ஏதோ ஆர்வக்கோளாறுல மேடையேறி தைரியமா ஆடிட்டேன். ஆனா, இப்போ நடக்குற ரியாலிட்டி ஷோக்கள்ல நடுவர்கள் கொடுக்குற கமென்ட்ஸ், போட்டியாளர்களோட சிரமம் எல்லாத்தையும் பார்க்கும்போது கொஞ்சம் பயமா இருக்கு. ஷெரிஃப் அண்ணா இப்போ ரொம்ப பிஸியா இருக்கிறதுனால அவர்கிட்ட என்னால சரியாப் பேச முடியலை. மத்தபடி எல்லார்கிட்டயும் நட்புறவோடதான் பழகிக்கிட்டு இருக்கேன்."

`டான்ஸ்ல ஆர்வம் எப்படி உருவாச்சு?"

``நான் எப்போ டான்ஸ் ஆடினாலும் என்னோட சந்தோஷத்துக்காகத்தான் ஆடுவேன். போட்டியில ஜெயிக்கணும்ங்கிற எண்ணம் இருந்ததில்லை. டான்ஸ் என்னோட சந்தோஷத்துல ஒரு பாதினு சொல்லலாம். ரோட்டுல யாராவது என்னைப் பார்த்து, `நீங்கதானே அந்த டான்ஸ் ஷோல ஆடுற பொண்ணு'னு கேட்கும்போது, வர்ற சந்தோஷத்துக்கு அளவே கிடையாது." 

``டான்ஸ் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கும்போதே சினிமா ஆர்வம் இருந்ததா?" 

``எனக்கு சினிமா நடிகை ஆகணும்ங்கிற எண்ணம் சின்ன வயசுல இருந்து கிடையாது. டான்ஸ்ல இருந்த ஆர்வத்துனால `கதக்' கத்துக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்போதான் தெலுங்கு டிவி நிகழ்ச்சியில டான்ஸ் ஆடினேன். அப்போவே சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. படத்துல நடிக்கட்டுமானு வீட்ல கேட்டப்போ, என் அம்மா `முடியவே முடியாது'னு சொல்லிட்டாங்க. டான்ஸுக்கு அடுத்து எனக்கு ரொம்பப் பிடிச்சது, மருத்துவம். அதனாலதான், டாக்டருக்குப் படிக்கணும்னு முடிவெடுத்தேன். 

நான் ஐந்தாவது படிக்கும்போது என் அம்மா, எனக்கு இருக்குற மேடை பயம் போகணும்ங்கிறதுக்காக நிறைய  நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிக்கிட்டு போவாங்க. அப்போ ஏதோ ஒரு சினிமா ஏஜென்ட் என்னை நடிக்க வைக்கிறேன்னு அம்மாகிட்ட சொல்லியிருந்தார். அப்படி நடந்ததுதான், `கஸ்தூரிமான்', `தாம்தூம்' படங்கள். அப்போகூட நடிக்கணும்ங்கிறதைவிட, க்ளாஸ் கட் அடிக்கணும்ங்கிற எண்ணம் மட்டும்தான் இருந்துச்சு. அப்புறம்தான் `ப்ரேமம்' வாய்ப்பு வந்துச்சு. அப்போகூட என் வீட்ல, `நீ நடிக்கிறதுனால உன்னோட படிப்பு எந்த விதத்துலேயும் பாதிச்சுடக் கூடாது'னு சொன்னாங்க. அதனால, படத்தை வின்டர் ஹாலிடேஸ்லதான் ஷூட்டிங் பண்ணாங்க. மலையாள படம்ங்கிற காரணத்துனாலதான் நடிக்க ஒப்புக்கிட்டேன். அப்போதான் என்னோட நண்பர்கள் யாருக்கும் நடிப்புல நான் பண்ற மிஸ்டேக் தெரியாதுனு நெனச்சேன்."                                                                                                                                                                                                               

ஆனா, அந்த மலையாளப் படத்தை இவ்வளவு தமிழ் மக்கள் பார்ப்பாங்கனு எனக்குத் தெரியாம போச்சு. தெரிஞ்சதுனா கண்டிப்பா நடிச்சிருக்கவே மாட்டேன். ஆனா, இப்போ நடிக்க நடிக்க நான் நடிப்புக்கு அடிமையாகிட்டேன். கேமரா முன்னாடி வேறு ஒரு ஆளா நிற்கும்போது, அதோட ஃபீலிங் வேற லெவல்."

சாய்பல்லவி

``கிளாமர் ரோல்ல நடிப்பீங்களா?"

``என் அம்மா, அப்பா என்னுடைய சந்தோஷத்துக்காக நடிக்க அனுப்பியிருக்காங்க. அவங்க மனசு நோகுறமாதிரி எதையும் செய்யமாட்டேன். அதனாலதான், சேலை மாதிரியான ட்ரெடிஷனல் காஸ்டியூம்களை மட்டும் விரும்புறேன். நான் தேர்ந்தெடுக்குற படங்களும் அப்படியான படங்கள்தான். குறைந்த ஆடைகள்ல நான் என்னை வசதியா உணரலை; அது எனக்கு செட்டும் ஆகாது. ஸோ,  க்ளாமர் பண்ணமாட்டேன்."

``உங்க சிறந்த பொழுதுபோக்கு டிராவலிங்னு சொல்லியிருக்கீங்க... எப்படியான இடங்களுக்குப் போறது பிடிக்கும்?" 

``எனக்குப் போகாத இடங்களுக்குப் போய் எங்க என்ன இருக்குனு எக்ஸ்ப்ளோர் பண்ணப் பிடிக்கும். காடு, மலைனு கரடு முரடான இடங்களுக்குப் பயணிக்கணும். என்னோட சொந்த ஊர் கோத்தகிரி. அங்கே எக்ஸ்ப்ளோர் பண்றதுக்கான இடங்கள் நிறைய இருக்கு. மனசை இலகுவா வெச்சுக்கிறதுக்கு இது சிறந்த வழினு நினக்கிறேன். மத்தபடி, எனக்கு உலகத்தைச் சுத்திப் பார்க்கணும்ங்கிற எண்ண்மெல்லாம் இல்லை."

``அடுத்ததா சர்வானந்த்கூட தெலுங்குல நடிக்கிறீங்களே..."

``நான் இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படத்தோட ஷூட்டிங்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஏன்னா, எல்லோருமே செம ஜாலி டைப். ஏதாவது சீரியஸ் காட்சிகளுக்கு நடிக்கும்போதுகூட சிரிப்பு காட்டிகிட்டே இருப்பாங்க டீம் மெம்பர்ஸ். இப்போதைக்கு எல்லாமே அவுட்டோர் ஷூட்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். அடுத்த மாசத்துல இந்தப் படப்பிடிப்பு முடிந்திடும். 

சாய்பல்லவி

எந்தவொரு காட்சியில நடிக்கிறதா இருந்தாலும், சர்வானந்த் என்கூட டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் போவார். நாங்க நடிக்கும்போது எங்களுக்குள்ள ரொம்ப வசதியா உணரணும்ங்கிறதுல ரொம்ப கவனமா இருந்தோம். சில சமயம் அவர் எனக்கு இப்படி நடிச்சா நல்லா இருக்கும்னு அவரோட கருத்துகளைச் சொல்வார். சர்வானந்த் சார்கூட யார் நடிச்சாலும் சரி, அவங்களை ரொம்ப வசதியா உணர வைப்பார். நடுவுல எங்க ரெண்டு பேருக்கும் சண்டைனு கிளப்பிவிட்டாங்க. அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க இப்போவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்தான்" என்று முடித்தார், சாய்பல்லவி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement