வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (17/05/2018)

கடைசி தொடர்பு:08:39 (17/05/2018)

``விஜய்க்கு வில்லனா நடிக்கணும்!" - அமித் பார்கவ் ஆசை

``விஜய் சாரோட தீவிர ரசிகன் நான். இதுவரைக்கும் அவரை நேர்ல பார்த்ததில்லை. விஜய் படத்தில் வில்லனா நடிக்கணும்னு ஆசை இருக்கு!" - `நெஞ்சம் மறப்பதில்லை' அமித் பார்கவ்

``விஜய்க்கு வில்லனா நடிக்கணும்!

`` `பாகுபலி' அளவுக்குப் பிரமாண்டமா மகாபாரதத்தைப் படமா எடுத்தா, அதுல கிருஷ்ணன் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசை" என்று கூறும் அமித் பார்கவ் தற்போது, `நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே, `என்னமோ ஏதோ', `என்னை அறிந்தால்', `மிருதன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, `கர்ஜனை' உள்ளிட்ட சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அவரிடம் பேசினேன்.  

அமித் பார்கவ்

`கல்யாணம் முதல் காதல் வரை' இவ்வளவு பெரிய ஹிட் ஆகும்னு நினைச்சீங்களா?  

`` `கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலுக்கு முன்னாடி சில படங்கள், விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் இந்தக் கதையைக் கேட்டேன். இவ்வளவு பெரிய ஹிட்டானது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எந்த ஒரு விஷயத்தையும் நான் ரீச் இருக்காதுனு நினைச்சு உதாசீனப்படுத்தமாட்டேன். அதுக்குக் கிடைச்ச பரிசு இதுனு நினைக்கிறேன்!" 

`நெஞ்சம் மறப்பதில்லை' விக்ரம் பற்றி சொல்லுங்க...

`` `நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல்ல போலீஸ் கேரக்டர்ல நடிக்கிறேன். அதுக்காக நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். துப்பாக்கிச் சுடுதல், போலீஸ் ராங்கிங் மாதிரி பல விஷயங்களை யூ-டியூப்ல பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த சீரியல்ல எனக்கு அப்பாவா நடிச்சிருக்கவர், ரியல் போலீஸ். அவரும் எனக்கு சில டிப்ஸ் கொடுத்தார்."

`நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல்ல இருந்து நிஷா ஏன் வெளியேறுனாங்க?

``நானும் நிஷாவும் நல்ல நண்பர்கள். அவங்க இந்த சீரியலை விட்டுப்போனது எனக்கு ஏமாற்றம்தான். அவங்களுக்கும் அவங்களுக்குக் கொடுத்த கேரக்டருக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருந்துச்சு. ஏன்னா, அவங்க இந்தக் கேரக்டரை ஹீரோயினா நினைச்சாங்க. ஆனா, போகப் போக அவங்க கேரக்டர் ரொம்ப நெகட்டிவா மாறிக்கிட்டு இருந்தது. அதுதான் காரணம். இப்போ, அவங்களுக்குப் பதிலா சௌந்தர்யா நடிக்கிறாங்க. அவங்க தாய்மொழி கன்னடம். இந்த சீரியலுக்காகக் கடினமா உழைச்சுக்கிட்டு இருக்காங்க" 

நிஷா- அமித் பார்கவ்

கன்னட `பிக் பாஸ் 2' நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்த அனுபவம்? 

``ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வீட்டுக்குள்ள என்ன நடக்குதுனு பார்த்துக்கிட்டே இருப்பேன். நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைச்சது. தமிழ் `பிக் பாஸ்' நிகழ்ச்சியில பரணி எப்படி வெளியேற முயற்சி செய்தாரோ, அதேமாதிரி கன்னடத்துலேயும் ஒரு சம்பவம் நடந்துச்சு. `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள நடந்த சண்டை காரணமா ஒருத்தர் வெளியேறணும்னு சொன்னப்போ, கன்ஃபெக்‌ஷன் ரூமுக்கு எல்லோரையும் வரவெச்சுப் பேசினது, ரொம்ப சுவாரஸ்யமான அனுபவம்."  

`பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில உங்களைப் போட்டியாளரா கூப்பிட்டா, போவீங்களா?  

``கண்டிப்பா போவேன். முதல் பகுதியிலேயே கூப்பிட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் ஒரு பார்வையாளரா  நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, நல்ல எக்ஸ்பெரிமென்ட்டா இருந்துச்சு. என்னை நானே டெஸ்ட் பண்ணிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். `பிக் பாஸ்' வீட்ல எல்லோரையும் ஹேண்டில் பண்றது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். அந்த வீட்ல நாம ஒரு விஷயம் நல்லதுனு நினைச்சுப் பண்ணுவோம், அது நமக்கே கெடுதலா அமைந்திடும். அதனால, `பிக் பாஸ்' மூலமா நமக்கு ரீச் கிடைக்கும்ங்கிறதைத் தாண்டி, நம்மை நாமே டெஸ்ட் பண்ணிக்கிற நிகழ்ச்சியா இருக்கும்." 

சினிமாவுல என்னென்ன பண்ணனும்னு ஆசை? 

``சின்ன வயசுல ஒரு வருடம் வயலின் கிளாஸ் போனேன். என் குடும்பத்துல எல்லாரும் பாடுவாங்க. அதனால பாட்டு பாடுற ஆர்வம் எனக்கும் இருக்கு. அதனால, வாய்ப்பு கிடைச்சா, பாடணும்னு ஆசை.  இதுவரை விஜய் சாரை  பார்க்கிற பாக்கியம் கிடைச்சதில்லை. அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். அவர் தேர்ந்தெடுக்கிற கதைகள் பிரமாதமா இருக்கும். அவர் படத்துல வில்லன் ரோல் பண்ணணும்ங்கிற கனவு இருக்கு. தவிர, எல்லாப் படங்களிலும் ஹீரோவைவிட வில்லனைத்தான் நான் ரசிச்சுப் பார்ப்பேன். வெப் சீரீஸ் ஒன்றுக்கு கதை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். மனைவியைத் துன்புறுத்துற நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கப்போறேன்" 

மனைவி ஸ்ரீரஞ்சனி ஆங்கரிங் பண்றதைப் பார்த்து கமென்ட்ஸ் கொடுப்பீங்களா?

``அப்பப்போ சொல்வேன். ஸ்ரீரஞ்சனிக்கு ஆங்கரிங் பண்ற எல்லா திறமையும் இருக்கு. ஒரு நிகழ்ச்சியை எப்படிக் கொண்டுபோகணும்னு அவங்களுக்குத் தெரியும். கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்ல அவங்க நடிப்பை இன்னும் ஃபைன் டியூன் பண்ணா நல்லாயிருக்கும். அவங்களுக்கு இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைக்கணும்னு ஆசைப்படுறேன்." 

மனைவி ஸ்ரீரஞ்சனியுடன் அமித் பார்கவ்

`கர்ஜனை' படம் பற்றி சொல்லுங்க? 

`` `கர்ஜனை' படத்துல த்ரிஷாகூட முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட ஷூட்டிங் கொடைக்கானல்ல நடந்தது. த்ரிஷா ரொம்ப இயல்பா பழகக்கூடிய ஒரு நடிகை. நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. எல்லா விஷயத்தையும் ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணுவாங்க. பக்குவமான நடிகை!" 

Amit Bhargav

ஹீரோவாக நடிக்கிறதுல விருப்பம் இருக்கா?"

``நான் நடிக்க வந்து நாலு வருடம்தான் ஆகுது. அதுக்குள்ள ஹீரோவா நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம். ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் மாதிரி வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கணும்னு ஆசைப்படுறேன். எனக்குப் புகழ் முக்கியமில்லை. நடிக்கிறது என்னோட வேலை. அதனால, என்ன கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன்." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்