Published:Updated:

`` `துருவ நட்சத்திரம்' படத்துல டான்ஸ் ஆடிக்கிட்டே வேலை பார்த்தோம்!" - மாயா

பிர்தோஸ் . அ

`மகளிர் மட்டும்' படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை மாயா, அவரது அடுத்த படங்களான `துருவ நட்சத்திரம்' மற்றும் `2.0' பற்றி பேசியிருக்கிறார்.

`` `துருவ நட்சத்திரம்' படத்துல டான்ஸ் ஆடிக்கிட்டே வேலை பார்த்தோம்!" - மாயா
`` `துருவ நட்சத்திரம்' படத்துல டான்ஸ் ஆடிக்கிட்டே வேலை பார்த்தோம்!" - மாயா

``என் முதல் படம் `வானவில் வாழ்க்கை', சினிமா வாய்ப்பு எதிர்பார்க்காம கிடைச்சதுதான்! எனக்கு முன்னாடியே என் அக்கா சினிமாவுல சிங்கரா இருந்ததுனால, சினிமா ஃபீல்ட் எப்படி இருக்கும்னு எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க அட்வைஸ் எல்லாம் இப்போவரைக்கும் கரெக்டா ஃபாலோ பண்றேன்!" - அக்காவுக்குப் பெரிய நன்றியோடு பேசுகிறார், மாயா. 

``எனக்குச் சின்ன வயசுல இருந்தே முடி நீளமா இருக்கும். சினிமாவுல நடிக்கும்போது ஒரு கேரக்டருக்காகப் பாய் கட் பண்ணி நடிச்சேன். தொடர்ச்சியா இதே ஹேர் ஸ்டைல்ல சில படங்கள் நடிச்சதுனால, ஒரே மாதிரியான கேரக்டர்களே அதிகம் தேடி வந்தன. தவிர, ஆடியன்ஸூக்கு என் லுக் இப்படித்தான்னு ரிஜிஸ்டர் ஆயிடுச்சு. அதனால, சில சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கேன். சினிமாவுல சவாலான கேரக்டர்கள் நிறைய பண்ணணும்னு எனக்கு ஆசை. `மகளிர் மட்டும்' படத்துல என் கேரக்டர் எனக்கே ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்துல நான் நிறைய காட்சிகள் நடிச்சிருந்தேன். எடிட்டிங்ல கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு. ஆனாலும், அந்தப் படத்தைப் பார்த்த பலரும் பாராட்டினாங்க. `நீ நல்லா நடிக்கிற'னு சொல்றதைக் கேட்குறப்போ, அவ்ளோ சந்தோஷமா இருக்கு. இப்போ கெளதம் மேனன் சாரோட `துருவ நட்சத்திரம்' படத்துல நடிச்சிருக்கேன். ஷங்கர் சாரோட `2.0' படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணியிருக்கேன்.

எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் கெளதம் சார் ஆபீஸ் இருந்தது. ஆடிஷன் போனப்போ, `சின்ன ரோல்தான் ஓகேவா!'னு கேட்டாங்க. கெளதம் சார் படமாச்சே... சரினு சொல்லிட்டேன். பிறகு, `துருவ நட்சத்திரம்' டீம்ல இருந்து ஒரு மெசேஜ் வந்தது. `ஸாரி... நாங்க பிளான் மாத்திட்டோம். படத்துல உங்களுக்கு மெயின் கேரக்டர்!'னு சொன்னப்போ, என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஏன்னா...விக்ரம், சிம்ரன், ராதிகா, டிடினு இந்தப் படத்துல இருக்கிறவங்க எல்லாம் டாப் ஸ்டார்ஸ்! `துருவ நட்சத்திரம்' செம ஜாலி டீம். டான்ஸ் ஆடிக்கிட்டே வேலை பார்த்தோம்னுகூட சொல்லலாம். எல்லாத்துக்கும் காரணம், கெளதம் சார்.

கெளதம் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல மியூசிக் பாண்ட் எப்பவும் இருக்கும். ஃப்ரீயா இருக்கும்போது, அவர் எனக்கு டியூன்ஸ் சொல்வார். அதுக்கு நான் பாட்டு எழுதுவேன். சின்ன விஷயமா இருந்தாலும், மனம் திறந்து பாராட்டக்கூடிய மனிதர், கெளதம். அவரை என் மென்ட்டாரா நினைக்கிறேன். `துருவ நட்சத்திரம்' படத்துல விக்ரம் சார்கூட எனக்கு நிறைய சீன்ஸ் கொடுத்திருக்கார்!" என்ற மாயா, ரஜினியுடனான `2.0' அனுபவங்களைச் சொல்கிறார்.

``இந்தப் படத்துக்கும் ஆடிஷன் மூலமாதான் போனேன். பொதுவா எந்த நடிகரைப் பார்த்தாலும் எனக்கு ஆச்சர்யம் வராது. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினி சாரைப் பார்த்ததுமே ஸ்ட்ரக் ஆகி நின்னுட்டேன். `2.0' படத்துல ரஜினி சாரும், நானும் வர்ற சீன்ஸ் இருக்கு. இதுக்குமேல இந்தப் படத்தைப் பத்திப் பேசுனா, ஷங்கர் சார் அடிக்க வந்திடுவார். வேற விஷயத்துக்குப் போயிடலாம். எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை இருக்கு. சினிமாவுல இன்னும் பல நல்ல கேரக்டர்கள் பண்ணணும். அதேசமயம், மனசுக்குப் பிடிச்சுப் பண்ற தியேட்டர் டிராமாவையும், குழந்தைகளுக்கான `கிளவுனிங் டாக்டர்' வேலையையும் விட்டுடக் கூடாது!" என்று முடித்தார், மாயா.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..