வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (11/06/2018)

கடைசி தொடர்பு:10:08 (11/06/2018)

"கீரை விற்கும்போது உடைஞ்சு அழுதுட்டேன்!" - நடிகை நந்திதா

தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருக்கும் நந்திதாவிடம் அவரது படங்கள்குறித்துப் பேசினோம்.

"இப்போ தமிழ்ல மூணு படம், தெலுங்குல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் வீட்டுக்குப் போய் ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்போகூட ஒரு தெலுங்குப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்" உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், நந்திதா.  
 

நந்திதா

தெலுங்குப் படங்கள்ல ரொம்ப பிஸியா இருக்கீங்களே! 

" 'எக்கடக்கி போதாவு சின்னவாடா' படம் நல்ல ஹிட். அதுக்கு அப்புறம்தான், எனக்கு தெலுங்குல நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இப்போ, 'சதுரங்க வேட்டை' ரீமேக்ல நடிச்சிருக்கேன். 'ஶ்ரீநிவாச கல்யாணம்'னு ஒரு படத்துல நித்தின்கூட நடிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தப் படத்துல என் கேரக்டர் பெயர் பத்மாவதி. துறுதுறுனு இருக்கிற வாயாடி பொண்ணு. படத்துக்காக புல்லட் ஓட்ட கத்துக்கிட்டேன். படம் முழுக்க என்னை புல்லட் வண்டியில பார்க்கலாம். பாவாடை தாவணி கட்டிக்கிட்டு புல்லட் ஓட்டுறது ரொம்பவே சவலா இருந்தது. தமிழ்நாட்டுல 'குமுதா' மாதிரி இந்தப் படத்திலிருந்து டோலிவுட்ல 'பத்து'னு ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைக்கிறேன். தவிர, ஹீரோயினை மையப்படுத்திய கதை, ஒரு ஹாரர் த்ரில்லர் படம்னு பரபரப்பா போகுது."

 'அசுரவதம்' படத்துல நடிச்ச அனுபவம்?

"எனக்கு சசிகுமார் சாரோட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ஏன்னா, அவர் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்கள் நிறையப் பண்ணுவார். எனக்கும் அது செட்டாகும். இதுக்கு முன்னாடி அவர்கூட நான் ரெண்டு படங்கள்ல நடிக்க வேண்டியது, முடியாமப்போச்சு. இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மூலமா என்னை கான்டக்ட் பண்ணாங்க. படத்துல சசிகுமார் மனைவியா நடிச்சிருக்கேன். எனக்கும் சரி, சசி சாருக்கும் சரி... ரொம்ப மெச்சூர்டான ரோல். ரிவெஞ்ச் - சென்டிமென்ட் போர்ஷன் அதிகமா இருக்கும். 'அசுரவதம்' நல்ல அனுபவம். ஷூட்டிங் முடியும்போது அழுதுட்டேன். சசி சார் கிரேட். எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்திடுவார்."
 

நந்திதா

ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா நடிக்கிறீங்களாமே! எப்படி ஓகே சொன்னீங்க?

"ஆமா. பாலா சாரோட உதவியாளர் கீதா இந்தப் படத்தை இயக்கப்போறாங்க. படத்துக்குப் பெயர், 'நர்மதா'. நதியைக் குறிக்கிறதுக்காக இந்தப் பெயரை வெச்சிருக்காங்க. எல்லா அம்மாக்களையும் நதியோட கம்பேர் பண்ணி எழுதப்பட்டிருக்கிற கதை. 'உப்புக்கருவாடு' படத்துக்குப் பிறகு, ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை நிறைய வந்தது. ஆனா, நான் பண்ணலை. காரணம், அந்த மாதிரி படங்கள் பண்ணும்போது மார்கெட், கான்செப்ட் எல்லாமே நம்ம ஷோல்டருக்கு வந்திடும். இவ்வளவு சீக்கிரமா அந்தப் பொறுப்பை எடுத்துக்க விரும்பலை. ஆனா, 'நர்மதா' அதுல ஸ்பெஷல். எல்லா பெண்கள் சார்பாகவும் நான் அங்கே நிற்கிறேன்ங்கிற ஃபீல் கொடுத்தது. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நாட்டுல பெண்களுக்கு நடக்கிற நிறைய முக்கியமான விஷயங்களைப் படத்துல பேசியிருக்கோம். ஸ்கிரீன்ல என்னைப் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் அந்த கேரக்டரா தன்னை உணர்வாங்க. ஒரு ஆர்டிஸ்ட்டா இந்தக் கேரக்டரை விட்டுக்கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அதனாலேயே உடனே ஓகே சொல்லிட்டேன். கண்டிப்பா இந்தப் படம் என்னையும் இயக்குநர் கீதாவையும் அடுத்த கட்டத்துக்கு கூட்டிக்கிட்டுப் போகும்!" 

என்ன மாதிரியான ரோல்?

"நாகர்கோவில்தான் கதைக்களம். ஸ்கூலுக்குப் போற ஒரு பதினாலு வயசுப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மா. ஏன், எதுக்கு, எப்படிங்கிறதுதான் திரைக்கதை. படத்துல எனக்கு ரெண்டுவிதமான லுக் இருக்கு. ஸ்கூல் போர்ஷனுக்காக நல்லா வெயிட் குறைச்சு நடிச்சிருக்கேன். இவ்ளோ சின்னப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் என்னவா இருக்கும்? அதைப் படத்துல சொல்லியிருக்கோம். கீரை விக்கிற பொண்ணு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மாடலிங் ஃபீல்டுல ஸ்டேஜ்ல ராம்ப் வாக் பண்ணிட்டிருந்தேன். இந்தப் படத்துல ரோட்டுல கீரை விக்கிறதை ஊரே நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, உண்மையாவே கண் கலங்கிட்டேன். இந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிக்கிறதை நான் பெருமையா நினைக்கிறேன்."
 

நந்திதா

இதுவரைக்கும் டான்ஸ் ஆடுறதுக்கு சரியான வாய்ப்பு அமையலைனு நினைச்சிருக்கீங்களா?

" 'அட்டக்கத்தி', 'முண்டாசுப்பட்டி' படங்கள்ல வர்ற பாட்டு எல்லாமே மான்டேஜ்தான். டான்ஸ் ஆடலை. ஆனா, நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தது. பாட்டுக்கு டான்ஸ் ஆடிதான் என்னைப் பதிவுசெய்யணும்னு இல்லை. கிளாமர் இல்லாமலே மக்கள் மனசுல இருக்கேன்னு நினைக்கிறேன். தவிர, டான்ஸ் ஆடுறதுக்கான சான்ஸ் எப்போ வேணாலும் வரும். ஆனா, பெர்ஃபாமென்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு அப்பப்போதான் கிடைக்கும். 'வணங்காமுடி' படத்துல  ஒரு பப் பாட்டுக்கு ஆடியிருக்கேன்."

 

நந்திதா

'வணங்காமுடி' படம் முடிஞ்சுதா, அரவிந்த் சாமி, சிம்ரன் மாதிரியான சீனியர்கள்கூட நடிக்கும்போது எப்படி இருந்தது?

"இன்னும் ஆறு நாள் ஷூட்டிங் பேலன்ஸ் இருக்கு. படத்துல என்னோட ஃபிளாஷ்பேக் சீனுக்கும் இப்போ நடக்கிற சீனுக்கும் எட்டு வருடம் வித்தியாசம். அதுக்காக உடம்பைக் குறைச்சிருக்கேன். போலீஸ் கேரக்டர் வேற. ஸோ, நந்திதாவை வித்தியாசமான கெட்டப்ல பார்ப்பீங்க. சிம்ரன் மேடம் ரொம்ப ஜாலி டைப். அவங்களைப் பார்த்து நிறையக் கத்துக்கிட்டேன். அரவிந்த் சாமி சாரை எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிறவங்க எல்லோரும், அவர்கிட்ட பேசணும் போன் பண்ணிக்கொடுனு கேட்பாங்க. எனக்குப் பெருமையா இருக்கும். இந்த வருஷம் ரொம்ப சூப்பரா ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு.!" என்கிறார், நந்திதா.

வாழ்த்துகள் நந்திதா !

நீங்க எப்படி பீல் பண்றீங்க