"விஜய்க்கு ஐ ஆம் வெயிட்டிங் மாதிரி, பிரபுதேவாவுக்கு 'ஐ ஆம் ரெடி'!" 'பொன் மாணிக்கவேல்' ஸ்பெஷல்

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் `பொன் மாணிக்கவேல்' படம் குறித்துப் பேசுகிறார், படத்தின் இயக்குநர் ஏ.சி.முகில்.

ன் உதவி இயக்குநர் ஏ.சி.முகில் இயக்கத்தில் `பொன் மாணிக்கவேல்' என்ற படத்தில் நடித்து வருகிறார், பிரபுதேவா. `போக்கிரி', `வெடி' படங்களில் போலீஸ் கதையை இயக்கியிருந்தாலும், முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்ககிறார். இப்படத்துக்கு `பொன் மாணிக்கவேல்' என்று பெயர் இருப்பதால், சிலைக்கடத்தல் தடுப்புத்துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் கதையா? எனக் கேள்வி எழுந்தது. இதே சந்தேகத்தோடு, இயக்குநர் ஏ.சி.முகிலை அணுகினோம்.

பொன் மாணிக்கவேல் - பிரபுதேவா

``எனக்குச் சொந்த ஊர் சேலம். நான் அங்கேதான் ஸ்கூல், காலேஜ் படிப்பை முடிச்சேன். அப்போ பொன்.மாணிக்கவேல் சார்தான் உதவி ஆணையரா இருந்தார். ஒரு கமிஷனரை இவ்வளவு எளிதா மக்கள் பார்க்க முடிஞ்சதுனா, அது அவரைத்தான். ரொம்ப ஸ்ட்ரிக்ட் அதிகாரி, சேலம் நகரத்துல அவரைத் தெரியாத ஆள்களே கிடையாது. அவரைப் பார்த்த தாக்கம்தான், எனக்கு இந்தக் கதை எழுதத் தூண்டியது. அவரோட தாக்கம் நான் உதவி இயக்குநரா வொர்க் பண்ண `போக்கிரி' படத்திலும் இருக்கும்" என ஆரம்பித்தார்.

```பொன் மாணிக்கவேல்' தலைப்புக்குக் காரணம் என்ன? இது `தீரன்' மாதிரி ஒரு நிஜ போலீஸ் அதிகாரியின் கதையா?"

``படத்துக்கு ஒரு பவர்ஃபுல் பெயர் தேவைப்பட்டது. யாருக்கும் கீழ்படியாத ஒரு போலீஸ்காரர் கதை. தவிர, இதுக்கும் பொன்.மாணிக்கவேல் சாரோட வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. எனக்குப் பிடிச்ச போலீஸ் அதிகாரிகள்ல அவரும் ஒருவர், அவ்வளவுதான். இந்தப் படம் ஒரு நேர்மையான அதிகாரி இந்தச் சமுதாயத்துல இருக்கிற சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. எனக்கும் என்னோட ஊர்காரங்க நிறையபேர் போன் பண்ணி, `இது பொன்.மாணிக்கவேல் கதையா?'னு கேட்குறாங்க. `ஊருக்குள்ள ஓராயிரம் பொன்.மாணிக்கவேல் இருக்காங்க, என்னோட ஃப்ரெண்டோட தாத்தாகூட போலீஸ் அதிகாரியா இருந்தார். அவர் பெயரும் பொன்.மாணிக்கவேல்தான்'னு சொல்லிடுறேன். அவரைப் பார்த்தா, எல்லோரும் இந்த கேரக்டரை ரிலேட் பண்ணிக்குவாங்க." 

mugil``இதுவரை  போலீஸ் கதையில் நடித்திருக்காத பிரபுதேவா இந்தப் படத்துல போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்?"

``எனக்குச் சின்ன வயசுல இருந்து போலீஸ் ஆகணும்னு ரொம்ப ஆசை. எங்க அப்பாவும் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணார். நான் ஐ.பி.எஸ் பிரிபேர் பண்ணிக்கிட்டு இருந்தேன்; சினிமாதான் எனக்கு வசப்பட்டது. எல்லோருக்கும் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி ஆகணும்னு கனவு இருந்திருக்கும். அப்படித்தான் இந்தப் படத்தோட கதையை உருவாக்கினேன். ஹீரோ செம ஃபிட்டா, உயரமா இருக்கணும்... அப்போதான், அந்த கேரக்டருக்கு ஒரு நியாயம் இருக்கும். யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சப்போ, என் மைண்ட்ல வந்தவர், பிரபுதேவா மாஸ்டர். எல்லா ஹீரோக்களுக்கும் அவங்க பண்ற போலீஸ் படம் அடுத்த லெவலுக்குக் கொண்டுபோகும். பிரபுதேவா மாஸ்டர் அப்படியெல்லாம் யோசிக்கலை. இந்தக் கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கதையைச் சொல்லும்போதே, மேனரிஸங்களை செஞ்சு பார்க்க ஆரம்பிச்சுட்டார்."

``பிரபுதேவானு சொன்னாலே நமக்கு நினைவுக்கு வர்றது, டான்ஸும், தாடியும்தான். இந்தப் படத்துல பிரபுதேவா தாடி எடுத்துட்டாரு... டான்ஸ்?"

``அய்யோ, மாஸ்டரோட டான்ஸை நான் எப்படிங்க நிறுத்த முடியும்? வழக்கமா எல்லாப் படத்திலேயும் பிரபுதேவா ஆடுவார். இந்தப் படத்துல ஒரு போலீஸ் அதிகாரியா ஆடியிருக்கார், அவ்வளவுதான். கவலையே படாதீங்க... பிரபுதேவாவோட டான்ஸை ரசிகர்கள் மிஸ் பண்ணமாட்டாங்க!." 

``எல்லா போலீஸ் படத்திலும் ஒரு டிரேட் மார்க் வசனம் இருக்கும். இந்தப் படத்துல அப்படியென்ன வெச்சிருக்கீங்க?" 

``ஹீரோ எந்தச் சவாலாக இருந்தாலும், அதைச்  சந்திக்கத் தயாராகும்போது, `ஐ ஆம் ரெடி!'னு சொல்வார். விஜய்க்கு `ஐ ஆம் வெயிட்டிங்' மாதிரி, இவருக்கு இந்த வசனம் அமைஞ்சிருக்கு. ஒரு பக்கா போலீஸ் படமா `பொன் மாணிக்கவேல்' இருக்கும்."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!