வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (22/08/2018)

கடைசி தொடர்பு:14:49 (22/08/2018)

’’நெல்சன் சொன்னதுக்காக அதைப் பண்னேன்; ஏன்டா பண்னோம்னு ஃபீலும் பண்னேன்..!’’ - ’கோகோ’ டோனி

’’நெல்சன் சொன்னதுக்காக அதைப் பண்னேன்; ஏன்டா பண்னோம்னு ஃபீலும் பண்னேன்..!’’ - ’கோகோ’ டோனி

’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா, அனிருத், யோகிபாபு என பிரபலமானவர்கள் இருந்தாலும், படம் நெடுக சின்ன சின்ன கேரக்டர்கள் நம்மை அதிகம் சிரிக்க வைத்தன. யோகிபாபுவின் பெட்டிக்கடையில் வேலைப் பார்க்கும் சிறுவன் ஆனந்தில் தொடங்கி ’கலக்கப்போவது யாரு’ ஜாக்குலின், ஜாக்குலினை காதலிக்கும் அன்பு, கேங்ஸ்டர் டீம் டோனி வரைக்கும் பல கதாபாத்திரங்கள் ரசிக்கும் படியாக இருந்தன. அதிலும் டோனி கதாபாத்திரம் பல இளைஞர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது; அதற்கு, ‘மாமே... வேற மாதிரி ஆகிடும்’ என அவர் பேசும் மாடுலேஷனும், அவர் கெட்டப்பும்தான் காரணம். அவரைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள, அவரிடமே பேசினோம்.

யார் சார் நீங்க... எங்க இருந்து வந்திருக்கீங்க..?

’’என்னோட பெயர் ரெடின்; நான் சென்னைதான். பொருட்காட்சி ஏற்பாட்டாளரா நூறு பொருட்காட்சிகளுக்கு மேல வொர்க் பண்ணியிருக்கேன். இதுதான் என்னோட தொழில். இயக்குநர் நெல்சன் சார் எனக்கு ரொம்ப வருஷமா பழக்கம். அவரோட ’வேட்டை மன்னன்’ படத்திலும் நான் நடிச்சிருக்கேன். என்னை அவரோட படத்தில் நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டார் போல; அதான் முதல் படம் வெளியாகலைனாலும் ரெண்டாவது படத்தில் நடிக்க வெச்சுட்டார்.’’

டோனி

’வேட்டை மன்னன்’ படத்தில் என்ன ரோல்..?

’’அதுலேயும் கேங்ஸ்டர் ரோல்தான். படம் முழுக்க சிம்புவோட ட்ராவல் ஆகுற மாதிரி கேரக்டர். இப்போ ’கோலமாவு கோகிலா’ பார்த்துட்டு எல்லாரும் ’டோனி... டோனி...’னு என்னைப் பற்றி பேசிட்டு இருக்காங்க. ஆனால், இந்த பெயரெல்லாம் ’வேட்டை மன்னன்’ படம் ரிலீஸாகியிருந்தா முன்னாடியே கிடைச்சிருக்கும். அப்படி ஒரு வெயிட்டான ரோல். எனக்கு மட்டும் இல்ல, சிம்பு சாருக்கு, குரு சோமசுந்தரத்துக்குனு நிறைய பேருக்கு வெயிட்டான ரோல். சிம்பு ஏன் இந்தப் படத்தை மிஸ் பண்ணுனாருனு தெரியலை. அந்தக் கதையே ரொம்ப வித்தியாசமா இருக்கும். சிம்புவோட ஸ்டைலுக்கு தகுந்தமாதிரியான படம். அது வராம போனது எங்க எல்லாருக்கும் ஷாக்தான்.’’

’கபிஸ்கபா...’ பாடலில் லேடி கெட்டப் போட்டு பயங்கரமா டான்ஸ் ஆடியிருந்தீங்களே..?

’’நான் பேஸிக்கா டான்ஸர்தான். டால்பின் சிட்டியில பேஸ் மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடியிருக்கேன். எம்.ஜி.எம்.ல எட்டு வருஷமா டான்ஸ் ஆடியிருக்கேன். டான்ஸ் ஸ்கூல் வச்சு நிறைய ஷோக்களும் பண்ணியிருக்கேன். ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்ணுனதுக்கு அப்பறம் டான்ஸ் அதிகமா பண்ண முடியலை. ’கோலமாவு கோகிலா’ படத்தோட புரமோஷனுக்காக ஒரு பாட்டு பண்ணணும்னு கூப்பிட்டாங்க. சதீஸ்தான் அந்தப் பாட்டுக்கு கோரியோ பண்ணுனார். அவர் எனக்கு நல்ல பழக்கம். நார்மலா டான்ஸ் மூவ்மென்ட்ஸ் கொடுத்து ஆட வெச்சுட்டு இருந்தாங்க. திடீர்னு, ’இந்த டிரெஸ்ல போட்டுட்டு வந்து லேடி மாதிரி ஆடுங்க’னு சொன்னாங்க. என்னால முடியாதுனு சொல்லிட்டேன். அப்பறம் நெல்சன் சார் வந்து பண்ணச் சொன்னார். அவர் சொன்னதுக்காக அந்த டான்ஸை பண்ணினேன்; அப்பறம் ஏன்டா பண்ணினோம்னு ஃபீலும் பண்ணினேன்.’’

 

 

படத்தோட இரண்டாவது பாதியில் டோனியோட சீன்ஸ் ரொம்ப குறைவா இருந்ததா படம் பார்த்தவங்க ஃபீல் பண்றாங்க. உங்களோட டெலிட்டடு சீன்ஸ் வருமா..?

’’அது நிறைய இருக்கு. இன்னும் சில நாள்ல அதை ரிலீஸ் பண்ணுவாங்க. அதைப் பார்த்தா இன்னும் என்ஜாய் பண்ணுவீங்க. எங்க கேங்ஸ்டர் டீமோட சேர்ந்து காமெடி பண்ணுனது; யோகிபாபுவோட சேர்ந்து நடிச்ச சீன்னு நிறைய நல்ல சீன்கள் டெலிட்டடு லிஸ்ட்டில் இருக்கு.’’

வெயிட்டிங் மாமே...


டிரெண்டிங் @ விகடன்