வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:51 (07/12/2018)

"18 கிலோ குறைத்த ‘ஜெயம்’ ரவி..!’’ - ‘முகேஷ் கோமாளி’ சஸ்பென்ஸ்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ப்ரதீப் பேட்டி.

டிசம்பர் 21ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது `ஜெயம்’ ரவியின்  23வது படமான `அடங்க மறு’. தனது 24வது படத்தை பிரதீப் என்கிற புதுமுக இயக்குநரோடு ஆரம்பித்திருக்கிறார், `ஜெயம்’ ரவி. இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல் என இயக்குநர் பிரதீப்பிடம் கேட்டோம்.

பிரதீப் இயக்குநர் ஆன கதை..?

``நான் நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கேன். என்னுடைய குறும்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகவும் சில போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கு. அந்தக் குறும்படங்கள்தான் என்னை நிறைய தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தியது. அப்படி நான் ஐசரி கணேசன் சார்கிட்ட சொன்ன கதை பிடிச்சிருந்ததாலும், இந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறும்னு அவருக்கு நம்பிக்கை இருந்ததாலும், என்னை நம்பி இந்தப் படத்தைக் கொடுத்தார்.’’

ஜெயம் ரவி

`ஜெயம்’ ரவிக்கு இது எப்படிப்பட்ட படமாக இருக்கும்..?

`` `ஜெயம்’ படத்திலிருந்து ’அடங்கமறு’ படம் வரைக்கும் ரவி சார் நிறைய படங்கள் பண்ணிட்டார்; பல ரோல்கள் பண்ணிட்டார். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் அவருக்கு 8 கெட்டப்ஸ். அதில் ஒரு கெட்டப்புக்காக 18 கிலோ எடை குறைச்சிருக்கார். முதலில் ஏதாவது க்ராபிக்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னேன். அவர்தான், `இல்ல... இதை நானே பண்றேன்’னு சொன்னார். இந்த லுக் வெளியில வரும் போது எல்லாருக்குமே ஆச்சர்யமா இருக்கும். படம் முழுக்கவே காமெடிதான்; ரொம்ப ஈடுபாடோட வொர்க் பண்ணிட்டு இருக்கார்.’’

காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டேனு ரெண்டு ஹீரோயின்ஸ் இருக்காங்களே... அவங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்குமா..?

``கண்டிப்பா இருக்கும். சும்மா வந்தாங்க; ஹீரோவுக்குப் பக்கத்துல நின்னாங்கனு இல்லாம கதையை நகர்த்துறதுக்கு இந்தக் கதாபாத்திரங்கள் முக்கியமானதா இருக்கும். படத்தில் பாடல்களே இல்லை; அதனால கதாநாயகிகளுக்கு அதிக காட்சிகள் இருக்கும்.’’

காஜல்

வேற யாரெல்லாம் நடிக்கிறாங்க..?

``கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பொன்னம்பலம், `டெம்பிள் மங்கி’ சாரா, `ரீல் அந்துப்போச்சு’ ஆர்.ஜே.ஆனந்தினு நிறைய பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க.’’

படத்தோட டைட்டில் `நான்தான் முகேஷ்’ஷா இல்ல `கோமாளி’யா? நிறைய டாக் போயிட்டு இருக்கே..?

``இந்தப் படத்தோட கதையை எழுதும் போது `நான்தான் முகேஷ்’னு டைட்டில் வெச்சேன். அப்பறம் அது நெகட்டிவ்வா இருக்கும்னு நிறைய பேர் ஃபீல் பண்ணுனாங்க. இப்போ ஷூட்டிங் போறனால `கோமாளி’னு சும்மா வெச்சிருக்கோம். ஆனால், அது ஃபைனல் கிடையாது. இன்னும் படத்தோட பெயரை ஃபைனல் பண்ணலை; ஃபைனலானதும் அறிவிப்பு வரும். ஆனால், கேட்டதும் சிரிப்பு வர மாதிரி ஒரு பெயர்தான் எங்க படத்தோட டைட்டிலா இருக்கும்.’’

யார்கிட்டேயும் உதவி இயக்குநராக வேலை பார்க்காததால பெரிய நடிகர்களை வேலை வாங்குறதுல சிரமங்கள் இருக்குதா..?

``முதலில் நடிகர் - நடிகைகள்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாம இருந்தேன். கதை டிஸ்கஷனிலிருந்து `ஜெயம்’ ரவி சார் என்கூட இருந்தனால, அவர்கிட்ட வேலை வாங்கிறதுல எனக்கு சிரமம் இல்லை. மற்ற நடிகை - நடிகர்களை நான் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் பார்த்தேன். அவங்ககிட்ட எப்படி வேலை வாங்குறதுனு கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு. போகப் போக அதுவும் பழகிடுச்சு. இப்போ படத்தோட ரெண்டு ஷெடியூல் ஷூட்டிங் முடிஞ்சு, ப்ரேக் விட்டிருக்கோம். இன்னும் ரெண்டு ஷெடியூல் ஷூட்டிங் போகணும்.’’


டிரெண்டிங் @ விகடன்