Published:Updated:

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

அலாவுதின் ஹுசைன்
``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்
``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

`` `குலேபகாவலி’ படம் முடிஞ்சவுடனே நயன்தாரா மேமுக்கு ஒரு ஹாரர் படம் பண்ணலாம்னு சொன்னார் தயாரிப்பாளர் ராஜேஷ். அவரால உருவானதுதான் `ஐரா.’ இது ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லரா சொல்லியிருக்கோம். தமிழ் சினிமாவுல பேய்கிட்ட மாட்டிக்கிட்டவங்களைப் பத்திதான் படம் வந்திருக்கு. இது, ஒரு பேய் பண்ற சில விஷயங்களை ஏன் பண்ணுதுனு பயப்படுற மாதிரியும் பரிதாபப்படுற மாதிரியும் சொல்லியிருக்கோம்’’ எனத் தனது இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவரயிருக்கும் `ஐரா’ பற்றி நம்மிடம் பேசினார் இயக்குநர் சர்ஜூன். 

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

``நயன்தாரா எப்படிப் பண்ணியிருக்காங்க?’’ 

``நயன்தாரா மேடம். யமுனா, பவானினு ரெண்டு கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்க. முதல்ல வேற ஒருத்தர் நடிக்கிறதா இருந்த பவானி கதாபாத்திரத்திலேயும் அவங்க நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சோம். இதுவரைக்கும் அவங்க டபுள் ஆக்‌ஷன் பண்ணதே இல்லங்குறதனால முதல்ல யோசிச்சாங்க. மேலும், பவானி மாதிரி ஒரு கேரக்டர் அவங்களுக்கு ரொம்பப் புதுசு. இதுல, வழக்கமான நயன்தாராவா இல்லாம, ரொம்ப வித்தியாசமா பண்ணியிருக்காங்க. நான் எழுதுன ரெண்டு கதாபாத்திரத்தில அவங்க பண்ண பவானி கதாபாத்திரம் ரொம்ப பிடிச்ச ஒண்ணு.’’ 

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

``பவானி கேரக்டரின் புகைப்படங்கள் கறுப்பு வெள்ளையில இருக்கே, பீரியட் ஃபிலிமா இது?’’

``90-களில் பிறந்த ஒரு குழந்தை 2019 வரை வாழ்க்கையில என்னென்ன விஷயங்களைச் சந்திக்கிறாங்கனு கதை நகரும். அதுல எமோஷன்ஸ் அதிகமா இருக்கும். ஃபிளாஷ்பேக் காட்சியை கறுப்பு - வெள்ளையில் சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சு. சத்யஜித் ரே படங்களில் கறுப்பு - வெள்ளைக் காட்சிகளில் அவ்வளவு எமோஷன்ஸ் இருக்கும். `இந்தக் கறுப்பு - வெள்ளை கான்செப்ட்ல நீங்க உறுதியா இருக்கீங்களா, மாறமாட்டீங்களே? அப்பதான் நான் பவானி கேரக்டர் பண்ணுவே’னு கண்டிஷன் வேற போட்டாங்க நயன்தாரா. நான் கண்டிப்பா மாத்த மாட்டேன்னு சொன்னேன். அந்த வார்த்தைக்காகத்தான் அந்தக் கேரக்டரையும் நயன்தாரா மேடமே பண்றதா சொன்னாங்க.’’ 

``படத்தின் மற்ற கேரக்டர்கள்?’’

``அமுதன் என்ற கேரக்டர்ல கலையரசன் நடிச்சிருக்கார். படம் முழுக்கப் பயணிக்கிற அவரோட கேரக்டர் சுவாரஸ்யமா இருக்கும். `மருது’ படத்துல நடிச்ச கொளப்புள்ளி லீலா பாட்டி நடிச்சிருக்காங்க. காமெடியனா யோகி பாபு இருக்கார். இன்னொரு முக்கியமான கேரக்டர்ல ஜெயப்பிரகாஷ் சார் நடிச்சிருக்கார். படத்துல மொத்தமே நான்கைந்து கேரக்டர்கள்தான். மொத்தப் படமும் பவானி, யமுனா கேரக்டர்களைச் சுற்றியே நகரும்.’’ 

`` `மா’, `ஐரா’ படங்கள்ல பெண் கதாசிரியர் கதை திரைக்கதை எழுதியிருக்காங்க. இரண்டாவது படத்துலையே ஒரு இயக்குநர் இப்படிப் பண்றது புதுசா இருக்கு?’’

``இயக்கம் வேற, கதை எழுதுவது வேற. ஒரு கதை திரைக்கதை வடிவுல வந்த பிறகு, அதை எப்படிப் படமாக்கினால் நல்லா இருக்கும், அதுக்கு என்னென்ன வேலை ஏற்பாடுகள் செய்யணும், அதுக்கேத்தமாதிரி நடிகர்கள்கிட்ட நடிப்பு வாங்கணும். இப்படி இயக்குநர் வேலை வேறமாதிரியான ஒரு கோணம் உடையது. இந்தப் படத்துல நான் வசனம், இயக்கம் மட்டும் கவனிச்சிருக்கேன். பிரியங்கா திரைக்கதை எழுதியிருக்காங்க, கதை ரெண்டு பேரும் சேர்ந்து எழுதியிருக்கோம். தமிழ் சினிமாவுல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே ஒரே ஆளு பண்ணணுங்கிற கட்டாயம் இருக்கு. நல்ல கதைகள் எழுதிக் கொடுத்துட்டே இருந்தா நான் எடுத்துட்டே இருப்பேன்.’’ 

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

``பவானி, யமுனா... எந்தக் கேரக்டர்ல நயன்தாரா கச்சிதமா பொருந்தினாங்க?’’ 

``கண்டிப்பா, பவானிதான்! யமுனா, ஒரு தைரியமான பொண்ணு. பவானி, அதுக்கு நேரெதிர். இதை அவங்க வித்தியாசப்படுத்தி நடிச்சவிதம், எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பல இடங்கள்ல நானும், ஒளிப்பதிவாளர் சுதர்சனும் நயன்தாரா நடிப்பைப் பார்த்து பிரமிச்சுப்போனோம். ஒரு காட்சியில ரெண்டு கேரக்டரும் ஒரே இடத்துல இருப்பாங்க. பவானி, யமுனாவைவிடக் குள்ளமா இருப்பாங்க. ரெண்டு கேரக்டரிலும் நயன்தாராவைப் பார்க்க அவ்ளோ ஆச்சர்யமா இருக்கும். நயன்தாரா, பேயா நம்மளைப் பயப்படவும் வைப்பாங்க, பவானியா நம்மளை பரிதாப்படவும் வைப்பாங்க.’’ 

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

``புது இயக்குநரா, படத்துல நடிச்ச சீனியர் நட்சத்திரங்களால உங்க வேலைகளில் எதுவும் குறுக்கீடுகளை சந்திச்சீங்களா?’’ 

``நாம சினிமாவைப் படிச்சுட்டு வர்றோம், இல்லைனா ஒண்ணு ரெண்டு படங்களில் வேலை பார்த்து கத்துக்கிட்டு வர்றோம். சீனியர் நடிகர்கள் சினிமாவுல பல வருடமா இருக்காங்க. அவங்க ஏதாச்சும் சொன்னா, அதை நான் ஸ்கிப் பண்ணமாட்டேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காம போறதும் இயக்குநரோட நம்பிக்கை சார்ந்தது. என் முதல் படத்துல சத்யராஜ் சாரை இயக்கினேன். அப்போ, அவர் `படத்துல இதெல்லாம் இருந்தா, நல்லா இருக்கும்’னு சொல்வார். எனக்கும் அது பிடிச்சிருந்தா, வெச்சுக்கப்போறேன். இல்லைனா விட்ருவேன். அவ்ளோதான். சில இடங்கள்ல தயாரிப்பாளர் ஈடுபாடு ஜாஸ்தியா இருக்கும்னு சொல்வாங்க, இங்க தயாரிப்பாளர் ராஜேஷ் படத்தோட அவுட்புட்ல நம்பிக்கை வச்சிருந்தார். எந்த ஒரு தலையீடும் செய்யல. எங்களை நம்புனதுக்கு எங்கக்குழு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கு. இதுல நயன்தாரா மேடமும் அவங்க கருத்துகளைச் சொல்வாங்க. ஆக்சுவலா, நயன்தாரா மேடமும் ஒரு நல்ல இயக்குநர்னுதான் நான் சொல்வேன். சிலசமயம் நான் என்ன நினைக்கிறேனோ, அதை அப்படியே அவங்களும் சொல்வாங்க. `இந்தக் காட்சியை இந்த இடத்துல கட் பண்ணா செம்மயா இருக்கும்’னு எடிட்டிங் வெர்ஷனே அவங்க மனசுல ஓடும்.’’     

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

`` `எச்சரிக்கை’னு ஒரு படம் எடுத்துதற்குப் பிறகு, கௌதம் மேனன் கேட்டதுக்காக ஒரு குறும்படம் எடுக்குறீங்க, தயாரிப்பாளர் சொன்னதுக்காக ஒரு படம் எடுக்குறீங்க. இதன் பின்னணி என்ன?’’

கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். வளர்ந்து வர்ற சமயத்துல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கேட்கிற படங்களைத்தான் என்னால பண்ண முடியும். நான் ஒரு கதையை எழுதி, அதுக்கு ஒரு நடிகர் வருவார், தயாரிப்பாளர் வருவார்னு காத்திருக்க முடியாது. ஆறேழு படங்களுக்குப் பிறகு, என்னை மட்டுமே நம்பும்போது, நான் நினைச்ச மாதிரி படங்களைக் கொடுப்பேன்.’’

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

`` `லக்‌ஷ்மி’, `மா’ குறும்படங்களும் சரி, `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, `ஐரா’ படங்களும் சரி... எல்லாமே பெண் கதாநாயகிகள், அவர்களை மையப்படுத்திய கதைகளாவே இருக்கே?’’ 

``இதுல `லக்‌ஷ்மி’ குறும்படம் மட்டும்தான் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதணும்னு நினைச்சு எழுதுன கதை. மத்ததெல்லாம் யதார்த்தமா நடந்தது. கௌதம் மேனன் சார் `லக்‌ஷ்மி’யைப் பார்த்துட்டு, `எனக்கு இதேமாதிரி சென்சிட்டிவான விஷயத்தைப் பேசுற ஒரு கதை வேணும்’னு சொன்னார். அதுதான், `மா’ குறும்படம். `லக்‌ஷ்மி’யை எடுக்கும்போது, அது இவ்ளோ பெரிய சர்ச்சையை, பரபரப்பைக் கொடுக்கும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா, `மா’ எழுதும்போதே `லக்‌ஷ்மி’ மாதிரி டாபிக்கல் ஆகணும்னுதான் எடுத்தோம். அதுதான், எனக்கு `ஐரா’ வாய்ப்பைக் கொடுத்தது. நயன்தாரா மேடமுக்கும் `மா’ படத்துல நான் சொன்ன விஷயமும் சொல்லியிருக்க விதமும் பிடிச்சிருந்தது.’’

``பெண்களை மையப்படுத்திய படங்கள் பேய்ப்படங்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்..!’’ - `ஐரா’ இயக்குநர் சர்ஜூன்

``தமிழ் சினிமாவுல பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள் பெரும்பாலும் பேய்ப்படங்களாக இருக்கக் காரணம் என்ன?’’

``இங்க இருக்க வணிகம்தான் காரணம். ஹீரோக்கள சுற்றியே அமைஞ்ச படங்கள பார்த்து வளர்ந்திருக்கோம். நமக்கு கதாநாயகிகள மையமா வச்சு படங்கள் ஏன் பாக்கணும்னு ஒரு கேள்வியிருக்கும். இங்க ஆடியன்ஸ தியேட்டருக்கு வர வைக்குற அளவுக்கு பிரபலமான கதாநாயகிகளும் சிலர்தான். அவங்க இந்தமாதிரி ஜானர்கள்ல படம் பண்ணும்போது நிறைய ஆடியன்ஸ் வர்ற வாய்ப்புகள் இருக்கு. ஒரு சாதாரணக் கதைக்கு அதுக்கான சாத்தியக்கூறுகள் கம்மி.’’

``அடுத்த படம்?’’

``அடுத்த படம் கண்டிப்பா ஒரு ஹீரோ கதையா இருக்கும். கொஞ்சநாள் இந்தப் பெண்ணிய இயக்குநர் முத்திரைல இருந்து வெளிய வருவோம்.’’ 

“சரி, `ஐரா’ பத்திச் சொல்லுங்க, ஐராவதம் கேள்விப்பட்டிருக்கோம்... அதென்ன ஐரா?” 

“ ‘லக்‌ஷ்மி’, ‘மா’ குறும்படங்களுக்கு முன், சர்ஜுன் யார்?” 

“படத்தின் பாடல்களும் வரிகளில் இடம்பெற்ற சில வார்த்தைகளும் வித்தியாசமா இருக்கே?” 

அலாவுதின் ஹுசைன்