Published:Updated:

```ப்ரோ' சிவகார்த்திகேயன், `கேர்ஃபுல்' கணவர், `ஷாக்' ராதிகா, `ம்யூட்' நயன்தாரா!" - `எருமசாணி' ஹரிஜா

பிர்தோஸ் . அ

'எருமசாணி' ஹரிஜா, சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர்.லோக்கல்' படத்தில் நடித்திருக்கிறார்.

```ப்ரோ' சிவகார்த்திகேயன், `கேர்ஃபுல்' கணவர், `ஷாக்' ராதிகா, `ம்யூட்' நயன்தாரா!" - `எருமசாணி' ஹரிஜா
```ப்ரோ' சிவகார்த்திகேயன், `கேர்ஃபுல்' கணவர், `ஷாக்' ராதிகா, `ம்யூட்' நயன்தாரா!" - `எருமசாணி' ஹரிஜா

'எருமசாணி' யூடியூப் சேனலின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. சமீபத்தில் திருமணம் முடித்திருக்கும் இவர், ராஜேஷ் இயக்கியிருக்கும் 'மிஸ்டர்.லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயனுக்குத் தங்கையாக நடித்திருக்கிறார். இதுகுறித்து, ஹரிஜாவிடம் பேசினேன். 

```ப்ரோ' சிவகார்த்திகேயன், `கேர்ஃபுல்' கணவர், `ஷாக்' ராதிகா, `ம்யூட்' நயன்தாரா!" - `எருமசாணி' ஹரிஜா

''திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டிருக்கு. சந்தோஷமா இருக்கேன். இதுக்கு முன்னால நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனா, ஏதோ காரணத்துனால தவிர்த்துட்டேன். நல்ல என்டர்டெயின்மென்ட் படமா இருந்தா, அதுல நடிக்கலாம்னு இருந்தேன். அப்போதான், 'மிஸ்டர்.லோக்கல்' பட வாய்ப்பு வந்தது. கதையைக் கேட்டதும் பிடிச்சுப் போச்சு. இதுல நான் சிவகார்த்திகேயன் தங்கச்சியா வர்றேன். ராஜேஷ் சார் படங்கள் எல்லாமே குடும்பத்தோடு சந்தோஷமா பார்த்து ரசிக்கிற படமாவே இருக்கும். அதனால, டபுள் ஓகே சொல்லிட்டேன். இந்தப் படத்துல கமிட் ஆனதுக்கு, வீட்டுல இருக்கிறவங்களும் சந்தோஷப் பட்டாங்க. முக்கியமா, என் கணவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். எனக்குப் பெரிய சப்போர்ட் அவர்தான்.  

அதேமாதிரி, 'எருமசாணி' டீம் எப்போவுமே எனக்கு சப்போர்ட். விஜய்யும் இப்போ பல படங்கள்ல நடிச்சிருக்கார். நல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வருது. என்னைவிட விஜய்தான் பிஸியா இருக்கார். எங்களைத் தேடி வர்ற ஸ்க்ரிப்ட்ஸ் பற்றி டிஸ்கஷன் பண்ணிப்போம். 'எருமசாணி' டீம் எல்லோரும் சேர்ந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'ங்கிற படம் பண்ணியிருக்கோம். தவிர, அதர்வா, ஹன்சிகா நடிச்சிருக்கிற '100' படத்துல ஒரு ரோல் பண்ணியிருக்கேன். பாசிட்டிவான கேரக்டர்கள்ல நடிக்கிறதுதான் என் ஆசை" என்றவர், தொடர்ந்தார்.

```ப்ரோ' சிவகார்த்திகேயன், `கேர்ஃபுல்' கணவர், `ஷாக்' ராதிகா, `ம்யூட்' நயன்தாரா!" - `எருமசாணி' ஹரிஜா

"'மிஸ்டர்.லோக்கல்' படத்தைப் பொறுத்தவரை நான் ஜூனியர் ஆர்டிஸ்ட். நடிச்சிருக்கிற எல்லோரும் சீனியர்ஸ். ராதிகா, நயன்தாரா மேடம், சிவா ப்ரோ... இப்படிப் பல நல்ல ஆர்ட்டிஸ்ட்கூட வொர்க் பண்ணது சந்தோஷம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறப்போ கொஞ்சம் தயக்கம் இருந்தது. அதேசமயம் எக்ஸைட்மென்ட் அதிகமா இருந்தது. என்னோட முதல்நாள் ஷூட்டிங்ல ராதிகா மேடம் நடிக்கிறதைப் பார்த்து வாயடைச்சுப் போயிட்டேன். அவங்க பேசுறதைக் கேட்டு, நான் பேச வேண்டிய வசனங்களை மறந்தேன். ராதிகா மேடம் ரொம்ப போல்டான மனுஷி. நல்ல தயாரிப்பாளர். அவங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஸ்பாட்ல ஒரு அம்மா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தா, எனக்கு செம ஜாலியா இருக்கும். 

படத்துல நயன்தாரா மேடம்கூட எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் கம்மி. அவங்ககூட மூணு சீன்ல மட்டும்தான் நடிச்சேன். அதனால, அவங்ககூட பழகுற வாய்ப்பு பெருசா கிடைக்கல. ஆனா, அவங்களைப் பற்றி புகழ்ந்துபேச வார்த்தைகள் பத்தாது. அவங்களப்பத்தி என்ன கேட்டாலும் 'ம்யூட்'தான். அப்படி ஒரு பொண்ணு, நயன்தாரா மேடம். சிவகார்த்திகேயன் அண்ணா நம்ம வீட்டுப் பையன் மாதிரிதான். படத்துல அவருக்குத் தங்கச்சியா நடிச்சிருக்கேன். நிஜத்துல அவரை ஒரு அண்ணனாதான் கூப்பிடுறேன். யூடியூப்ல எங்க 'எருமசாணி' சேனலில் வந்த பல வீடியோக்களை அவர் பார்த்திருக்கார். இதை அவரே சொன்னார். நிறைய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகிட்டார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. நம்ம வேலைகளையும் நோட் பண்ணி ஒருத்தர் பாராட்டுனா, அதைவிட சந்தோஷம் வேறென்ன? படத்துல எனக்கும், சிவா அண்ணாவுக்கும் இடையே பாசம், சேட்டைகள் இவையெல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும். ரொம்ப சுட்டிப் பொண்ணா நடிச்சிருக்கேன்" என்று முடித்தார் ஹரிஜா. 

Vikatan

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..