இறுதி கட்டப் படப்பிடிப்பில் அஜீத்! | அஜீத், விஷ்ணுவர்தன்

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (05/02/2013)

கடைசி தொடர்பு:11:08 (15/10/2015)

இறுதி கட்டப் படப்பிடிப்பில் அஜீத்!

அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் தயாரிப்பு பணிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 7 மாதங்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் பெயர், புகைப்படங்கள் போன்ற எதுவுமே வெளிவராமல் பாதுகாத்து வருகிறார்கள்.

சென்னை, மும்பை, பெங்களூரு என தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்க இருக்கிறது.

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. பில்லா படத்தினைத் தொடர்ந்து அஜித் - விஷ்ணுவர்தன் இணைவதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் குறித்து விஷ்ணுவர்தன் தனது டிவிட்டர் இணையத்தில் " எனது படத்தினைப் பற்றியும், தலைப்பு என்ன என்பது குறித்தும் எனக்கு தெரிவிக்க ஆசை தான். ஆனால் தற்போது கூறுவது மிகவும் சீக்கிரமாக தெரிகிறது.

தயாரிப்பாளர் தான் படத்தின் தலைப்பை வெளியிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சி. ஆகையால் படத்தின் தலைப்பை விரைவில் கூறுகிறேன். " என்று கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்