ப்ரியாமணியின் ஆசை!

பருத்தி வீரன் படத்தில் முத்தழகு பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது பாராட்டு, தேசிய விருது வென்றாலும் அதற்கு பிறகு ப்ரியாமணிக்கு போதுமானா வரவேற்பு கிடைக்கவில்லை.

தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த ப்ரியாமணி, அங்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்தார். இப்போது தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு பழைய நிலைமையில் இல்லை.

தமிழ், தெலுங்கு படங்கள் கைவசம் இல்லாமல் போனாலும், அம்மணி இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வரும் CHENNAI EXPRESS படத்தில் ஒரு குத்துப்பாடல் இருக்கிறது. அப்படத்தில் தமிழ், தெலுங்கு படங்களின் முன்னணி நாயகி யாராவது ஆடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியது படக்குழு.

நயன்தாராவை முதலில் அணுகியது. குத்துப்பாட்டில் எல்லாம் ஆடுவதாக இல்லை என்று விலகிவிட்டார் நயன். அவ்வாய்ப்பை தட்டி பறித்து விட்டாராம் ப்ரியாமணி. விரைவிலேயே ஷாருக்கானுடன் குத்துப்பாட்டில்  ஆட இருக்கிறார்.

அதுமட்டுமன்றி படையாப்பா படத்தில் இருக்கும் நீலாம்பரி போன்ற வேடத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் ப்ரியாமணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!