Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

'அப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்!

 ''காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?''

''எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''

''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''

''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''

''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''

''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''

''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''

''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''

''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''

''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''

''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''

'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''

''உங்க ரசிகர்கள் பற்றி..?''

''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''

'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''

''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''

''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''

''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''

''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  

''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''

''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''

''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''

''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''

''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''

''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''

''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''

''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''

''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''

''நீங்க நல்லவரா... கெட்டவரா?''

''அது எனக்கே தெரியலையே!'' 

க.ராஜீவ்காந்தி, படங்கள் : ஜெ.தான்யராஜு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்