நயன்தாரா, சிம்பு, தனுஷ் மற்றும் ஹன்சிகா! | ஹன்சிகா

வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (29/05/2013)

கடைசி தொடர்பு:16:38 (29/05/2013)

நயன்தாரா, சிம்பு, தனுஷ் மற்றும் ஹன்சிகா!

செம உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. ஒரே சமயத்தில் ஆறு படங்கள். இன்னொரு பக்கம், நடிகை என்பதைத் தாண்டி... ஹன்சிகாவின் மறுபக்கம் மிகவும் ஈரமானது.    

''ரொம்ப ரகசியமாவே வெச்சிருக்கீங்களே... நீங்க மத்தவங்களுக்குப் பண்ற உதவிகளைப் பத்தி இப்பவாவது சொல்லலாமே?''

''என் அம்மா ஒரு டாக்டர். ஃபீஸ் கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவச ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. சின்ன வயசுல இருந்தே ஆசிரமங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் அம்மா என்னை அழைச்சிட்டுப் போவாங்க. 'மத்தவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணணும்’னு அவங்க சொல்லிச் சொல்லி வளர்த்தது என் மனசுல பதிஞ்சிருச்சு. நான் சம்பாதிக்க ஆரம்பிச் சதும் அம்மா மாதிரி என்னால முடிஞ்ச அளவுக்கு நிறையப் பேருக்கு உதவி பண்ணணும்னு நினைச்சேன். அதான் 22 குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்கவைக்கிறேன். அந்த 22 குழந்தைகளுக்கும் ஸ்கூல் -டியூஷன் ஃபீஸ், யூனிஃபார்ம், விளையாட்டுப் பொருட்கள், தனித் திறமையை வளர்க்கும் பயிற்சிகள்னு எல்லாத்துக்கும் ஆகும் செலவுகளை நான் பார்த்துக்கிறேன். ரெண்டு நாள் ஃப்ரீயா இருந்தாக்கூட மும்பைக்குப் பறந்துபோய் அவங்களோடதான் நேரம் செலவழிப்பேன். என் மனத் திருப்திக்காக மட்டுமே இதைச் செய்றேன். இப்போ பிரஸ்ட் கேன்சரால் பாதிக் கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏத்துக்கிட்டேன். முதியோர்களுக்கான ஒரு ஹோம் கட்டணும்னு ஆசை இருக்கு.''

''ரொம்ப நல்ல விஷயம். இதே மாதிரி சினிமாவில் என்ன லட்சியம்?''

''பத்து வருஷம் கழிச்சும் என் குடும்பமும் ரசிகர்களும் என் மேல நல்ல அபிப்ராயத்துடன் இருக்கணும். ஹன்சிகா ஒரு நல்ல பொண்ணு. எதையும் சரியாத்தான் பண்ணுவானு என்னைச் சுத்தி இருக்கிறவங்க நம்பணும். அது போதும் எனக்கு!''

''நீங்க இப்படிச் சொல்றீங்க... ஆனா, தன் வாய்ப்புகளை நோட் பண்ணி கேட்ச் பண்ணிடுறீங்கனு நயன்தாரா உங்க மேல் கோபத்துல இருக்காங்களாமே?''

''சான்ஸே இல்லை. நயன்தாரா ரொம்பத் தைரியசாலினு கேள்விப்பட்டிருக்கேன். என் மேல் அப்படி எதுவும் கோபம் இருந்தா, அவங்க என்கிட்ட நேரடியாவே சொல்லியிருப்பாங்க!''

''சிம்பு சொன்னதால்தான் தனுஷ்கூட நடிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்களாம்... உண்மையா?''

''என்னைப் பத்தி எந்த வம்பும் இல்லைனு நான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனா, இவ்ளோ இருக்கா? தனுஷ§டன் நான் நடிக்க முடியா மல் போனதுக்கு கால்ஷீட் இல்லாததுதான் காரணம். தமிழ் சினிமாவில் என் முதல் ஃப்ரெண்ட், தனுஷ்தான். இன்னொரு வாய்ப்பு கிடைச்சா, நிச்சயம் தனுஷ§டன் நடிப்பேன். சிம்புவை எனக்கு நல்லாத் தெரியும். அப்படி ஒருத்தரைப் பத்தி இன்னொருத்தருக்கு பிரஷர் கொடுக்கிற பெர்சன் இல்லை அவர்!''

''நாளுக்கு நாள் அழகாகிட்டே போறீங்க... அந்த ரகசியம் என்ன?''

''தேங்க் யூ! எனக்குக் கோபமே வராது. நீங்க இப்போ திட்டினாக்கூட, நான் சிரிச்சுட்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையா இருப்பேன். அவ்ளோதான்!''

''ஹன்சிகாவுக்குக் கல்யாணம் எப்போ?''

'' 'நாலு பி.எம்.டபிள்யூ கார் இருக்கு. எல்லாம் உனக்காகத்தான்’, 'என்கிட்ட அஞ்சு ஃப்ளாட் இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் நீ தங்கு’னு விதவிதமா காதலை என்கிட்ட புரொபோஸ் பண்றாங்க. ஆனா, நான் யாரை யும் காதலிக்கலை. எனக்கு இப்போ 21 வயசுதான் ஆகுது. இன்னும் நிறைய வருஷம் இருக்கு என் கல்யாணத்துக்கு. என் குடும்பத்துக்கு ஏத்த மாதிரி, என் சொந்தக்காரங்கள்லாம் வாழ்த்துற மாதிரி எங்க கல்ச்சர்படிதான்என் கல்யாணம் நடக்கும்!''

க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்