“இவன் முத்துக்குமார்.... அவள் தாமரை!” | சிப்பாய், கெளதம் கார்த்திக், லெட்சுமி மேனன்

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (29/05/2013)

கடைசி தொடர்பு:16:40 (29/05/2013)

“இவன் முத்துக்குமார்.... அவள் தாமரை!”

சிலம்பாட்டம்’- டபுள் மீனிங் வசனங்களும் அடல்ட்ஸ் ஒன்லி காமெடிகளும் நிரம்பியதாக முதல் படத்தை இயக்கிய சரவணன், தனது 'சிப்பாய்’ படத்தின் மூலம் இளைஞர்களுக்குத் தேவையான மெசேஜுடன் வந்தி ருக்கிறார். ஏன் இந்த மாற்றம்..?

''அந்தச் சமயம் சினிமா டிரெண்ட் அப்படி இருந்தது. நான் ஒளிப்பதிவாளரா இருந்து இயக்குநர் ஆனவன். அதனால், நான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியல் சக்சஸ் முக்கியம்னு ஒரு பிரஷர் இருந்தது. அதுவும்போக சிம்புவும் பி, சி சென்டர் ஆடியன்ஸ்கிட்ட ரீச் பண்ண ஆசைப்பட்டார். அதனால இறங்கி அடிச்சோம். ஆனா, ஒரு இயக்குநரா நான் பண்ண ஆசைப்பட்டது வேற விதமான படம். இதோ இப்போ எனக்கு நிறைவான அங்கீகாரமா இருக்கும்னு நம்பிக்கை தந்தது 'சிப்பாய்’ ஸ்க்ரிப்ட். கௌதம் கார்த்திக்கும் லட்சுமி மேனனும் அசத்துறாங்க!''

''ஒரு ஒளிப்பதிவாளர் என்ற ஆங்கிள்ல சொல்லுங்க... கௌதம் கார்த்திக்... லட்சுமி மேனன்... ரெண்டு பேரின் ப்ளஸ் என்ன?''

''எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் திமிறும் உற்சாகத்தோட இருக்கார் கௌதம். சாகசம் விரும்பும் இளைஞர்களின் கச்சிதமான உதாரணம் இவர்தான். 'கோ... கெட்டர்’னு சொல்வாங்க... ஒரு சவால் அல்லது இலக் கைக் கொடுத்துட்டா, அதை எந்த சாக்கும் சொல்லாம எட்டிப் பிடிச்சிருவார். அது கௌதம் ஸ்பெஷல். படத்தில் ஒரு சின்ன போர்ஷனுக்கு டேப் டான்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு பேசிட்டு இருந்தோம். கௌதம் என்கிட்ட எதுவுமே கேட்டுக்கலை. மறுநாள்ல இருந்து டேப் டான்ஸ் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சுட்டார். அந்த எனர்ஜியும் இந்த வயசும் கௌதமுக்குப் பெரிய ப்ளஸ்.

லட்சுமி மேனன், தன் மேக்அப், காஸ்ட்யூம், பாடிலாங்குவேஜ் மூலமா மட்டுமே தன் கதாபாத்திரத்தை ஸ்கெட்ச் பண்ணிக்கிறது இல்லை. மனசையும் தன் கேரக்டருக்கு ஏத்த மாதிரி டியூன் பண்ணிக்குது. படத்துல உங்ககூடவே நாலஞ்சு பொண்ணுங்க சுத்திட்டே இருக்க மாட்டாங்க. வீரசந்தானம்தான் படம் முழுக்க உங்ககூட வருவார். வழக்கமான ஹீரோயின் ரோல் கிடையாதுனு சொல்லிட்டேன். எல்லாம் நல்லாக் கேட்டுட்டு ரெண்டு நாள் கழிச்சு என்கிட்ட, 'சார்... என் கேரக்டர்படி நான் எல்லாரையும் தோழர்னு கூப்பிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்க?’னு கேட்டாங்க. அசந்துட்டேன்!''

''பெரிய பட்ஜெட், மாஸ் ஹீரோ என எதுவும் இல்லாமலேயே அறிமுக இயக்குநர்கள் பளிச் பளிச்னு கவனம் கவர்றாங்க. சினிமா டிரெண்ட் மாறிட்டே வருதே?''  

''எந்த டிரெண்ட் மாறினாலும் சினிமாங்கிறது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்பதில் மட்டும் மாற்றமே இருக்காது. ஆனா, ஒவ்வொரு காட்சியிலும் சுவாரஸ்யம் இருந்தாதான் ரசிகர்களை ஈர்க்க முடியும்கிற கட்டாயம் இப்போ இருக்கு. அதில் கரெக்ட்டா இருப்பான் என் 'சிப்பாய்'! அப்படி இந்தப் படத்தில் விசேஷமா பல சம்பவங்கள் இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா... கௌதம் பாத்திரத்துக்கான ரோல் மாடல், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த முத்துக்குமார். லட்சுமி பாத்திரத்தின் ரோல்மாடல், கவிஞர் தாமரை. இதுவும் போக படத்தில் இன்னும் காத்திருக்கு ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்!'' 

கி.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்