நான் 100% பிஸினஸ்மேன்.: தயாரிப்பாளர் சி.வி.குமார். | சி.வி.குமார்

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (11/06/2013)

கடைசி தொடர்பு:18:57 (11/06/2013)

நான் 100% பிஸினஸ்மேன்.: தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் TREND SETTER _களாக இருப்பார்கள். ஆனால் இப்போது ஒரு தயாரிப்பாளர் ஒரு புதிய டிரண்டை உருவாக்கி வருகிறார். 'அட்டக்கத்தி', 'பீட்ஸா' மற்றும் 'சூதுகவ்வும்' என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த தயாரிப்பாளர் சி.வி. குமார், இப்போது நான்கு படங்களை தயாரித்துவருகிறார். அவருடனான பேட்டியிலிருந்து..

யார் சார் இந்த சி.வி.குமார்?

என் பேரு சி.விஜயகுமார். பி.காம் படிச்சுட்டு எங்களுடைய பிஸினஸை பார்த்துட்டுவந்தேன். எங்களுடையது டிராவல்ஸ் நிறுவனம் என்பதால் தமிழகத்தில் 7 இடங்களில் எங்களுக்கு அலுவலகம் இருக்கிறது. இந்த பிஸினஸுடன்  வேறு எதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று தோன்றிய போதுதான் மீடியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக புரடெக்ஷன் நிறுவனத்தை, 2011ம் ஆண்டு ஆரம்பித்தேன். மூன்று படங்களை முடித்து, நான்காவது படமான பீட்ஸா த வில்லா ஜூலை வாக்கில் ரீலிஸாகும்.

எப்போதுமே புதிய இயக்குனர்களையே அறிமுகப்படுத்துகிறீர்களே, இது கொஞ்சம் ரிஸ்க்தானே?

நான் ஏற்கெனவே சொன்னதுபோல நான் ஒரு பிஸினஸ்மேன், 100% பிஸினஸ் செய்வதற்காகதான் இங்கே வந்திருக்கிறேன். பிஸினஸ்மேன் என்பதால் ரிஸ்க் எடுப்பது எனக்கு பிடிக்கும். அதற்காக கேட்ட கதைகளை எல்லாம் நான் எடுக்கவில்லை. 40 ஸ்கிரிப்ட் படித்த பிறகுதான் ஒரு ஸ்கிரிப்டை முடிவு செய்கிறேன்.

எப்படி ஒரு ஸ்கிரிப்டை முடிவு செய்கிறீர்கள்?

மற்ற நகரங்களில் இருப்பவர்களுக்கு போல மதுரையில் இருப்பவர்களுக்கு சினிமாவை தவிர எந்த பொழுதுபோக்கும் கிடைக்காது. எத்தனையோ படங்களை 'பேக் டூ பேக்' பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம்தான் கைகொடுக்கிறது. மேலும், ஒரு ஸ்கிரிப்டை ரசிகனாக இருந்து பார்த்தாலே வெற்றியை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

ஷார்ட் பிலிம் எடுப்பவர்களுக்கே நீங்கள் வாய்ப்பு கொடுப்பதுபோல சொல்லப்படுகிறதே?

அப்படி ஏன் தோன்றுகிறதோ தெரியவில்லை. மேலும் ஷார்ட் பிலிம் எடுப்பதுமட்டும் சினிமாவுக்கு போதாது. ஆனால் ஷார்ட்பிலிம் எடுப்பவர்கள் சொந்தமாக பணத்தை எடுத்துவிட்டு வந்திருப்பதால், எப்படி செலவு செய்ய வேண்டும், சூட்டிங் ஸ்பாடில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

'அட்டக்கத்தி' ஆடியோ ரீலிஸ் வரைக்கும் உங்கள் அப்பா, அம்மாவுக்கு நீங்கள் தயாரிப்பாளர் என்பதே தெரியாதாமே?

ஆமாம், சினிமாவுக்கு வந்தால் பணம் போய்விடுமே என்று பயப்பட்டார்கள். இப்போது வெற்றி வந்துவிட்டாதால் பையன் கெட்டுப்போயிடுவானே என்று கவலைபடுகிறார்கள்.

ஏதாவது சுவாரஸ்யமான அனுபவங்கள்?

பீட்சா படத்தில் டார்ச் லைட் வைத்து எடுக்கலாம் என்று முடிவான பிறகு, எங்களுக்கு தேவையான இந்தியாவில் இல்லை. அந்த டார்ச் லைட்டை அமெரிக்காவில் இருந்து வர வைத்தோம். முதல் முறை பேட்டரியோடு வந்துவிட்டது. ஆனால், அந்த பேட்டரி சில நாட்களுக்குதான்.  பிறகு மீண்டும்  அமெரிக்காவில் இருந்து வாங்க வேண்டும். ஒரு முறை விஜய் சேதுபதி, அந்த லைட்டுடன் கீழே விழுந்துவிட்டார். ஸ்பாட்டில் உள்ள அனைவரும் போய் லைட் என்ன ஆனது என்றுதான் பார்த்தார்கள். 'நான் கீழே விழுந்திட்டேன், உங்களுக்கு லைட் முக்கியமா" என்று சேதுபதி கேட்க, உங்களுக்கு எதாவது என்றால் பக்கத்திலே ஆஸ்பெட்டல் இருக்கு, ஆனா லைட் போச்சுனா, அமெரிக்காவில் இருந்து வர 20 நாள் ஆகும், அதுவரை ஷூட்டிங் நிற்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

வாசுகார்த்தி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்